Pages

Monday, September 8, 2014

அருட்பெரும்ஜோதி இறைவனை எப்படி அறிந்து கொள்ளமுடியும் ? - ஒரு விசாரம் 8

  • விஜயகுமார் சு வள்ளலாரின் உபதேசங்களை மற்ற மார்கங்களோடு உரசிப்பார்த்து அவைகளில் வேறு விதமாக சொல்லப்பட்டுள்ள உண்மைகளை ஓகோ வள்ளலார் இதைத்தான் இப்படி விளக்கியிருக்கிறார் என நம்மை செழுமைப்படுத்தினால் அது ஞானவிருத்தி விசாரம்/////like
  • Hseija Ed Rian ஆபிரஹாமிய வேதத்தில் கிறிஸ்து தெய்வத்தின் மகன் என கூறி இருக்க அதே ஆபிரஹாமிய வேதத்தின் இசுலாம் வேதத்தில் தெய்வத்துக்கு மகன் மனைவி கிடையாது என சொல்லி இருப்பது ஏனோ? ரெண்டு ஏன் ரெண்டு விதமாக உள்ளது?..உண்மை ரெண்டாகவும் இருக்குமோ? Kirubanandan Palaniveluchamy
  • Hseija Ed Rian அப்படியென்றால் மகன் உள்ள தெய்வம் ஒன்று , மகன் இல்லாத தெய்வம் ஒன்று , அப்படியல்லவா இருக்கிறது?..இவை ரெண்டும் ஒரே தெய்வத்தை வழிபடுகின்றனர் எப்படி கண்டுபிடித்தீர்கள் ஐயா? அதே தெய்வத்தை தான் வள்ளலாரும் சொல்லி இருக்கின்றார் என எந்த அடிப்படியில் விவரிக்கின்றீர்கள் என அறிந்து கொள்ளலாமாKirubanandan Palaniveluchamy
  • Kirubanandan Palaniveluchamy ஐயா உலகத்தில் வெளிப்பட்ட எந்த வேதத்திலும் கடவுளிடமிருந்து வந்த உண்மையுமிருக்கிறது மனிதர்கள் கலந்துவிட்ட கற்பனையுமிருக்கிறது

    முழுக்க ஒதுக்கவும்கூடாது முழுக்க தூக்கிவைத்து ஆடவும்கூடாது

    முழுமையடையத பல வெளிப்பாடுகள் படிபடியாக பல இடங்களில் கடவுளிடமிருந்து வந்துகொண்டேதான் இருக்கின்றன இவைகளை விசாரம் செய்து நாம் அறிந்தவைகளை செழுமைப்படுத்துவதுதான் ஞானவிருத்தி நிறைஞானம் என்பது சகல கினறுகளையும் உணருவது குறை ஞானம் என்பது ஒரு கினறில் மட்டும் இருந்துகொண்டு கூச்சல் போட்டு கேட்டு புளகாங்கிதம் அடைவது

    வள்ளலார் சமரச வேதம் என்று 6 ம் திருமுறையில் உள்ளது இப்போது அதனை புரிந்துகொள்ளும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்று சொன்னாரே அது இதைப்புரிந்து கொள்ளும் காலத்தை பற்றியது அந்த காலம் இப்போது வந்திருக்கிறது
  • Indranx Avataram 1387. 
    பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
    பவனெறி இதுவரை பரவிய திதனால்
    சென்னெறி அறிந்திலர்!!! இறந்திறந் துலகோர்
    செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
    புன்னெறி தவிற்த்தொரு பொதுநெறி எனும்வான்
    புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
    தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

    என்ன இந்த பாடலுக்கு சொல்ல போகிறீர்கள்?
  • Indranx Avataram 1512.
    வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
    வேதாக மத்தின்விளைவறியீர் - சூதாகச்
    சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இவை.

    நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்?
  • Pothigaipriyan Vallalar இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்(note) உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச்(note) சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு - மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, "இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்" என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார்
  • Pothigaipriyan Vallalar கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை 
    கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை 
    விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம் 
    மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார்(note) ஆங்கே 
    அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே 
    அன்றிஒரு வாறேனும்(note) அளவுகண்டார் இலையே 
    துளக்கம்உறு சிற்றறிவால்(note) ஒருவாறென் றுரைத்தேன் 
    சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.
  • Indranx Avataram //உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்// 

    அருமை...
  • Indranx Avataram //ஒருவாறென் றுரைத்தேன் 
    சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.//
  • Indranx Avataram Ellam ondru endru solvathey muthalil periya kuttram! 

    Ulagam alangaaramageh pesikondu emathum varthey athu! 

    Ellam ondru endral, ellam muslim agenuma? christian agenuma? hindu agenuma? endru ketal, aver-aver tirumba aver-aver madham sarnthu thaan ooduvargel. Yhen ellarum ondru ondru nu soliketu thirumba palaiya katheykey pogirargel vaalnaalil?

    Ethum ondrillai. Ella Kadavulergelum aver-aver vezhigel'kutpatu aatral puriyirargel. 

    Ella Kadavulergelukkum "Orru Kadavul" undu, athey pathi thaan Suddha Sanmarkam pesikondu irukirathu. Please note this point of view. Tq.
  • Hseija Ed Rian அருமை...
  • Kirubanandan Palaniveluchamy புன்னெறி தவிற்த்தொரு பொதுநெறி எனும்வான்
    புத்தமு தருள்கின்ற

    பன்நெறிகளுக்கு மாற்றான சுத்த சன்மார்க்கத்தை கடைபிடி என்று சொனாலும் அது இதற்கு முந்தய அனைத்து நெறிகளுக்கும் பொதுவான நெறி என்றுதான் சொல்லியுள்ளார் 

    பொதுவான நெறி என்றால் அந்த நெறிகளில் விளங்கும் உண்மைகள் யாவற்றையும் கவர்ந்து கொண்ட நெறி என்பது அர்த்தம் . 

    அனைத்து நெறிகளும் பொய்யானது இதுமட்டும்தான் உண்மையானது என்று வள்ளலார் எங்கும் சொன்னதில்லை . அவை முழுமையற்றவை அல்லது போதுமானதில்லை என்றுதான் சொல்லியுள்ளார் 

    வள்ளலார் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு அவைகளின் உண்மைகளை ஈர்த்து சமரச சுத்த சன்மார்க்கத்தை கொடுத்து விட்டார் 

    அவர் அனைத்து மதங்களையும் புரிந்து கொண்டதுபோல நாமும் புரிந்துகொள்ள முயற்சிப்பது ஞானம் அதுவே சத்விசாரம் 

    அவர் புரிந்துகொண்ட சொன்னார் . ஆனால் நாமோ அனைத்து மதங்களையும் என்னவென்றே தெரியாமல் - உரசிப்பார்க்காமல் - விசாரம் செய்யாமல் வள்ளலார் சொல்லிவிட்டார் வள்ளலார் சொல்லிவிட்டார் என்று மட்டுமே சொல்லிக்கொண்டுள்ளோம் 

    நல்ல சீடன் குருவைப்போல மாறவேண்டும்
  • Hseija Ed Rian “புன்னெறி தவிர்த்து” என்பதின் பொருள்??/
  • Hseija Ed Rian பொது நெறி என்றால் அவியல் கிடையாது,, அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் மற்ரையதில் கொஞ்சம் எனவா கொள்கிறீர்கள்?...”பொதுநெறி” என்பது “வான் புத்தமுதருள்கின்ரதுவேயாம்”...அல்லாது கூட்ட கலப்பில் எடுத்து அரித்துகொள்வது இல்லை
  • Kirubanandan Palaniveluchamy பன் நெறிகளை தன்னகத்தே ஈர்த்துக்கொண்ட ஒரு பொது நெறியை முன்னேறியோர் கடைபிடிக்கும்போது அதில் எல்லோரது நெறியின் உண்மைகளை நாம் அங்கீகரிப்பதால் நம்மோடு அவர்கள் முரன்படமாட்டார்கள் . அதுதான் உலகை சமப்படுத்தும் சமரச வேதம் . வள்ளலாரது நெறி சுத்த சன்மார்க்கம் மட்டுமல்ல சமரச சுத்த சன்மார்க்கம்
  • Hseija Ed Rian சமரச ஷடாந்த சுத்த சன்மார்க்கம்......என்பது என விளக்கமாக சொல்லுங்கள்...”ஷடாந்த” என்பது என்னவோ?
  • Kirubanandan Palaniveluchamy இன்றைக்கு எல்லோரும் கடவுள் எங்களுக்கு மட்டும்தான் கொடுத்தார் என்றுதான் அடுத்த மதத்தை அழிக்க முற்படுகின்றார்கள் . அதில் இருந்து மாற்றான சமரச வேதத்தை வள்ளலார் கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவிட்டார் 

    அது அவர்களைப்போலவே மற்ற எல்லாம் பொய் விட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்வதல்ல அப்படி சொன்னால் அவர்களுக்கும் வள்ளலாருக்கும் என்ன வித்தியாசம் ?
  • Hseija Ed Rian அந்த சமரச வேதம் “ஆறாம் திருமுறை” என தானே நீங்கள் நம்புகிறீர்கள் ஐயா?..அல்லது வேறே இருக்கிறதா?
  • Kirubanandan Palaniveluchamy வள்ளலார் நெறியில் நாம் இன்னும் போதிய அளவில் முன்னேறவில்லை அப்படி முன்னேறினால் அவர் புரிந்துகொண்டதுபோல நாமும் அனைத்து நெறிகளையும் புரிந்து கொண்ட சமரச வேதத்திற்கு வருவோம் அதற்கான காலம் கனியவில்லை என்றே பெருமானும் சொல்லியுள்ளார்
  • Annamalai Sundara Murthi i learn many things from here thanks gentlemen
  • Indranx Avataram Engey iyya soliyular? Ningel paatuku soliyular soliyular endru puthu puthu visaiyam soliyulirgel, athu engey irunthu padichingel?
  • Hseija Ed Rian வள்ளலார் கொடுத்துவிட்டென் என சொல்லிய சமரச வேதம் எது ஐயா...ஆறாம் திருமுறை தானே?...அல்லது வேறு இருக்கிறதா?
  • Indranx Avataram //வள்ளலார் கொடுத்துவிட்டென் என சொல்லிய சமரச வேதம் எது ஐயா...ஆறாம் திருமுறை தானே?...அல்லது வேறு இருக்கிறதா?//

    Nichayam vera ila.
  • Indranx Avataram //அங்கீகரிப்பதால் நம்மோடு அவர்கள் முரன்படமாட்டார்கள் . //

    Aruliyal vera nilai kurikirathey ovvoru madhamum. Vaanavergel, Brahma nilai, Vishnu vezhi devargel, Magehwarar vezhi, Sathasivan, Rutra, Vinthu vezhi, Para vinthu vezhi, Natha vezhi, Paranatha vezhi, .... apdiyeh poguthu... 

    Natha vezhi = madha vezhi. 
    intha nilai pettravergel (vaanil nadapargel, iranthaverai elupargel, nooipinni thirpargel, ipdi pala siddhi seivargel)
  • Indranx Avataram 639.
    தன்னிக ரில்லாத் தலைவர்>>>>>>>என் றரற்றித் தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
    உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா ஒருதனிப் பெரும்பதி உவந்தே
    புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள் பொறுத்தருட் பூரண வடிவாய்
    என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரே?

    Kirubanandan Palaniveluchamy
    //அது அவர்களைப்போலவே மற்ற எல்லாம் பொய் விட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்வதல்ல அப்படி சொன்னால் அவர்களுக்கும் வள்ளலாருக்கும் என்ன வித்தியாசம் ?//

    Intha maari inum niraiya paadel undu, POI endreh neradiya sonna padelgelum undu. Innum serious'sa sonna GNANA SARIYAI parungel, ungel madham orunginaipu oodiyeh poirum. Ella madham'mum manithar uivatherku vazhi kaatavilai, athey Perubadesam kadavul pathi vilakam solgirar, periyaver endra peril enna sonargel madha thalaivergel endru. 

    First, Agaval, Thiru Arutpa, Urai Nadai ithu ellam padiyungel, piragu intha madha orunginaipu karuthey irukaathu ungelidam. 

    Tq.
  • Indranx Avataram 1549.
    குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
    கோணும்மனக் குரங்காலே நாணூகின்ற உலகீர்
    வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டிகிலேன் எனது
    மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
    பொறித்தம>>>>தம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
    புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
    செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
    சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.

    (மதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
    புகுதாதீர்)

    Ithu enna sir solvingeh? 

    Kirubanandan Palaniveluchamy
    //பொய் விட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்வதல்ல//
  • Hseija Ed Rian நண்பருக்கு கொஞ்சம் சாவகாசம் கொடுங்கள்..அவர் இனிமேல் சமரச வேதமான ஆறாம் திருமுறை கொஞ்சமாவது படித்து விட்டு தன் வருவார்...அல்லாம சமரச வேதத்தை பத்தி ஒண்ணும் சொல்லமாட்டர்.நான் கியாரண்டி
  • Kirubanandan Palaniveluchamy நண்பா அந்தப்பாடலில் மேற்கண்ட நிலைகளில் எல்லாம் தானே இருந்தேன் அதையும் பொறுத்து எனக்கு நன்னெறி காட்டினீர் என்றுதானே சொல்லியுள்ளார் 

    வள்ளல்ளார் அவைகளை கடந்து மேல் நிலை அடைந்தார் . அவரைப்போல சகலவற்றையும் உணர்ந்து கடந்தால் நாமும் ஒளி சரீரம் பெறலாம் . அப்படி இல்லாமல் வள்ளல் நெறிதான் பெரு நெறி என பெருமை மட்டுமே பேசிக்கொண்டு இதுவரை அவரைப்போல சகாக்கல்வியை ஒருவரும் கற்றுத்தேரவில்லை 

    வள்ளலாருக்கு பிறகு இத்தனை ஆண்டுகளில் ஏன் ஒருவர் கூட மரணமில்லா பெருவாழ்வு பெறவில்லை ?

    ஒருபேச்சுக்கு சொல்கிறேன் . ஒருவர் கூட அதில் தேறவில்லை என்றால் அது பொய்யானது என அர்த்தம் தரக்கூடியதுதானே .

    வள்ளலார் தேறினார் என சாட்சி சொல்கிறேன் .
  • Hseija Ed Rian அது உண்மை...
  • Kirubanandan Palaniveluchamy வள்ளலாரின் நெறியில் உள்ளோர் சரியாக அதை புரிந்துகொள்ளாமல் ; பெரிசு பெரிசு அப்படி சொல்லிவிட்டார் இப்படி சொல்லிவிட்டார் என அவரின் அனுபவங்களை மட்டுமே பெருமை பேசிக்கொண்டு இருக்கிறோம் 

    நீங்கள் காட்டுகிற பாடல் எல்லாம் அவர் அனுபவித்து உணர்ந்தது ஆனால் அவரைப்போல நாமும் அனுபவித்து உணரவில்லை .அதனால்தான் கற்றுத்தேராமல் உள்ளோம் 

    அவரின் அனுபவப்பாடலை பாடிவிடுவதால்மட்டும் நமக்கு அனுபவம் வராது 

    அவரைப்போல அனுபவம் பெறுவதுதான் விசாரம் - மாற்றுக்கருத்துகளோடு வள்ளலாரின் கருத்துகளை உரசிப்பார்ப்பதே விசாரம் 

    வள்ளலார் மீண்டு வரும்வரை இந்த விசாரத்தத்தைதான் செய்ய கட்டளை இட்டார்
  • Kirubanandan Palaniveluchamy நான் மீண்டும் சொல்கிறேன் . வள்ளலாரின் நெறியிலேயே நின்று கொண்டு மற்ற மத வேதங்களை உரசிப்பார்ப்பதே சத்விசாரம் 

    வல்லாரின் உபதேசங்கள் தவிர அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவரின் பாடல்களை மட்டும் விதவிதமாக அரைப்பதல்ல
  • Kirubanandan Palaniveluchamy மற்ற வேதங்களை ஆராய்வதால் அவைகளின் பின்னால் நாம் ஓடி விடப்போவதில்லை . ஆனால் வள்ளலாரைப்போல மேல்நிலை பெறுவோம்
  • Indranx Avataram //வள்ளலார் மீண்டு வரும்வரை இந்த விசாரத்தத்தைதான் செய்ய கட்டளை இட்டார்//

    Please konjam reference tarungel iyya. 

    //அவரின் அனுபவப்பாடலை பாடிவிடுவதால்மட்டும் நமக்கு அனுபவம் வராது//

    கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என் 
    எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற் 
    கலந்தான்என் >>>>>>>>>>பாட்டிற் கலந்தான் உயிரில் 
    கலந்தான் கருணை கலந்து. 

    பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே 
    >>>>>>பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே 
    கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி 
    கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால் 
    துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள் 
    சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென் 
    றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ 
    அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே. 

    Iyya ithuku enna solringeh 
    ( பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே )

    Nichayam ningelAgaval, Thiru Arutpa, Urai Nadai ithu ellam padika neram ilai endru terigirathu. Pothuva pesikondu irukingeh, orru fact Vallalar sonathageh iley, on above comment soningel (POI) endru solamaatar endru, atheyum naan kurippu koduthen, piragu inum solikiteh poringeh vallalar sonar-sonar endru aataram vendum. 

    Mattra maddham vedham urasi parpathil entha projanamum ileh, aanma labhathey petrukolla vendum endral, Peruman solvathey poll valvom. Veenkaalam kalipen endral, ella madham scripture million iruku, athey padithu varungel. Even, Vallal Peruman saiva sithantham kuda vhendam endru solitareh? athey enn ningel kuraviley? Inni namaku kaalam iley, Thavayu margam paroobagaram start panungeh iyya. Satvisaram piragu thaana naattam varum. Ippo antha madham intha madham urasi parthal vitu-vidungel. 

    Nandri.

    நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப 
    நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில் 
    ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே 
    இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ 
    >>>>>>>>பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே 
    பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன் 
    கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற 
    குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.
  • Kirubanandan Palaniveluchamy நான் தொடர்ந்து விசாரம் செய்து காட்டுகிறேன் 

    தனிப்ப்ரும் கருணையே கடவுள் என்றார் வள்ளலார் 

    அந்தக்கருனையே நேயம் என்கிறார் ஸ்ரீகிரிஷ்ணர் அந்த நேயத்தை யார் ஒருவன் உணர்ந்து உள்வாங்குகிரானோ அவனே ஞானத்தை பெறமுடியும் என்கிறது கீதை 

    இதையும் படித்துபார்த்தால் அதன் பெயர் சத்விசாரம் . ஆ ஆ எல்லாம் வள்ளலார் சொல்லிவிட்டார் என்றால் வெட்டிபெருமை 

    3 .ஞானம் மற்றும் நேயம் 

    கீதை 13 : 8 அடக்கம் , அத்துமீறாதிருத்தல் , சாத்வீகம் , சமாதானம் , எளிமை , குருவை அடுத்திருந்து கற்றுக்கொண்டே இருத்தல் , தூய்மை , தளராமை , ஆத்ம விழிப்பு 

    கீதை 13 : 9 ஐம்புலன்களையும் அடக்குதலில் தளராமை , சுயத்தை கடரும் மனநிலை இவைகளுடன் பிறப்பு , இறப்பு , முதுமை , நோய் , துன்பம் , களங்கம் ஆகியவைகளில் சாட்சியாக மட்டும் இருந்து கொண்டு 

    கீதை 13 : 1௦ பற்றுதலின்றி பட்டும்படாமல் குழந்தைகள் , மனைவி மற்றும் இதர பந்தங்களில் விடுபட்டு இருத்தல் ; விருப்பு வெறுப்புகளில் சமநிலை அடைதல் ; 

    கீதை 13 : 11 சதா ஆழ்ந்த யோகத்தில் நிலைக்க என்னை சரணடைந்த குருபக்தியும் ; தனித்தும் விழித்தும் ஜனத்திரளின் புகழில் பற்றின்றியும் 

    கீதை 13 : 12 ஆத்மாவில் விளையும் நித்தியானத்த போதத்தில் திளைத்தும் ; தத்துவ விசாரத்தில் தெளியும் தரிசனத்தை அடையும் இலக்கில் செயல்பாடும் ஆகிய இவையே ஞானமடைதல் என்கிறேன் ; இதிலிருந்து வேறுபட்டவை எல்லாம் மாயையே ஆகும் .

    கீதை 13 : 13 மேலும் எதை அறிவதால் அமிர்தத்தை சுவைப்பாயோ அந்த தெய்வீக அன்பை (நேயம்) இப்போது விளக்குகிறேன் . அது பரப்பிரம்மம் – ஆதிமூலம் - கடவுள் . ஆரம்பம் இல்லாததும் எனக்கு கீழ்படாததும் இந்த ஜட இயற்கையின் (பிரக்ருதியின்) காரணம் (அடிப்படை- சத்) ; மற்றும் விளைவுகளுக்கும் (வெளிப்பாடுகள் – அசத்) அப்பாற்பட்டும் – பாதிப்பிலாமலும் இருக்கின்றது .

    கீதை 13 : 14 எங்கும் அவரது கரங்களும் ; கால்களும் ; கண்களும் ; காதுகளும் ; முகங்களும் இருந்தாலும் இவ்வுலகத்தில் இல்லாதவரைப்போல திரையிட்டு எங்கும் விளங்குகின்றார் .

    கீதை 13 : 15 சகல இந்திரியங்களின் குணாதிசயங்களுக்கும் மூலமாக அவரே இருந்தாலும் இந்திரியங்களிளிருந்து உருவாகும் விகாரங்களுக்கு அப்பாற்பட்டவர் . அனைத்தையும் அவரே பராமரிப்பவர் ஆனாலும் அவைகளால் பந்தப்படாதவர் . ஜட இயற்கையின் குணங்களுக்கும் அவரே எஜமானர் ஆனாலும் அவைகளால் பாதிப்படையாதவர் .

    கீதை 13 : 16 படைப்பினங்கள் அனைத்திலும் உள்ளும் புறமும் உள்ளவர் . மேலும் அசைவன மற்றும் அசையாதனவற்றிலும் உள்ளவர் . புலன்களால் காணவோ அறியவோ முடியாத அருபமானவர் ஆனாலும் உணரக்கூடிய தெய்வீக அன்பால் நிறைந்தவர் . வெகுதூரத்தில் இருப்பவர் போல இருந்தாலும் நெருக்கமாகவே – உங்களுக்குள்ளேயே இருப்பவர் .
  • Kirubanandan Palaniveluchamy I யோவான் 4 :
    தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

    ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் – வள்ளலார் . ஆன்மநேய ஒருமைப்பாடு நித்திய ஜீவர்களின் அடையாளமாகும் .ஒருவன் தன்னிலே வாசமாயிருந்து தன்னை அழிய விடாமல் காக்கும் உயிரின் அன்பை உணர்ந்து கொள்வானானால் ; அதே உயிர் வாசமாயிருக்கும் சகல உயிரினங்களின் மீதும் அபிமானம் பெருகுவதை தடுக்கவே முடியாது . 

    கீதை 13 : 17 படைப்பினங்கள் அனைத்திலும் பிரிந்து அவைகளுக்குள் நிலைபெற்று இருப்பதுபோல் இருந்தாலும் அவர் பிரிவின்றி எங்கும் நிலைத்திருப்பவர் . படைப்பினங்கள் அனைத்திலும் உயிராக இருந்து காப்பவர் என்றாலும் அவற்றை அழிப்பவரும் விருத்தி செய்பவரும் அவரே என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .

    கீதை 13 : 18 பிராகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றின் ஒளியாக இருந்தாலும் மாயையின் இருளால் உணரமுடியாதவராகவும் இருக்கிறார் . ஞானத்தாலும் ஞானத்தின் விருத்தியாலும் உணரப்படவேண்டிய தெய்வீக அன்பாக சகலரின் இதயத்திலும் அவர் வீற்றிருக்கிறார் .

    கீதை 13 : 19 இவ்வாறாக பிரபஞ்சம் ; பரமாத்மா ; சேத்ரம் (சரீரம் – செயல்களின் களம்) சேத்ரக்ஞன் ; ஞானம் ; தெய்வீக அன்பு ஆகியவை சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது . இவற்றை புரிந்து கொண்ட எனது சீடன் என்னைப்போலவே பாவனை அடைகிறான்
  • Kirubanandan Palaniveluchamy வள்ளலார் சொன்ன கருணையை கீதை நேயம் என்று சொல்லியிருக்கிறது என உணர்ந்து கொள்வது ஞானத்தை வளர்க்கும் . கீதையா அது ஒரு சாத்திர குப்பை என்று ஒதுக்கிவைத்தால் அது அஞ்ஞானம்
  • Kirubanandan Palaniveluchamy 59:22. அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.
    59:23. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
  • Indranx Avataram Madha vezhigel pathi above comment soliruken, inum details Urai Nadai iruku, Agaval iruku, i tag you 1 chart for basic understanding in aruliyal. I leave it to other members. Hseija Ed Rian are you free to give iyya information?

    Ennala ithuvarai than pesa mudiyum, iyya avergel satvisaram seiyala, mattra madham njayam keka vanthirukar polla, vallal peruman than sollanum from his songs. Innum geetha book njayam ketukire evala kaalam irupirrgel? ondruku-ondru indraiku kollai seiyum century le irukom. 

    தன்னிக ரில்லாத் தலைவர்>>>>>>>என் றரற்றித் தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
    உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா ஒருதனிப் பெரும்பதி உவந்தே
    புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள் பொறுத்தருட் பூரண வடிவாய்
    என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரே?

    இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னைத் 
    துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் நின்னருளே துணைஎன் றந்தோ 
    >>>என்பேதை மனமடங்கி இருப்பதன்றி<<< எல்லாங்கண் டிருக்கும் என்றன் 
    அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.

    Nandri.
  • Indranx Avataram வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் 
    விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் 
    ஓதுகின்ற >>>>சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி 
    உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே 
    ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர் 
    எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே 
    தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய் 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 

    Suthu anaithum peruman than arivar, ithey ellam suthe endru solgirar!
    Krishnan GOD'aah?
  • Sundarapandiyan Vijayan Indranx Avataram Pothigaipriyan Vallalar 

    உங்களைச் சுற்றியும் எத்தனை வகை மனிதர்களை அன்றாடம் சந்திக்கிறீர்கள்...
    எல்லோரிடமும் ஒவ்வொரு நம்பிக்கையும்.. அதற்கான பின்புலமும் இருக்கின்றது...

    உங்களின் உண்மையான நோக்கம் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதாயின்... இந்த இத்தனை விதமான மக்களும் ஒற்றுக்கொள்ளும் ஒரு கருத்தினை விதைத்து அவர்களை சன்மார்கத்திர்க்கு உயர்த்த வேண்டுமாயின்... அவ்வச்சமயங்கள் மற்றும் நம்பிக்கைகளின் பின்புலமும் அந்த வேதங்களும் பற்றிய ஒரு அடிப்படையான கருத்தாவது நாம் அறிந்திருக்க வேண்டுமா கூடாதா? 

    அதற்கடுத்து... நீங்கள் காணும் இத்தனை வகை மனிதர்கள் மற்றும் ஏனைய உயிர்களின் உள்ளொளியாய் நிற்பது ஒரு பொருள்... (என்பதை நீங்கள் சன்மார்கி என்று சொல்வதிலிருந்து உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்)...

    ஒரு வகையில் இத்தனை வகை மக்களுக்கும்... அவ்வச்சமயங்களைத் தோற்றுவித்தும்.. இதுவரை வழிகாட்டியதும் அந்த ஒரு பொருள் தானே..?

    இதுவரை தோன்றிய உயிர்களுக்கும்... இனித் தோன்றப் போகும் உயிர்களுக்கும்... உறுபொருளான... அந்த ஏகப் பரம்பொருளை... எல்லா உயிர்களிடத்தும் நீங்கள் காண்பது/காண விளைவது உண்மையாயின்... நீங்கள் எல்லா உயிர்களிடத்தும் பாடம் கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் தானே? இதில் எதையாவது ஒதுக்க முடியுமா உங்களால்...?

    இதைத் தான் வள்ளுவப் பெருமான் அன்றே... 

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் 
    மெய்ப்பொருள் காண் பதறிவு

    என்று குறிப்பிட்டார்... 

    அறிவை யாரிடமும் எந்த சூழலிலும் பெறத் தயங்கவே கூடாது... அது உடனடியாய் அனுபவம் ஆகிவிடாது தான் என்றாலும்... ஒரு நாள் அது ஒன்றுபட்ட அனுபவமாய் மாறும்... கருத்தில் தெளிவு வரும்... இதை அனுபவிப்பதால் எழுதுகிறேன்...

    என் செவிகள் புதுப்புது கருத்துகளுக்காக என்றுமே திறந்தே இருக்கும்... ஆனால் அவற்றிலிருந்து உள்ளெழும் புரிதல் மட்டும் ஒன்றுபட்ட கருத்தை உணர்த்துமாறு ஆண்டவர் தக்க சூழலில் அருள் புரிந்தார்... இன்னும் புரிவார்... 

    உண்மையான சன்மார்க்கம் ஏடுகளிலும் ... எழுத்துக்களிலும் இல்லை... மெய் அனுபவத்தில் தான் இருக்கிறது... ஒருமை என்பது... எல்லா உயிர்களிடத்தும்... எல்லா சூழலிலும்... இப்போதும்... எப்போதும்... ஆண்டவர் தான் எல்லா செயல்களும் செய்கிறார் என்பதை அனுபவத்தால் அறிவதேயாம்...

    அப்படி அறிபவன் யாரையும் தாழ்த்திப் பேசமாட்டான்... எல்லோரிடமும் பணிவான அன்பும்... கருணையும் நிறைத்திருக்கும்... எல்லா கருத்துக்களும் அவனிடத்தில் ஒன்றுபடும்... ஒரு வகையில் யோகம் என்றாலே இந்த ஒன்றுபடுதலை அனுபவிப்பது தான்... அந்த அனுபவத்தில் விளைந்த முத்து தான் ஞானம்...
  • Sundarapandiyan Vijayan Indranx Avataram வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் 
    விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் 
    ஓதுகின்ற >>>>சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி 
    உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே 
    ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர் 
    எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே 
    தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய் 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 

    இதில் சூது இருக்கின்றதென்பதனை வள்ளலார் அதைப் படிக்காமல் உணர்ந்திருப்பாரா?

    மேலும் அவற்றிலெல்லாம் எது சூது எது உண்மை என்பதை ஆண்டவர் தான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னார்... இது எங்குமே உள்ள உண்மை... உமி இல்லாமல் நெல் இல்லை... அசுத்தமான தூல தேகம் இல்லாமல் சூட்சும தேகம் கிடைக்காது... அதனால் தான் பிறவி எடுத்திருக்கிறோம்... 

    ஒன்றைப் படிக்கும்போதும்... கேட்கும்போதும்.. அதைச் சொன்னவர்கள் எழுதியவர்கள் எல்லோரும் மனிதர்கள் என்பதனை நாம் ஒத்துகொள்ள வேண்டும்.. அவர்களிடம் அழுக்கு உண்டு... அந்த அழுக்கு கருத்துக்களிலும் வெளிப்படும்... ஆயினும் அந்த அழுக்கினுள் மாணிக்கமாய் உண்மைப் பொருள் ஒளிந்திருக்கும்...
    இல்லையேல் அந்த கருத்துக்கள் இத்தனை யுகங்களாய் பாதுகாக்கப் பட்டிருக்காது...

    உண்மைப் பொருளை அறியும் வரையில் அந்த அழுக்கை சுமப்பதில் தவறில்லை... 
    ஆனால் உண்மைப் பொருளை காட்ட வல்லவர் ஆண்டவர் ஒருவரே... அதுவும் அனுபவத்தால்... அந்த அனுபவம் வரும் வரையில் சத்விசாரம் செய்து அறிவினை மேம்படுத்திக்கொள்ளலாம்... 

    எதையும் படிக்காதீர்கள் என்று வள்ளலார் எங்காவது பாடியிருகின்றாரா? எதைப் படித்தாலும் அதை அப்படியே நம்பிவிடாதீர்கள் என்று தானே சொல்கிறார்... அதைத் தானே வள்ளுவரும் சொன்னார்?
  • Sundarapandiyan Vijayan என்னைப் பொறுத்த வரையில்.. வள்ளலாரும் மற்ற ஞானிகளைப் போலதான்... இறைவனால் அனுப்பி வைக்கப் பட்டவர்... ஆனால் அதில் வேறுபாடு என்னவென்றால் அவர் ஞானத்தின் உச்சத்தை (நாமறிந்த வரையில்) அடைந்ததோடு அதை எல்லோரும் அறியும் வகையில் உரக்கச் சொன்னவர்...

    ஒரு உண்மையை நாம் இங்கு சிந்திக்க வேண்டியது அவசியம்.... இன்றைக்கு நமக்கு கிடைத்த பாடல்கள்... புராணங்கள்... ஞானிகளின் கருத்துக்கள்... எல்லாம் 10ம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டதுதான் ...

    http://ta.wikipedia.org/.../%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D...

    அவருக்கு இறைவன் இந்த திருமுறைகளை வெளிப்படுத்தும்போது பல நூல்கள் கரையான் அரிக்கப் பட்டு கிடந்ததாக நமக்கு தகவல் கிடைக்கிறது.... அதற்க்கு இறைவன் சொன்னது... "தற்காலத்திற்கு தேவையானதை இப்போது வெளிப்படுத்துகிறோம்... மற்றவை காலம் வரும்போது வெளிவரும்..." என்பதேயாம் 

    இதில் எத்தனை எத்தனை ஞானிகள் என்னென்ன அறிய நிலைகளைப் பெற்று அதனால் என்னென பாடினார்கள்... என்பது நமக்கு தெரியாது... 

    "வள்ளலாரைப் போன்ற ஞானிகள் முன்பு தோன்றி பல பாடல்களைப் வெளிப்படையாகப் பாடியிருக்கலாம் என்றே கருதுகிறேன் நான்... இது முழுக்க முழுக்க எனது அனுமானமேயாம்..."
    ta.wikipedia.org
    நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்; திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார்.
  • Muthu Kumar Indranx Avataram Pothigaipriyan Vallalar உங்களிடம் ஒரு கேள்வி

    இந்து மதங்களின் சிறுதெய்வம் ஒன்றினை நம்பிக்கையுடன் மிகவும் பக்தியுடன் வணங்கும் ஒருவர் இருப்பதாக்க கொள்வோம் அவர் யார் பசி என்றாலும் பொறுக்க மாட்டார் கேட்டவருக்கு பசியாற்றி விட்டுதான் மறு வேலை; உதவி என்று கேட்டாலும் கருணாமூர்த்திதான் என்றிருப்பதாக்க் கொண்டால்,

    1) அவருக்கு அருள் காரியப் படுமா?
    2) இல்லை என்றால் ஏன்?
    3) ஆம் என்றால் காரியப் படுவது அவர் வணங்கும் சிறு தெய்வத்தினாலா இல்லை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமிருந்தா?
  • Sundarapandiyan Vijayan சன்மார்கதிர்க்கென்று... ஒரு தனிக் கடவுள்... தனி வெளி... தனி வேதம்... என்றெல்லாம் நீங்கள் உருவாக்கினால்... சன்மார்க்மும் ஒரு மதமாய் மாறிவிடும்... அதை ஒரு சாரார் மட்டுமே பின்பற்றுவர்...

    எனது அணுகுமுறை மிகவும் எளிமையானது... என் சுற்றுவட்டாரத்தில்... என் நண்பர்களுக்கும்... என் குடும்பத்திற்கும் நான் சொல்வது யாதெனின்... எந்த கடவுளையும் வணங்குங்கள்... ஆனால் புறத்தோற்றத்தை அல்ல... உள்ளிருக்கும் ஜோதியை... அந்த ஜோதியை தானே இறுதியில் தொட்டு நம் கண்ணில் ஒற்றிக்கொள்கிறோம்... இதை நம் பெரியவர்கள் அன்றே சூட்சமமாய் வைத்துள்ளனர்... 

    வள்ளலாரும் இதைத்தானே "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததே அன்றி தலைவ, வேறு எண்ணியது உண்டோ?" என அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் வினவுகின்றார்

    அவர்கள் உருவம் கடந்த தெய்வத்தை தேடும் உள்ளுணர்வு பெரும் வரையில்... இது அவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாயிருக்கும் என்பது என் கருத்து...
  • Indranx Avataram Dear brother Sundarapandiyan VijayanMuthu Kumar. Im replying this just because of you mentioning my name on above comments. I am done my part to help you for your Aruliyal details since you all spiritual seekers. 

    The rest understand, accept or not all depends on ownself urge on Aruliyal. I am quit from sharing more points from Arutpa, Agaval or Urai Nadai between you guys at here. You are not ready yet to listen, anywhere you carry on with discussion. Sorry if anything wrongly said which hurt you. 

    //அப்படி அறிபவன் >>>>>யாரையும் தாழ்த்திப் பேசமாட்டான்...<<<<< எல்லோரிடமும் பணிவான அன்பும்... கருணையும் நிறைத்திருக்கும்// sorry i didn't mean, or purposely. and please let me know which sentence you are refer. Im only forusing on Arutpa, Agaval, Urai. 

    Nandri samyooo!

    great escape..... hi..hi..hi..
  • Sundarapandiyan Vijayan Indranx Avataram No brother I did not mean anything bad on you... I was only mentioning it in the general sense.. Please continue with your quest... I was only requesting you to consider other great masters like Avvayaar, Valluvar etc... Very Sorry if had hurt you in anyway... it was not my intention...
  • Sundarapandiyan Vijayan When you have time please listen to this Professor for more details about naalvar & saivam... 

    He says sanmaargam = nanneri in tamil...

    https://www.youtube.com/watch?v=ZFwWy7OZF6Q
    Naalvar Kaatiya Nanneri -- Speech by Thiru. Shanmugavel Avargal., Tuticorin, Tamilnadu, India.
  • Kirubanandan Palaniveluchamy சகல மதங்களிலும் கலியுக முடிவில் ஒருவர் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது 

    வள்ளலாரும் போகரும் சில சித்தர்களும் ஆண்டவர் வரும்போது உடன் வந்து உலகை ஆள்வோம் என்று சொல்லியுள்ளனர்

    ஏற்கனவே பூமியில் உள்ள கருத்தியலை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு வள்ளலார் புதிதாக ஒன்றை சொன்னவரில்லை

    இப்பிறவியில் வள்ளலார் முழுமை அடைந்தார் அப்படியாயின் முழுமை அடையா முந்தியபிறவி அவருக்கு இருந்திருக்கும்தானே

    அந்த நிலையிலும் பல ஞானிகளைப்போல அவரால் சில மார்கங்கள் உண்டாகி இருக்கலாம் அதில் பல குறைகளுடன் எவ்வளவோ ஞானம் இருக்கலாம்

    ஆதிசங்கரர் இந்தியா மிக இருண்ட காலகட்டத்தில் அவதரித்து பல மூடபழக்கங்கள் நிறைந்த சனாதன தர்மத்தை புணரமைத்தவர் எவ்வளவு ஞானம் சாதனை செய்தவர் ஆனால் அவரும் முழுமையடையவில்லை

    அவர் சனாதனதர்மத்தை முழுக்க அலசி ஆராய்ந்து தீமைகளை முடிந்தளவு கலைந்து ஒழுங்குபடுத்துங்கால் இந்து தர்மம் ஆறு பெரும்பிரிவுகளாக வகைப்படுத்தி அவைகளை சன்மார்கங்கள் என பெயரிட்டார்

    வள்ளலாருக்கு வெகு காலம் முன்பு சன்மார்க்கம் என்றால் இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் சன் என்றால் ஆறு மார்கங்கள் என்ற ஒரு அர்த்தமும் உண்டு

    வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கம் என வைத்த பெயரை இந்த அர்தத்திலே புறிய முயற்சித்தால் சரியான அர்த்தம் வருகிறது

    பன்னெறிகளான முந்தய ஆறுமார்கத்தை உள்வாங்கி சமரசப்படுத்தி சுத்தப்படுத்திய மார்க்கமே சமரச சுத்த சன்மார்க்கம்

    முந்தய மார்க்கங்கள் அனைத்தையும் வள்ளலார் குப்பை என ஒதுக்கிவைத்துவிட்டு புதிய ஒரு மார்க்கத்தை கொடுத்துவிட்டார் என வள்ளலாரின் சீடர்கள் தவறாக புரிந்துகொண்டு பிற மார்க்கங்களை கண்ணெடுத்தும்பார்க்காததினால்தான் 100 ஆண்டுகளாகியும் ஒருவராவது சகாகல்வியில் தேறவில்லை

    வள்ளலார் முந்தய பிறவிகளில் அனைத்திலும் கொட்டை போட்டு முத்தெடுத்து பொதுமைப்படுத்தி சமரச சுத்த சன்மார்க்கத்தை வெளிப்படுத்தியிருக்க அவரின் சீடர்கள் அவரைப்போல அறிவை ஞானத்ததை விசாரியாமல் வள்ளலாரின் சகாக்கல்வி சகாக்கல்வி என கொட்டுமட்டும் அடித்துக்கொண்டு செத்துகொண்டே இருக்கிறார்களே ஏன் ஏன் ?

    பதில் வள்ளலாரின் மார்க்த்தில் நின்று பிற மார்க்கங்களோடு உரசி சத்விசாரம் செய்தாலொழிய முன்னேற்றம் வரவே வராது

    ஒளி சரீரம் பெறுவதும் வள்ளலார் புதிதாக கண்டுபிடித்ததல்ல சிறிது காலம் முன்பு மாணிக்கவாசகர் ஒளிசரீரம் பெற்றவர்

    ஆதி குருவும் முதல் மனிதனுமான சிவன் ஓளிசரீரம் பெற்றதையே வைரவன் என்றனர் வைரம் அழிவில்லாத ஒளி உமிழ்வது அந்த சரீரத்தை சிவன் அடைந்தநிலையே வைரவன்

    சிவசற்குருவிடமே வள்ளலாரும் சகாக்கல்வியை கற்றார்
  • Hseija Ed Rian அபாரம்...சொல்லுங்க ஐயா...கேட்க்க ஆவலாக உள்ளோம்..
  • Pothigaipriyan Vallalar சிவசற்குருவிடமே வள்ளலாரும் சகாக்கல்வியை கற்றார் ????????
  • Pothigaipriyan Vallalar வள்ளலாருக்கு சாகாகல்வியை பயிற்று தந்தது =========சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே 
    தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே 
    ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே 
    எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே. =========================================================சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே 
    சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே 
    சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே 
    சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.===================
  • Sundarapandiyan Vijayan Pothigaipriyan Vallalar 
    ஜோதி! ஜோதி! ஜோதி சுயம்
    ஜோதி! ஜோதி! ஜோதி பரம்
    ஜோதி! ஜோதி! ஜோதி அருள்
    ஜோதி! ஜோதி! ஜோதி சிவம்

    வள்ளலார் ஜோதியே சிவம் என்றார்... அந்த சிவ சற்குருவைத்தானே திரு Kirubanandan Palaniveluchamy அவர்களும் குறிப்பிட்டார்... இதில் என்ன தவறு கண்டீர் நண்பரே...?

    மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாயத் தொடங்கினர்க்கு ஓர் 
    வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே 
    -தாயுமானவர்

    மூர்த்தி (இறைவன்), தலம் (ஊர்), தீர்த்தம் (புனித நீர்), விருட்சம் (கோயில் மரம்) ஆகிய நான்கும் தலபுராணங்களில் சிறப்பாகக் கூறப்படும் பொருள்களாகும்

    ஒழுங்காக கோவிலுக்குப் போய் மனதார சாமி கும்பிட்டாலே... மற்றவை தானாய் பின்வரும் என்பது ஆன்றோர் வாக்கு... வள்ளலாரும்.... அதையே தன் வாழ்விலும் வாழ்ந்து காட்டினார்... வீடு தங்காமல் பெரும்பகுதி கோவில் மாடங்களிலேயே படுத்துறங்கி இறைவனைப் பாடி வந்தவை தான் பெரும்பகுதி பாடல்கள்...

    வள்ளலார் மட்டுமல்ல... பட்டினத்தார், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்... முதலான மாபெரும் ஞானிகளின் வாழ்க்கைச் சான்றுகளும் இதயே நமக்கு பறைசாற்றுகிறது... ஆனால் இன்று கோவிலுக்கு போவதையே மூட நம்பிக்கை என்று சொல்லுமளவுக்கு மக்கள்... முன்னோர்களை விட்டு விலகிப் போய்விட்டனர்...
  • Pothigaipriyan Vallalar நாம் வாழ்கின்ற அஞ்ஞான வெளிக்கும் ,,,,வள்ளலார் அடைந்த பெரு வெளிக்கும் இடையே 12 வெளியிலும் நீங்க சொல்ற :சிவம்: இருக்கிறது ,,,இப்ப நீங்க சொல்ற சிவம் எந்த வெளிக்கு உரிய சிவம் ? Sundarapandiyan Vijayanஅதுமட்டுமல்லாமல் வள்ளலார் கூறுகின்ற சிவம் எந்த வெளிக்கு உரிய சிவம் ? (வெளியின் குறிப்பு அருட்பா ஆறாம் திருமுறை "திருவடி பெருமை "பதிகம் )
  • Hseija Ed Rian அருமை..
  • Sundarapandiyan Vijayan Pothigaipriyan Vallalar 

    நீங்கள் சொல்லுகின்ற இந்த வெளிகளெல்லாம் அகமா? புறமா?

    புறம் பற்றி எனக்கு தெரியாது...

    அகம் என்றால்... என் கருத்து/புரிதல் யாதெனின்...
    எங்கும் நீக்கமற நிறைந்த சிவம் ஒன்றேயாம்...
    அதனை மறைப்பு கொண்டு காண்பதால்... வெவ்வேறாய் தோன்றுகிறது என்று கருதுகிறேன்...

    கருத்தில் பரிபூரண தெளிவு உள்ளோருக்கு அது சுத்த சிவமாய் வெளிப்படுகிறது...

    எந்தளவிற்கு தெளிவு குறைந்து இருக்கிறதோ... அதைப் பொறுத்து உள்ளொளியாகிய சிவம் குறைவுற்றதெனக் குறிக்கப்படுகின்றது... என்று எண்ணுகிறேன்...

    நீங்கள் சொன்ன திருவடிப் பெருமயில்லுள்ள ஒரு பாடல் இதோ...

    அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய் 
    ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன் 
    தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த 
    சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார் 
    மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம் 
    ***********மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ 
    இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன் 
    என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி. 

    என் மனவாக்கின் அளவு போல் எனக்கு மருள் உண்டானதென்று வள்ளல்பிரானே குறிப்பிடுகிறார்...
  • Pothigaipriyan Vallalar நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர் 
    நாரணர்கள் மற்றவரின் நாடின்மிகப் பெரியர் 
    வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர் 
    மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர் 
    மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம் 
    மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின் 
    ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய் 
    ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.
  • Pothigaipriyan Vallalar நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம் 
    நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம் 
    ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம் 
    இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே 
    ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம் 
    அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம் 
    ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின் 
    உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
  • Pothigaipriyan Vallalar பரவெளி யதனைப் பரம்பர வெளியில் 
    அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 
    283. பரம்பர வெளியைப் பராபர வெளியில் 
    அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 
    284. பராபர வெளியைப் பகர்பெரு வெளியில் 
    அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 
    285. பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில் 
    அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • Pothigaipriyan Vallalar மேற்கண்ட பாடல்களின் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட வெளிகளின் போட்டோ ...சன்மார்க்கத்தில் 50 ஆண்டுக்கு மேல் உள்ள அன்பரால் சொல்லப்பட்டது ....சரிதானே பிரதர் Indranx Avataram
  • Sundarapandiyan Vijayan Pothigaipriyan Vallalar இதைப் படிக்கையில் எனக்கு தோன்றியது யாதெனின்...

    ஒன்றை ஒன்று உள்ளடக்கிய வெளியில்.. ஒன்று கரைய மற்றொன்று வெளிப்படும்... அந்த ஒவ்வொரு வெளியும் ஒவ்வொரு திரையாய் தோன்றுகிறது எனக்கு...
    அதைத் தான் நான் முன்னம் மறைப்பு என்று குறிப்பிட்டேன்..

    கருத்தில் தெளிவு விரிய விரிய புரிதல் மேம்படும்... அந்த புரிதல்களுக்கான எல்லையை வகுத்து... வெளியென்று குறித்தாரோ என்னவோ பெருமான்...
    (இது என்னுடைய புரிதல்)
  • Kathir Kathirvelu உளவு என்பது ....ஆன்மநேய ஒருமைப்பாடு என்றால் எது ?என்ன? என்பதை அறிந்து கொள்ளுகின்ற அறிவு விளக்கம் விளங்க வேண்டும்..ஜீவகாருண்யம் என்பது சன்மார்க்கத்தின் ஆரம்பக்கல்வி .அறிவு விளக்கத்திற்கும்,அன்பை பெறுவதற்கும்,அவசியம் அதற்குமேல் சத்விசாரம் என்னும் உளவை தெரிந்து கொள்ளவேண்டும்,எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த சித்து உருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் ,அந்த வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலோ ! என்பார் வள்ளலார் எல்லா உயிர்களும் ஒன்று என நினைக்கின்ற உலவை ,அதாவது அறிவை வளர்த்துக் கொள்பவர்கள் தான் உளவு தெரிந்து கொண்டவர்கள் ..அவர்கள் வித்தகர் அவர்கள் கடவுளைக் கண்டவர் ,அவரே கடவுள் என்பதை வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்து கின்றார்.....அங்கே சாதி,சமயம்,மதம்,ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் எதுவும் இருக்காது ,சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியம் ஆகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்பார் .அந்த உளவை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் தெரிந்து கொள்ள வேண்டும். .....அன்புடன் ஈரோடு கதிர்வேல்
  • Sundarapandiyan Vijayan ஒவ்வொரு வெளியையும் அதர்க்கு மேலுள்ள வெளி ஆட்சி புரிவதாய்க் குறிப்பிடுகிறார்... பெருமான்...

    உதாரணமாய்... ஒரு வாகனம்... கார் என்று எடுத்துக்கொண்டால்.. அதில் பயணிக்கும் பயணியை பயணிக்கச் செய்வது ஓட்டுனர்... ஆகையால் அவருக்கு வாகனத்தைப் பற்றிய மேலதிகத் தகவல் தெரியாது... அந்தன வாகனத்தில் பழுது ஏற்ப்பட்டால்... ஒரு பொறியாளரின் உதவியை நாட வேண்டி வருகிறது... அவருக்கு அதன் உள் கட்டுமானங்கள் தெரியும்... ஓட்டுனருக்கு வாகனத்தை செலுத்தும் வரை மட்டும் தெரியும்.. இது போல.. ஒவ்வொரு நிலயை.. கடந்து போனால் மூல ஆட்சியாளனை அறியலாம்...

    This is called levels of abstraction in English... When the need be you have to derive your consciousness into more deeper levels of abstraction and finally you find the root...
  • Kathir Kathirvelu உளவு என்பது இன்னும் ஒன்றையும் சொல்லுவார் .எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபமே என்னை ஆண்டவர் ஏறா நிலைமிசை ஏற்றி உள்ளார் .நாம் எதை எல்லாம் விடாமல் இருக்கின்றோம் எதை எல்லாம் விட்டுவிட்டு இருக்கிறோம் என்பதை நாமே நம்மை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் விடாமல் இருந்தவர்கள் என்ன லாபத்தை அடைந்துள்ளார்கள் என்ற ஒரு கேள்வியும் கேட்டு உள்ளார் .சிந்திக்க வேண்டும்
  • Kirubanandan Palaniveluchamy ஞானத்தால் உண்டாகிற ஒரு மாயையும் இருக்கிறது என்பார்கள் பெரியவர்கள் . மாயையை களைவது ஞானம் என்றால் அந்த ஞானம் உண்டாகும்போதும் அதின் நிமித்தமும் சாதகர்களுக்கு மாயை ஒன்று உண்டாகிறதாம் . அது ஞானப்பெருமை 

    அகல உழுவதை விட ஆழ உழுவது மிக அவசியம் . ஆழ இறங்கி சென்று உள்ளனுபவம் பெறாமல் பல விசயங்களை நுனிப்புல்லாக மேய்ந்துகொண்டும் அங்கும் இங்குமாக உழுவதையே நமக்கு எதோ உணர்ந்து விட்டதுபோல ஒரு ஞான மயக்கம் வந்துவிடுகிறது 

    வள்ளலார் பல பிறவிகளாக பல மார்க்கங்களில் இறைவனால் உணரவைக்கப்பட்டு அதன் நல்லது கெட்டதுகளை உணர்ந்தேன் என்பதையே இவ்வாறு குறிப்பிடுகிறார் 

    வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் 
    விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் 
    ஓதுகின்ற >>>>சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி 
    உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே 
    ஏதமற உணர்ந்தனன்

    சூதைனத்தும் உளவனைத்தும் காட்டி என்பதை நல்லது கேட்டதை உணரவைக்கப்பட்டேன் என்றுதான் பொருள்கொள்ள வேண்டும் அதன் பிறகே இந்த உயர்ந்த நெறிக்கு அவர் வந்து சேர்ந்தார் 

    அவரின் பாடல்களை உள்ளனுபம் இல்லாமல் எத்தனை முறை பாடினாலும் அவர் அடைந்த அனுபவத்தில் கால் வாசி கூட நமக்கு கிடைக்காது 

    நுனிப்புல்லாக கொஞ்சம் புரியும் இப்படி அனேக நுனிப்புல்லை அகல அகல மேய்ந்துவிட்டு ஞானம் பெற்றதாக பெருமை நான் உட்பட வள்ளலாரின் சீடர்களை பிடித்துக்கொண்டிருப்பதே யாரும் சாகாக்கல்வியை தேராமல் இருப்பது 

    வள்ளலாரின் வாழ்க்கை வரலாறை புரிந்தவர்க்கு அவர் சத்திய தருமசாலையை தொடங்கிய பிறகும்கூட சைவ வழிபாட்டில்தான் இருந்தார் . ஒருநாள் சிவனே சிவனடியார்போல வந்து உடன் ஓய்வு எடுக்கும்போது வள்ளலாருக்கு சொல்லாமலேயே தனது இரண்டு பாதங்களையும் அவர் தலை மேல் வைத்து திருவடி தீட்சை நல்கினார் . இதுவே உண்மையான திருவடி தீட்சை . செல்வராசு ஈஸ்வர பிரசாத்திடம் கற்ற உல்ட்டா திருவடி தீட்சை அல்ல .

    அந்த தீட்சைக்கு பிறகே என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி விட்டார் . ஆதியிலே வைத்துக்கொண்டிருந்த சைவ சமய லட்சியத்தை விட்டு அருட்பெருஞ்சோதி வழிபாட்டுக்கு மாறினேன் என்றது 

    நான் இதைதான் எங்கும் வழியுறுத்தி வருகிறேன் . சிவனை கடவுளாக வழிபடும் பல தீவிரவாதிகளும் இன்னும் சிவனை நேரடியாக சந்திக்கவில்லை . அப்படி சந்தித்தால் அவர்களும் வள்ளலாரைப்போல சிவ வழிபாட்டை விட்டுவிட்டு அவரை விட மேலான அருப இறை வழிபாட்டுக்கு வந்துவிடுவார்கள் 

    ஏனென்றால் சிவன் ஒரு சற்குரு . கடவுளிடம் வெளிப்படாத தன்மை 1௦௦ என்றால் வெளிப்பட்டவை 1 மட்டுமே அந்த ஒன்றில்தான் சற்குருவான சிவன் . நாராயணன் இருவரும் வருகிறார்கள் 

    வள்ளலாரையும் சிலர் இப்போது கடவுளாக்க முயற்சிப்பதுபோல சர்குருநாதர்கள் சிவனையும் நாராயணனையும் காலப்போக்கில் கடவுளாக்கி விட்டனர் இவர்களை நேரடியாக சந்தித்தால் அவர்களே இறைவனை உணர்த்தி விடுவார்கள் 

    இப்படி ஆறு - சன்மார்க்கத்திளிருந்தும் நல்லது கேட்டதை உணர்ந்து தெளிந்தால் மட்டுமே வள்ளலாரின் ஞானத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும் அதுவே சத்விசாரம்
  • Kirubanandan Palaniveluchamy நான் சென்ற தைப்பூசத்திற்கு - இரண்டாம் முறை வடலூர் வந்த பொது ஏன் உத்தர ஞான சிதம்பரம் என வள்ளலார் பெயர் சூட்டவேண்டும் . இத்தனைக்கும் சிதம்பரத்திற்கு தெர்கேதானே வடலூர் உள்ளது என்ற கேள்வி எழுந்தவனாக சிதம்பரம் சென்று ஒரு மணி நேரம் சுற்றிப்பார்த்தேன் . அப்போது எழுந்த விசாரம் ஒன்றை கீழே தருகிறேன் . இதுவும் ஒரு சத்விசாரமே 

    http://kirubarp.blogspot.in/2014/02/blog-post_20.html
    kirubarp.blogspot.com
    Ram-in Sanscrit,Hindi,all Indian Languages Rom in Hebrew&all basic Languages mea...See More
  • Karthi Keyan Kirubanandan Palaniveluchamy, sir I have one doubt.. Vallalar song itself he wrote devarum,moovarum,modharum,siddharum yavarum pertrida arutperumjothi.. second even kakabujandar wrote in his perunool kaviyam that paadham adhai sirasil vaithu panbai erudhen.. vallalar song adiya padham arutperumjothi adhu agiya paadham.. then third even most of siddhars I mean good siddhars wrote their songs about siva that he's the reason for all this Maya means epadiye anaivarum muthi petral kailayathil edam erukathu.. even in subramaniyar gnanam murugar scold his own father that siva will also die.. lack of logic
  • Karthi Keyan utharam eppadiyey kathaiyum kaati bharatham pool kadhai undaki karthavai than endru thoonavotta kabada nadagam adinarey.. evalavu puranangalai eluthiyadhu yaar viyasar.. yarudaiya utharavinaley sivan.. why??
  • Karthi Keyan please say with proof otherwise can't able to accept it.. vallalar himself doesn't mention his previous birth then how can I believe your words.. next do you know who's adhisankarar.. in konganavar song amma endren adhisankaran anaen adaiyum vitaen konganavar anaen.. if you show example like this means we can able to consider it..sorry no offense.. anubavathai maerkool kaati padalgalai padhivu seiyavum..
  • Karthi Keyan and about your chidambaram research.. vallalar told sanmarka anubavam kandathirku mael.. that is Chirsabai or puruvamathi.. but in chidambaram ponnambala medu in leftside that is heart or erudhayam sthanam.. lack of logic.. can you explain these terms sir..
  • Kirubanandan Palaniveluchamy கார்த்தி கேயன் முந்தயவைகளில் உண்மைகளும் மனிதர்களின் பொய்களும் கலந்து விட்டன அதனால் அவைகளை மிக கவனமுடன் ஆராயவேண்டும் 

    வள்ளல் பெருமான் மூவரும் பெற்றிடா அருட்பெருஞ்சோதி என்றது இம்மூவரும் அருப கடவுளால் படைப்புகளின் தலைவர்களாக - சர்குருவினராக படைக்கப்பட்டாலும் ; இம்மூவரும் இறைவனை அடைந்தார்களா என்பதை சொல்லமுடியாது . ஆனால் நான் அடைந்தேன் என்பது ஒரு ஒப்புவமை வாசகமே தவிர அப்படியே பொருள்கொள்ள முடியாது
  • Karthi Keyan my comments are not only based on vallalar but also all.. subramaniyar gnanam, agathiyar gnanam, kakabujandar perunool kaviyam.. they told exactly same as vallalar.. siva is different and sivam is different.. you are explanations are without logic sometimes sir..
  • Karthi Keyan about your last comment, they are not the authority of anything.. the one who rules all is father or arutperumjothi.. they just act as god but they are not.. they don't have single authority told by another siddhar..
  • Kirubanandan Palaniveluchamy வள்ளலாரின் முந்தய பிறவிகள் பற்றி ஏதேனும் பாடல்கள் இல்லை என்பதற்காக அவர் பிரவிஎடுக்கவில்லை என்று சொல்ல முடியாது நிச்சயம் அவர் பல பிறவிகள் எடுத்து நம்மைப்போல உழன்று அதில் தேறியே இறுதியாக அந்த உன்னத நிலையை அடைந்தார் 

    அதுமட்டுமல்ல அவர் ஏற்கனவே ஒளி சரீரம் பெற்று விண்ணுலகம் சென்றவர் ; ஆனால் சமரச சுத்த சன்மார்க்கத்தை வித்திட பூமிக்கு அனுப்பப்பட்டார் என்பதும் உண்மை
  • Karthi Keyan again if you draw a circle means you know the starting and ending point, but none of else know.. and vallalar complete the circle and gave it.. he want to concentrate us of his teaching not searching of his previous birth.. you didn't answer for chidambaram question sir..
  • Kirubanandan Palaniveluchamy ஆதாரங்கள் இல்லை . ஆனால் எனக்கு உணர்த்தப்பட்டதை சொல்கிறேன் . 

    இஸ்ரேல் தேசத்திற்கென்று ஒரு ஆன்மீக பாரம்பரியம் உள்ளது . அங்கு இயேசுவுக்கு முன்பே கர்மேல் மலையில் எலியா என்ற ஞானி ஆசிரம் அமைத்து இறைதேடல் செய்தார் . அவர் இறந்தவரையும் எழுப்பியுள்ளார் பல அற்புத அடையாளங்கள் அவரைப்பற்றிய குறிப்புகள் உள்ளன 

    அவர் ஒளி சரீரம் பெற்று வானத்துக்கு அக்கினி மயமான குதிரைகளும் ரதங்களும் வந்து அழைத்து சென்றதை அவரின் சீடர்கள் கண்டார்கள் 

    அவரே வள்ளலாராக தமிழகம் வந்தது சமரச வேதத்திற்கு வித்திடவே என்பது எனக்கு கிடைத்த வெளிப்பாடு
  • Karthi Keyan ok let assume as you told sir.. did Israel people following sanmarkam.. did they have books like thiruarutpa and urainadai or resemble notes... they just killing people in eraq..
  • Kirubanandan Palaniveluchamy"https://www.facebook.com/kirubanandan.palaniveluchamy/posts/667984566588546"
    வள்ளலாரும் அவரது முந்தய பிறவியில் - அதாவது இஸ்ரேலில் எலியா என்ற ஞானியாக - தீர்க்...See More
  • Karthi Keyan no my question is 
    did Israel people following sanmarkam.. did they have books like thiruarutpa and urainadai or resemble notes like vallalar..
  • Kirubanandan Palaniveluchamy நண்பா எங்கிருந்தும் சிலர் ஞானம் அடைவார்கள் . அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நெறியை அவர்கள் உள்வாங்காது சடங்காச்சாரமாகவும் பெருமையாகவும் மதமாகவும் மட்டுமே கடைப்டிக்கிரார்கள் . ஒன்றை வழிபடுவதால் மட்டுமே அதற்கு குத்தகை எடுத்த தகுதி மனிதனுக்கு வந்துவிட்டதாக மாயை எல்லா மதத்திலும் உள்ளது 

    ஒருவரை வழிபடுவதால் அல்ல ; அவரின் உபதேசங்களை கடைபிடித்தால் மட்டுமே அவருக்கு பிரியமான சீடனாக முடியும் என்பதை மனிதனுக்கு அவ்வளவு சீக்கிரமாக புரிய வைக்கமுடியாது
  • Karthi Keyan manithanuku puriyavaika mudiyadhenral neegal yaar naan yaar.. athellam mudiyum.. solbavar sonnal kalutha keetkumbanga.. adhu madiri anubavathil thelinthavar sonnal elorum keetpanga..but the first paragraph is true sir..
  • Karthi Keyan still you are not answered my chidambaram question and you are diverting to something else.. don't do that..
  • Kirubanandan Palaniveluchamy சிதம்பரத்தில் இரவு ஒரு மணி நேரம் மட்டமே இருந்தேன் அடுத்த முறை பார்க்கவேண்டும்
  • Kirubanandan Palaniveluchamy சிவன் கோவிலில் வெளியேறும் இடத்தில் அதாவது வாட கிழக்கு மூலையில் கால பைரவர் இருப்பார் நாய் கூட இருப்பதால் பைரவர் என்பதாக மேலோட்டமான தெளிவால் முக்கியமான உண்மை மறைக்கப்பட்டு விட்டது 

    அது சிவன் முழுமையடைந்த நிலை - ஒளி சரீரம் அதாவது அழிவற்ற வைரம் போன்ற ஒளி சரீரம் வைரவன் என்பதே சரியானது 

    "https://www.facebook.com/photo.php?fbid=713856302001372&amp;set=a.714343725285963.
    பிள்ளையார் பட்டிக்கு அருகில் உள்ள வைரவர கோவிலுக்கு சென்றிருந்தேன் . அது சிவன் ஒளி சரீரம் பெற்று வைரவராக - வைரம் - ஒளி மற்றும் அழிவில்லாத தன்மை - அங்கு அவர் பெயர் வளர் ஒளி நாதர்

    உலகின் முதல் மனிதன் சிவன் - ஒளி சரீரம் பெற்று தேவனாக பரலோகம் போனார் என்பதே வைரவர்

    அவர் அங்கு போனவுடன் அழித்தல் பணி அவருக்கு நியமிக்கப்பட்டதால் கால பைரவர் அதாவது கால கணக்கை நிர்வகிக்கிறவர் என்கிற அடிப்படையில் நாய் வாகனம் ஒன்றை போட்டு பைரவர் என்று சொல்லிவிட்டார்கள்

    ஆனால் 7௦௦ ல் கோவில் கட்டிய தமிழர்கள் வைரவர் - அழிவற்ற ஒளி சரீரம் உள்ளவர் என்றே பெயர் வைத்துள்ளனர் .

    வளர் ஒளி நாதர் என்பது ஆத்மாவை குறிக்கிறது எல்லோருடைய ஆத்மாவும் ஒரு நாள் ஒளி சரீரம் பெற வளர்ந்துகொண்டுள்ளது

    இங்கு தல விருட்சத்தின் பெயரும் ஏறு அழிஞ்சில் மரம் . அழிவற்ற தன்மையை நோக்கி ஏறுகிற மரம்

    விசேசம் என்னவென்றால் இந்த மரத்தில் இருந்து கீழே விழுகிற விதை மீண்டும் இந்த மரத்தின் கிளைகளை போய் ஒட்டிக்கொள்கிறது . அப்படியே அது இலையாக வளர்கிறது
  • Kirubanandan Palaniveluchamy https://www.facebook.com/photo.php?fbid=697988140254855
    சின்னமனூர்
    அரிகேசரி நல்லூர் என்று ஆதி நாட்களில் அழைக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரில் உள்ள சிவன் கோவிலில் பைரவர் அருகில் உள்ள தேவார பாடல் மற்றும் மூர்த்தம் . திருநாவுக்கரசர் திருச்சேறை என்ற தஞ்சாவூர் அருகிலுள்ள பைரவருக்கு சிறப்புள்ள ஸ்தலம் சென்ற போது அங்கு அவருக்கு உண்டான தரிசனத்தில் இப்பதிகம் அருளியுள்ளார் சேறை செந்நெறி செல்வன் கையில் சூலம் உடுக்கை கங்கை வைத்துள்ளவர் சிவனார் - சரி வேழம் உரித்தார் . அதைப்பார்த்து அதிர்ந்து போய் நின்ற பார்வதியைப்பார்த்து ஒரு கிண்டல் சிரிப்பு சிரித்தார் அதன் பொருள் என்ன ? இந்த சிற்பி அந்த சிரிப்பை காட்டியுள்ளார் . நானும் சமீபமாக பல ஊர்களில் பைரவரை பார்த்தேன் . இந்த நமுட்டு சிரிப்பு அங்கு இல்லை உதாரணத்திற்கு இதே கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பேரானந்த யோக புண்ணகை வெளிப்படுத்துகிறார் உங்கள் ஊரில் பைரவர் இப்படி உள்ளாரா ? திருச்சேறையில் இப்படி உள்ளாரா ? இதன் பொருள் என்ன ? மெய் அன்பர்கள் விளக்கும் படி வேண்டுகிறேன் ! லிங்கோத்பவ்ர் - சிவன் கோவிலின் பின்பக்கத்தில் - பெரும்பாலும் மேற்கில் இந்த லிங்கோத்பவர் மூர்த்தம் இருக்கும் சிவன் லிங்கமாக வெளிப்பட்டார் என்று அதை சொல்வார்கள் . ஆதி கோவில்களில் சென்று பாருங்கள் - அந்த லிங்கத்தின் மேலே கோபுரத்தில் நாராயணன் இருப்பார் பூமியில் மிக ஆதி கோவில்களில் எல்லாம் சிவனும் நாராயணனும் சன்னதி இருக்கும் ஸ்தலங்கள் நிறைய உள்ளன என ஏற்கனவே எழுதிருந்தேன் அப்படி இருவருக்கும் சன்னதி இல்லாமல் தனித்தனி கோவில்கள் கட்டும் பழக்கம் பிற்பாடுதான் வந்திருக்கவேண்டும் அப்படி தனித்தனி சமயமாக - சைவம் வேறாக வைணவம் வேறாக வளரத்தொடங்கும் போதும் உண்டாகிய சிவன் கோவில்களில் மேற்குப்பக்கம் உள்ள லிங்கோத்பவருக்கு மேலே விமானத்தில் நாராயணன் இருப்பார் இதன் அர்த்தம் லிங்கம் என்பது ஆத்மா . மனித சரீரத்தில் ஒரு நபர் இருந்தாலும் அவர் சரீரமல்ல ; ஆத்மா - யாரொருவன் தன்னை சரீரமாக கருதாமல் தான் ஆத்மா என்பதை உணர்கிறானோ அவனே தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் கற்று பக்குவமடந்தவன் . அப்படி பக்குவமடைந்த சாதகன் தட்சிணாமூர்த்தியுடன் நாராயணனையும் சற்குருவாக ஏற்றுக்கொள்வான் ஏனெனில் சரீரத்திற்கு சற்குரு தட்சிணாமூர்த்தி ஆத்மாவுக்கு சற்குரு நாராயணன் அப்படி ஆத்ம உணர்வில் நின்று பரிபக்குவம் அடைந்தால சரீரமாகிய வேழத்தை உரித்து அதை ஒளி தேகமாக மாற்றி மரணமில்லா பெரு வாழ்வு நம்மால் பெற முடியும் அவ்வாறு சிவனார் வேழம் உரித்து ஒளி சரீரமாக மாறிய நிலையே பைரவர் என்பது . அவர் பைரவராகி நின்ற போது அதைக்கண்டு உமை அதிர்ந்தார் . அப்போது அவர் சிரித்து உனக்கும் இப்பக்கும் கிடைக்கும் என்று அருளினார் . பெரும்பாலும் சிவன் கோவில் கிழக்கு நோக்கி இருக்கும் . அதை வலம் வரும்போது தெற்கில் தட்சிணாமூர்த்தி யிடம் உபதேசம் கேட்டு நாம் ஆத்மாவாக உணர்ந்து வட கிழக்கு மூலையில் உள்ள பைரவரைப்போல ஒளி சரீரம் பெறவேண்டும் என்பதை உணர்ந்து வேண்டிக்கொள்வோமாக .
  • Sundarapandiyan Vijayan Please listen to this speech to know the difference between Vedanta and Siddhanta. Also he explains vividly about Rishi Vyasar and why his statue was abandoned from all saiva temples. Also he quotes important verses from many saints and explains the difference between Rishis and Saints... Also he has given quotations as to why one should not follow Vyasa's bramhasutra... 
    https://www.youtube.com/watch?v=x6kkyEeoa-M...
    Vedantha versus Siddantha - speech by Prof. S.Shanmugavel, Tuticorin, Tamilnadu, India
  • Karthi Keyan Kirubanandan Palaniveluchamy, sari iyya neegal solvadhu pool irundhal kooda thillaiyil orukaalai uyara thooki aaduvadhu naan dhan endru murugar agathiyaruku upedesam tharukirar subramaniyar gnanam 500.. padidhu paarthu vittu padhil solavum adhu sivana murugananu..athey pool vairam endral vajradhegathai adhavadhu karpadegathai kurikum oliyai eppadi kurikum..
    22 hrs · Edited · Like
  • Sundarapandiyan Vijayan ஆன்மா உச்சிகுழியில் உள்ள வெளியில் (Pineal Gland) அமைந்த ஜோதி வடிவம் இல்லையா?

    அஃது என்று உச்சரிக்கயிலே என் உள்ளுணர்வு என்னை உச்சிகுழிக்கு தான் எடுத்துச் செல்கிறது....

    நான் இதுவரை அறிந்த அறிவு... ஆன்மாவை... அங்குதான் காட்டியது... அதைச் சுற்றி வாசி வட்டமிட்டுக் கொண்டே இருக்கும்.. பின் உச்சந்தலைக்கும்... முன் உச்சந்தலைக்கும்... புருவமத்திக்கும்... நகர்ந்து சுழன்று சுழன்று... மெய்யுணர்வு மிக விளைந்ததே என் அனுபவம்...

    இதில் நின்று சிந்திக்கயிலே எனக்கு இன்னொன்றும் உதித்தது... அன்றைக்கு நாபி பற்றி பேசி பாதியிலேயே விட்டு விட்டோமே... அது நினைவுக்கு வந்தது.. அதை மேற்கொண்டு சிந்திக்கயிலே...

    நாபி = தாய்க்கும் சேய்க்குமான தொடர்புக்கொடி...
    தூலத்தில் தொப்புல்கொடிஎன்றால்...
    சூட்சுமத்தில்.. நம் ஆன்மா ஜோதியாய் துலங்கும் மேற்சொன்ன இடத்தில்.. கீழே பீடமாய்த் திகழ்வது நம் சூட்சும தேகம் என்று ஒரு ஞானி சொல்ல கேட்டிருக்கிறேன்...

    என் அனுபவத்தில்.. ஒரு முறையான கோவிலுக்கு போய் வழிபடும்போதோ... அல்லது வீட்டில்... மெய்யுணர்வும்... ஆன்ம தாகமும்... அதிகமாய் விளைந்த சூழலில்... உச்சிக்குழியில்... யாரோ எழுந்து குதிப்பதைப் போன்று உணர்திருக்கிறேன்... எழும் அந்த உணர்வு கூரையைப் பிளந்துவிடும் அளவுக்கு ஆவலாய்த் துடிக்கும்... இது எனது சூட்சும தேக அனுபவமாய் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்...

    இந்த சூட்சும தேகத்திலும் தாயான பரம்பொருளையும்... (பரமான்மாவையும்) சேயான சூக்கும தேகத்தையும்... இணைக்கும் இடம் தான் வள்ளல் சொன்ன நாபியாய் இருக்குமோ என்பதுதான் என் உணர்வில் உதித்த கருத்து... 

    இதை தாங்கள் உறுதிப்படுத்த முடியுமா? Hseija Ed Rian விஜயகுமார் சு கார்த்தி கேயன்
  • Sundarapandiyan Vijayan Hseija Ed Rian அய்யா இதுவரை தாங்கள் அந்த பதிவில் சொன்ன பதில்களை இங்கே தொகுத்துள்ளேன்... தயவுகூர்த்து உங்கள் விளக்கங்களை இங்கே தொடரவும்...

    From the words of Thiru Rian...

    ****************************************************************************
    உடம்பின் உனர்வுகளில் இருந்து விடுபடுங்கள், உணர்வுகளின் அசைவோ , துடிப்புகளோ, சூக்குமமான நாடியோ அல்லது இதுபோன்ற விஷயங்களோ ஆன்மா இல்லை...ஆன்மா ஒருபோதும் உடம்பில் உணரப்படுவது இல்லை, மனதாலும் கூட உணரப்படுவதில்லை...அறிவினால் அன்றி பற்றிகொள்ள அரிதாம்...மேலும் அது உச்சி குழியில் விளங்குவதும் இல்லை, உச்சிகுழி என்பது தூல சடமேயாம்...

    தூல சடமானது உயிருடன் தொடர்பு, அந்த உயிரானது அறிவுடன் தொடர்பு, அந்த அறிவானது ஆன்மாவுடன் தொடர்பு கொண்டவை...அல்லாது ஆன்மா வேறு ஒன்றுடனும் தொடர்பில் இல்லை...

    உயிரானது உடலை பற்றியது...உடலானதும் உயிரை பற்றியது...ஒன்று இல்லையாகில் மற்றதும் இல்லை..இருக்காது...அதுபோல அறிவானது ஆன்மாவுடன் இருக்கும்...அது செத்த பின்னும் ஆன்மாவுடன் இருக்கும்...அது செத்து போகாது...அதுவே செத்த பின்னும் பல அரிவுகளை ஆன்மாவுக்கு குடுக்கிறது....அது எக்காலமும் இருக்கும்...உயிரோ செத்த உடன் பிரிந்து விடும்....இதை தான் வள்ளலார் ரெண்டு வித உயிர்கள் என சொல்லுகிறார்...

    ஒன்று உடலுயிர், மற்றையது ஆன்ம உயிர்...

    தூக்கத்தில் உயிரும் உடம்பும் தொடர்பில் இருக்கும்...ஆனால் ஆன்மாவுடன் இருக்கும் அறிவெனும் உயிர் இதோடு தொடர்பில் இருக்காது....அதனால் ஆன்மா ஒன்றும் அறியாது...
  • Karthi Keyan udhalil unarvugalirundhu vidupadangal.. yeppadi iyya???
  • Karthi Keyan like vendam.. padhil sonaal mattum podhum iyya..

No comments: