Pages

Friday, September 5, 2014

புருவமத்தி - ஒரு விசாரம் 4

  • Thanga Jyothi //நாம் இப்போது உள்ள தரத்திற்கு ஏற்ற குருவை அடைந்தால் மட்டுமே அடுத்த தரத்தை அடைய முடியும் 

    ஒரு குருவிடம் கூட சரியா இல்லாதவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன அய்யா?
  • Hseija Ed Rian ஆனால் தங்கஜோதி சபை அப்படி சொல்லவில்லையே ஐயா...சிவசெல்வராசுவுக்கு திருச்சி ராமசாமி தேசிகர் “ஞான சற்குரு” என்கிற பட்டம் கொடுக்கவில்லை என்பது உண்மை...இவங்க எல்லாம் செல்வராசுவை அறியாத காலத்திலேயே எனக்கு அவரை தெரியும், அன்று இந்த பட்டம் கிடையாது...செல்வராசு சொல்வது வள்ளலாரே 12 வருடம் கழித்து இவருக்கு சற்குரு பட்டம் கொடுத்து குருபீடம் கட்டி அமரவைத்தாராம்....இது தான் கதை...வளலார் குருபீடத்தில் அமரவைத்தவர் எப்படி செத்து போகமுடியும்? இது தான் பிரச்சனை...மட்டுமல்ல ,திருவடி தீட்சையும் வள்ளலார் செய்த சன்மார்க்க சாதனை தான் என்கின்றனர்...இது எப்படி உண்மையாகும்?...திருவடி தீட்சை என்றால் அது வள்ளலாரால் சிவசெல்வராசுவுக்கு கொடுக்கப்பட்ட மாபெரும் ஞான தீட்சை என ஏமாற்றுதல் அல்லவா செய்கின்றனர் இந்த தங்கஜோதி சபையினர்?...அதை எப்படி உண்மை என ஏற்றுகொள்ளமுடியும்?..Kirubanandan Palaniveluchamy
  • Hseija Ed Rian வள்ளலாரோ , தொழுவூர் வேலாயுத முதலியாரோ காரணபட்டு கந்தசாமி அவர்களோ மற்றும் ஏனைய வள்ளலார் சீடர்களோ விளக்காத ஒரு விஷயத்தை வள்ளலாரே வந்து கொடுத்து குரு பீடம் கட்டி அமரசெய்தார் என்பது சுத்த மோசடித்தனமல்லவா?...அதுமட்டுமல்ல கன்யாகுமரி தேவி கோ்யிலில் இருக்கும் வாலை பரமேஸ்வரி சன்மார்க்கத்திற்ரு என்ன தொடர்பு?..அந்த வாலை அம்பிகையை வணங்காதவர்களுக்கு சன்மார்க்கம் கிடைக்காதாம் ..எப்படி இருக்கிறது கதை?...இதுவென்ன 21 நூற்றாண்டு சன்மார்க்கமா என்ன?
  • Hseija Ed Rian ”சாகாதிருப்பவனே சன்மார்க்கி” என சன்மார்க்கத்திற்க்கு இலக்கணம் வகுத்துவிட்டு பெருமானார் அதை வெளிப்படையாக காட்டி சென்றிருக்க,...எங்கள் குரு செத்துபோகவில்லை, சில காரணங்களால் உடலை விட்டு சென்றிருக்கிறாரே தவிர மரணமடையவில்லை...அவர் சாகாத நிலையிலேயே உள்ளார் என ஏனையவர்களை கிறுக்குதனமானவர்கள் என நினைக்கும் இவர்களை திருத்த வள்ளலாரே நேரில் வந்தாலும் கூட முடியாது போலிருக்கிறது...வள்ளலாருக்கும் கூட வேண்டுமென்றால் தீட்சை கொடுப்பார்கள் போல தோன்றுகிறது
  • Hseija Ed Rian Thanga Jyothi ஜோதி மலர் Logan Nathan விளக்கம் சொல்லுங்கள் நண்பர்களே....சாகாதிருப்பவன் அல்லவா சன்மார்க்கி?...அல்லது “சில காரணங்களால் உடலை விட்டு போனவன்” சன்மார்க்கியா?...உங்கள் குரு சன்மார்க்கியா இல்லையா என்பதை தெளிவு படுத்துங்கள்...தெளிவை உருவாக்குங்கள்...சீடர்கள் செய்யவேண்டிய கடமை கூடவல்லவா இது?...”எங்கள் குரு சன்மார்க்கி தான்” என துணிவுடன் சொல்ல எந்த சீடர்களாவது செல்வராசு உருவாக்கி இருக்கிறாரா என்ன?..இருந்தால் வந்து சொல்லுங்கள் உங்கள் மரணித்து போன குரு எந்த விதத்தில் சன்மார்க்கி?...அதன் பிற்பாடு வள்ளல்லர் கொடுத்த உண்மை தீட்சை தன் திருவடி தீட்சை என வழங்குங்கள்...எங்கள் தீட்சை மரணமில்லா பெருவாழ்விற்க்கு அழைத்து செல்லும் என விளம்பரம் செய்யுங்கள்.....
  • விஜயகுமார் சு முதலாளி யார் என்றே தெரியாத நிலத்தில் பாடுபடும் பாட்டிற்கான கூலியை எங்கு சென்றுவாங்க இயலும் என்பதை ஞிந்திக்க மறுக்கும் இவர்களின் காதுகளில் ஊதப்படும் சங்கோசை செவுடன் காதில் ஊதியதற்கு ஒப்பாகும்
  • Hseija Ed Rian Pothigaipriyan Vallalar இருக்கார’ அதோ இவங்க கூட வடலூர் போனாரோ என்னமோ?..ஆளையே காணோம்...ஐய்யா எங்க போனாலும் இந்த தங்க ஜோதி குருவின் ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்..ஏனெனில் அவர் அருமையான சீடர்களை சேர்த்து ஒரு வித ஆன்மீக, வள்லலார் சார்ந்த,பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் என்பதை கருத்தில் கொண்டு பிரார்த்தனை செய்வது ஆன்மீக சாதகர்களுக்கு நல்லதுவே..ஆகையால் பிரார்த்திப்பொம் அடுத்த பிறப்பிலாவது நல்லறிவை ஆண்டவர் கொடுத்தருள்வாராக....
  • Thanga Jyothi நன்றாக உரைக்கிறது. அது போதும். தங்க ஜோதி ஞான சபை சொல்வதை நம்ப வேண்டியது இல்லை. தவம் செய்து அனுபவத்தில் தெரிந்து கொள்ளுங்க...லட்டு எப்படி இனிக்கும் என்று ஒருவரால் ஒருவருக்கு புரிய வைக்க முடியாது.
    முதலில் ஒரு குருவை பணிந்து அவர் அருள் பெறுவோம். பிறகு பல நூறு குருவை பெறுவோம் ..
  • Thanga Jyothi என் குரு வள்ளல் பெருமான் சன்மார்க்கி தான்.
  • Thanga Jyothi நீங்கள் சொல்வது சரியா இருந்தால் கூட 
    தங்க ஜோதி அன்பர்களுக்கு குரு அய்யா நல்ல ஒழுக்கம் 
    குரு மரியாதை குரு பக்தி கற்று கொடுத்து உள்ளார்கள். 
    எப்படியும் உருப்பட்டு விடுவர். தீட்சை கொடுத்த குருவை 
    மதிக்க தெரியாதவன் மனிதன் அல்ல. அவனுக்கு ஞானம் 
    கிடைப்தே சந்தேகம்.

    (மரமண்டை)ஒன்றுமே தெரியாதவர்கலை கூட நல்ல நிலைக்கு 
    அழைத்து சென்று உள்ளார்கள். அதுவே மிக பெரிய சாதனை. 
    நம் கூட தீக்ஷை வாங்கியவன் இப்படியா என்று dash எரிச்சல் 
    யாருக்கு?
  • விஜயகுமார் சு rianஐயா விடுங்கள் புத்திக்கு சொல்லலாம் .....பு-த்திக்கு சொல்லமுடியாது
  • Thanga Jyothi புலாலை நிறுத்தவும் விஜ்யகுமார் அவர்களே.
    உங்கள் அருமை எல்லோருக்குக்ம் தெரியும்.
  • விஜயகுமார் சு புலாலால் நிறைந்த உடம்பை எங்கய்யா விடரது?
  • Thanga Jyothi புலால் உண்ணும் தங்களுக்கு வள்ளலார் பெயர் சொல்ல கூட தகுதி இல்லை.
  • விஜயகுமார் சு இருக்கட்டுமே......அதனால் என்ன?.இந்த விஞயத்தை வேண்டிய அளவு அலசியாகிவிட்டது.உருப்படியா இங்க அன்பர்களால எழுப்பப்படற கேள்விக்கு பதில சொல்லுங்க
  • Pothigaipriyan Vallalar அன்பர்களே ! நாம் அனைவரும் ,,,,,,, உண்மையை பெருமான் நமக்கு தெளிவிக்க விண்ணப்பம் செய்வோம் ,,,,,,,,,ஏற்கனவே அருட்பாவிலும் ,,உரைநடைபகுதிலும் கடவுள் விளக்கியுள்ளார் ,,இருந்த போதிலும் ,,நம் அன்பர் சிலர் மறுத்து வருகிறார்கள் ,,,மற்ற அன்பர்கள் நாம் அவர்களுக்காக அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வையுங்கள் ,,விண்ணப்பம் வைப்போம் ,,,,அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி ! ,,,எல்லா உயிகளும் இன்புற்று வாழ்க !
  • Logan Nathan நல்லது வள்ளல் மலரடி வாழ்க வாழ்க. 
    வள்ளலார் பிறந்த நாளான புரட்டாசி மாதம்
    சித்திரை நட்சத்திரம் அன்று வள்ளலார் குருபூஜை கொண்டாடுவோம் 26-09-2014
  • Pothigaipriyan Vallalar Logan Nathanவள்ளலார் பிறந்த நாள் 05-10-1823..அன்று தானே நண்பரே ! நீங்கள் இங்கே குறிபிட்டது வேறு தேதியாக இருக்கிறது ,,அதற்கு என்ன காரணம் ? விளக்க சொன்னால் எல்லாருக்கும் பயனாக அமையும் ,,,,,,,
  • Pothigaipriyan Vallalar அதனில் ஒன்றும் தெளிவாக வில்லை Logan Nathanஅய்யா தாங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும் ,,,
  • Logan Nathan ஐயா சின்ன யோசனை செய்தால் போதும் மாதப்பூசம் எப்போது?
  • Thanga Jyothi மாதம் நட்சத் திரம் என்று குரு பூஜை செய்வது வழக்கம். 
    எல்லா குரு பூஜை(அவதார தினம்) அப்படி செய்வது தான் வழக்கம்.நாமும் அதை படி செய்வதே சிறப்பு. 

    ஊரு ரெண்டு ஆனால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். கருத்தில் கொள்க.
  • Hseija Ed Rian //ஊரு ரெண்டு ஆனால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். கருத்தில் கொள்க//...இது என்னை சொன்னதாக இருக்குமோ?...சே...சே.. இருக்காது அந்த சிவனாரை சொன்னதா இருக்குமோ...அவன் தானே கூத்தாடி?...அப்படி இருக்கலாம்...
  • Logan Nathan அட சீவமேனு சும்மா இருங்கப்பா
  • Hseija Ed Rian //தீட்சை கொடுத்த குருவை மதிக்காதவன் மனிதன் இல்லை////சரியான கமெண்ட் தான் ஐயா....நம் கூட தீட்சை வாங்கியவன் இப்படியா என dash எரிச்சல் யாருக்கு/// சபாஷ் அதுவும் ஞாயமான கேள்வியே...இதுக்கு என்ன பதில் சொல்ல போறே ரியான்???...இது தானே கேள்வி?...இதுக்கு பதில் வேணும் அப்படித்தானே/? Thanga Jyothi
  • Hseija Ed Rian நாங்க வித்தை வாங்கினது ஒரு ரகம்...அது சுவராசியமானதும் கூட...தெரியவேண்டியது தான்....நாங்க மூணு பேர்....ஒரு குரு கிரியா யோகம் தெரிஞ்சவர், அவர் பெயர் சுவாமி பிரமானந்த கிரி மஹராஜ்...சிவசெல்வராஜ் திருவடி வித்தை தெரிஞ்சவர், மூணாவது ஆள் நான், நான் சித்த வித்தையின் 18 கதிகளை தெரிந்தவன்....சிவசெல்வராசுவுக்கு கிரியா தெரியாது, எனக்கு திருவடி தெரியாது...பிரம்மானந்த கிரிக்கு 18 கதி தெரியாது....இது தான் விஷயம்...நா கிரிக்கு 18 கதி கொடுத்தேன், கிரி செல்வராசுவுக்கு கிரியா கொடுத்தார், செல்வராசு எனக்கு திருவடி கொடுத்தார்.....இதுல தமாசு என்னவெண்ரால் எல்லோரும் அங்கும் இங்கும் குருவும் சீடனும்.....யாரும் யாருக்கும் தட்சிணை ஒன்றும் கொடுத்துகொள்ளவில்லை......இதுக்கு என்ன முறை என சொல்லவேண்டும்....? Thanga Jyothi
  • Hseija Ed Rian அதுக்குமேல ஈஸ்வர பட்டருடைய சீடர் ஈஸ்வர பிரஸாத், அவரிடம் செல்வராசு வாலை பூஜை கற்று கொண்டார், நான் அதே ஈஸ்வர பிரஸாத்திடம் இருந்த சிவசார வித்யா என்பதை கற்ருகொண்டேன்...அது திருவடி தீட்சைக்கு மேலான மூன்றாவது படி நிலை ஞான வித்தை...அது செல்வராசுவுக்கு கொடுக்கப்படவி;ல்லை....இது தான் செல்வராசுவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு...Thanga Jyothi ஜோதி மலர் Logan Nathan
  • Hseija Ed Rian இப்போது எல்லாம் விட்டு விட்டு சன்மார்க்கத்துலே இருக்கேன்...திருப்தியாக....சிவசெல்வரசு ஒன்பது பேரை நியமித்தால் வழிமுறையாக ஆனால் சிவசார வித்தை எட்டு பேருக்கு தான் தெரியும்..மொத்தம் எட்டே எட்டு பேர் தான் இருக்கோம்...நாங்க இதுவரை யாருக்கும் கொடுத்ததில்லை..அது ஈஸ்வர பட்டருடைய வித்தை....புரிகிறதா...வாலை பூஜை தான் செல்வராசு மந்திர தீட்சை வாங்கினேன் என்பார்...
  • Thanga Jyothi //அது திருவடி தீட்சைக்கு மேலான மூன்றாவது படி நிலை ஞான வித்தை...

    இதில் உடன்பாடு இல்லை. குரு அருளால் தெரியட்டும்.
  • Thanga Jyothi நீங்க சன்மார்கியா? Hseija Ed Rian Pothigaipriyan VallalarIndranx Avataram
  • Pothigaipriyan Vallalar Hseija Ed Rianஇப்போது எல்லாம் விட்டு விட்டு சன்மார்க்கத்துலே இருக்கேன்...திருப்தியாக.... .=================================================================சரியான தெளிவு ,,சரியான புரிதல். மேம்பாடு ...=======================================நன்றி கூறுவோம் ,,,,இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்சோதி இறைவனை வணங்குவோம் ,,,அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி !
  • Logan Nathan அன்பர்களே ! நாம் அனைவரும் ,,,,,,, உண்மையை பெருமான் நமக்கு தெளிவிக்க விண்ணப்பம் செய்வோம் ,,,,,,,,,ஏற்கனவே அருட்பாவிலும் ,,உரைநடைபகுதிலும் கடவுள் விளக்கியுள்ளார் ,,இருந்த போதிலும் ,,நம் அன்பர் சிலர் மறுத்து வருகிறார்கள் ,,,மற்ற அன்பர்கள் நாம் அவர்களுக்காக அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வையுங்கள் ,,விண்ணப்பம் வைப்போம் ,,,,அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி ! ,,,எல்லா உயிகளும் இன்புற்று வாழ்க ! 
    நன்றி நன்றி
  • Logan Nathan இதுவே சரியானது நன்றி Pothigipriyan
  • Hseija Ed Rian சன்மார்க்கி என துணிவுடன் சொல்லிகொள்ள தகுதியற்றவன்...ஆனால் சன்மார்க்க மாணவன் என துணிவுடன் எங்கும் கூறுவேன்...
  • Thanga Jyothi நீங்கள் சாகா மால் இருப்பீரா?
    மற்றவர் அனுபவம் பற்றி விமர்சனம் எப்படி நீங்கள் சொல்ல முடிகிறது?
    இறைவன் ஜோதி இல்லை என்று எப்படி சொல்ல முடிகிறது? 

    @rian
  • Thanga Jyothi வள்ளலார் ஒளி உடம்பு பெற்று உள்ளார? Hseija Ed Rian
  • Hseija Ed Rian திருவடி தீட்சைக்கு மேலன மூன்றாவது படிநிலை சிவசார வித்யா என்பதில் உடன்பாடு கொள்லவேண்டாம்...ஏனெனில் ஈஸ்வர பிரஸாதின் மறைவு வரை செல்வராசுவுக்கு இப்படிஒரு வித்தை அவரிடம் இருக்கிறது என்பது கூட தெரியாது...பிரஸாதின் மறைவுக்கு பின்னரே சுவாமி பத்மேந்திரர் சொல்லி தான் செல்வராசு அதை அறிந்து கொண்டார்.... தெளிவு அடையவேண்டில் ராமசாமி தேசிகரின் மற்றொரு சீடரான ஜோதி மூலிகை கணபதி ஆசானிடம் கேட்டால் தெளிவு பெறலாம் Thanga Jyothi
  • Hseija Ed Rian ஜோதி என்றால் என்னவென நான் சொல்லுவது பொய்யெனில் வள்ளலார் சொல்லுவதை நன்றாக பாருங்கள், அவரே ஜோதி என்பதற்க்கு விளக்கம் தந்துள்ளார்கள்.....பேருபதேசம் பாருங்கள், புரிந்துகொள்வீர்கள்,,அல்லாவிட்டால் இதுவும் பரி பாஷை தான் என ஒதுக்கி தள்ளிவிடுங்கள்...கவனியுங்கள்.....””””அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

    என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.”””.....இதில் மஹாமந்திரத்தின் பொருள் என்னவென பெருமானார் சொல்லுகிறார் என கவனியுங்கள்....”””
    ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்””’””’---இதுவே மஹாமந்திரத்தின் பொருள்.....இதில் எங்காவது ஜோதி என ஒரு சொல்லை சொல்லுகிறாரா பெருமானார்?..இல்லை. அதற்க்கு பதில் ”””பெரும்ஜோதி என்பதற்க்கு பேரருள்””” என்றே பொருள் கொள்கிறார் வள்ளல் பிரான் அல்லவா?...அப்போது ஜோதி எங்கே போனது ??????சொல்லுங்கள்/////Thanga Jyothi ஜோதி மலர் Logan Nathan
  • Thanga Jyothi அறிவுக்கு அறிவே இறைவன் என்றும் சொல்லுவர். 
    உரைநடை படி - திருமுறை படி என்று சொல்லும் நீங்கள்.
    ஒருவரியை எடுத்து சொல்வது சரியாகுமா? 
    மற்ற இடங்களில் என்ன சொல்லி உள்ளார்?
    அப்படி என்றால் ஒளி உடம்பு என்றால் என்ன?
  • Kirubanandan Palaniveluchamy Hseija Ed Rian எல்லாம் நன்மைக்கே அவரவர் தரத்திற்கு ஒரு குரு அவசியம் அதன்பிறகு அடுத்த பிறவியில் வளர்ச்சி கிடைக்கும்

    செல்வராசு குரு என்பதில் சந்தேகமில்லை ஆனால் சற்குரு என்பதற்கும் அதுவும் ஞானசற்குரு என்பதற்கும் தகுதியில்லை என்பதை என்று அவரது சீடர்கள் புரிந்து கொள்கிறார்களோ அன்றைக்கு அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பது அளவுகோல்

No comments: