Pages

Friday, September 26, 2014

சன்மார்க்க சாதனை - 3

  • Brammasri Yasagan வாசியில் தொடங்கி வாசியிலே முடியும் இந்த மாய வாழ்வானாலும் சாரி பேறொளியாய் அறிவாய் உள்ள ஜீவனில் இரண்டற கலப்பதானாலும் சுவாசி,,,
    நான்கு வேதங்களின் மொழியும் வாசியே,,,
  • Hseija Ed Rian உங்கள் வாசி தான் உலகத்தை படைத்ததோ?....
  • Hseija Ed Rian Brammasri Yasagan கேள்வி சரி தானா ஐயா?
  • Brammasri Yasagan உங்கள் வாசி எங்கள் வாசி என்று நாம் ( ஜீவராசிகள் ) இயங்க காரணமாய் இருக்கும் சுவாசத்தை எப்படி ஐயா பிரித்தீர்,,,
  • Sat Ish Hseija Ed Rian இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து உதவுங்களேன்...உண்மையை மறைத்துக் கூறியதால் சித்தர்களையே அசுத்த மாயாகாரர்கள் எனக் கூறும் வள்ளலாரே இதை ஏன் மறைக்க வேண்டும்? சத்விசாரத்திற்குள் மறைபொருளாக ஏதேனும் பயிற்சி சொல்லப்பட்டிருக்கிறதா?
  • Hseija Ed Rian அப்படியென்றால் ஒருவருக்கு வாசி வசமானதும் அனைத்து ஜீவர்களுக்கும் வாசி ஏன் வசப்படாது போகிறது ஐயா? Brammasri Yasagan
  • Brammasri Yasagan நிச்சயமாக சொல்ல பட்டிருக்கிறது வள்ளல் பெருமானார் நிச்சயமாக வெரும் அன்னதானம் மட்டுமே செய்து தன்னை ஒளியாய் மாற்றி இருக்க வாய்பே இல்லை பிறகு எப்படி அவர் ஒளியாய் தன் உடல் அங்கங்களை அனு அனுவாக பிரித்து பேறொளியில் கலந்தார் நிச்சயமாக ஏதோ ஒரு சாதனையை பின் பற்றியிருக்க வேண்டும்,,,
  • Hseija Ed Rian சித்தர்களை அசுத்த மாயாகாரிகள் என வள்ளலார் சொல்லுவது உண்மையே...ஏனெனில் அவர்கல் சுத்த வித்தையை அறியாதவர்கள்...அதையே வித்த்யா தத்துவம் எனவும் அமானிதம் எனவும் புகலுவர்கள்...அதற்க்கு மேம்பட்டது அருள் நிலை, அதற்க்கும் மேம்பட்டது சத்திய நிலை.ஏசு பிரான் அடைந்தது சத்திய நிலை, வள்ளலார் அடைந்தது அருள் நிலை.....சன்மார்க்கம் என்பது சுத்த வித்தை நிலை.....சுத்த சன்மார்க்கம் அருள் நிலை....சித்தர்கள் நிலை அதற்க்கும் கீழான அசுத்த மாயாகாரிய நிலை, அதனாலேயே அவர்களுடைய நூல்களில் சன்மார்க்க விரோதமான பலதும் காண கூடும்
  • Hseija Ed Rian சித்தர்கள் நூல்களில் உயிர்கொலை இருக்கும், மாமிச மருந்துகள் சொல்லபட்டிருக்கும், துர் மந்திரவாதங்கல் ஓட்டியம் சல்லியம் எனும் மாரன காரியங்கள் சொல்லபட்டிருக்கும்...இப்படியுள்ள பொருள்கல் எப்போதும் சுத்த வித்தியா நிலைகளில் வராது...
  • Brammasri Yasagan வாசி என்பது அனைத்து ஜீவராசிகளின் சுவாசமல்லவா அனைத்து ஜீவனிடத்திலும் வசபட்டே உள்ளது அது இல்லாமல் நாம் இப்படி பேச இருக்க மாட்டோம்
  • Hseija Ed Rian அருள் நிலை சாதனைகள் என்பது மூக்கின் ஊடே சரிக்கும் வாயுவினை கொண்டோ, கன்களில் ஒளிரும் ஜீவ கலைகலைகொண்டோ ஏனைய ஆதார சக்கர அனுஷ்ட்டான அனுபவ அனுபோக சாத்திய நிலைகளில் ம்யற்ச்சிகளினால் வருவது இல்லை. வெளிமுயற்ச்சியின்றி அருள்நிலை சாதனைகலெனும் ஆன்ம சாதனைகலால் வருவதாகும்.....அதற்க்கு “அறிவே ஆதாரம்”...வேறு புற கருவிகளோ கரணங்களோ தேவை இல்லை...Brammasri Yasagan
  • Sat Ish Hseija Ed Rian நன்றி ஐயா.. வள்ளலார் அடைந்த நிலையை காட்டிலும் ஏசு பெருமானார் அடைந்து உயர்நிலை எனில் வள்ளலார் ஏன் இதற்க்கு முன் யாரும் தன்னைப் போன்ற நிலையை அடையவில்லை என்கிறார்??
  • Brammasri Yasagan மண்ணிக்கவும் ஐயா பெருமானாரை போற்றுவது மகிழ்ச்சியே அதே சமயம் மற்ற யோகிகளை குற்றம் சாட்டச் சொல்லியிருக்கிறாரோ
  • Hseija Ed Rian வள்ளலார் ஒரு ‘வல்லவனை’ குறிப்பிட்டுள்ளார்...அவன் பூட்டிய பூட்டை யாரும் திறக்க வரவில்லை என கூறுகிறார் என்பதை கவனிக்கவும்.....வள்ளலார் முன்னேறியது அருள் மார்க்கம்...கிறிஸ்து அடைந்தது சத்திய மார்க்கம்...இது தான் வேறுபாடு
  • Hseija Ed Rian வள்ளலார் அருளே வடிவமானவர் கிறிஸ்து சத்தியமே வடிவானவர்...அதனாலேயே பைபிள் “ அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மிடையே வாசம் பண்ணினார் “ என்கிறது
  • Hseija Ed Rian சன்மார்க்கத்திற்க்கு சாதனையாக இருப்பது கருனை எனும் தயவு....கிறிஸ்துவுக்கு சாதனையாக இருந்தது சத்தியம் எனும் வார்த்தை
  • Hseija Ed Rian மந்திரமோ, முத்திரையோ, வாசியோ, தாரனையோ, தியானமோ முக்கியத்துவமாக அருள்நிலை சத்திய நிலைகளில் கிடையாது...அதனாலேயே வள்ளலார் கூட தியானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை
  • Brammasri Yasagan அதே பைபிலில் மேத்தேயு 7 ஆம் அதிகாரத்தை புரட்டிபாருங்கள் ஐயா சாதனை எப்படி செய்யவேண்டும் என்றும் என்ன செய்ய வேண்டும் என்றும் தெளிவாக சொல்லபட்டுள்ளது ( புதிய அதிகாரம் )
  • Brammasri Yasagan ஹஹஹ எந்த யோகியும் தவத்தால் அல்லாமல் வேர் எதுவாலும் இறைவனான பேறொளியில் கலக்க முடியும் என்று சொல்லியிருப்பதாக எமக்கு தெரியவில்லை ஐயா
  • Sat Ish நன்றி ஐயா.. முக்கியம் கிடையாதெனில் வள்ளல் பெருமானார் மறைபொருளாக சில பயிற்சியை குறிப்பிட்டுள்ளார் என தாங்களே கூறுகிறீர்கள்.. ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே ஐயா?
  • Hseija Ed Rian அது நீங்கள் வாசி யோகமான சித்த வித்தை மட்டும் தெரிந்து கொண்டிருப்பதனால் ஐயா...அதிலும் சித்த வித்தையில் உள்ள 18 கதிகல் கூட இன்னும் நீங்கள் தெரிதுள்ளீர்களா என்பதும் சந்தேகமே...அதற்க்குள்ளாக தெரியாததை எப்படி அறுதியிட்டு கூறமுடியும்?
  • Brammasri Yasagan வாசி என்பது வெளிசுவாசமல்ல அதுவே பரம ரகசியம்
  • Hseija Ed Rian 18 கதிகளுக்கு என தனியாக ஒரு பட தொகுப்பு உண்டு, கிராப் மாதிரி 6-6-6 என குறியீட்டுடன் இருக்கும் , மூன்று வேளைகளில் செய்ய பயன்படும் கதிகளை தரம் திரித்து கொள்ளப்பட்டது...
  • Brammasri Yasagan மிக்க மகிழ்ச்சி ஐயா
  • Hseija Ed Rian சிவானந்த பரமஹசரின் நேரடி உபதேசம் பெற்றவரிடம் இருந்து உபதேசம் பெற்ரவன் இந்த அடியேன்...நம்மிடமே கதையா...
  • Hseija Ed Rian அதே நபரிடம் இருந்து நித்தியானந்த சுவாமிகள் செய்து வந்த வேறொரு சித்த வித்தையும் பெற்ருள்ளேன்....அது சிவானந்தரின் வித்தையை விட வித்தியாசமானது...நித்தியானந்த மஹராஜை சிவானந்தரின் சீடர் எனவும் பலர் கூறுவர்
  • Brammasri Yasagan ஹஹஹஹ சிவானந்த பரமஹம்சரே உபதேசம் குடுத்தாலும் பயனில்லை
  • Hseija Ed Rian ஆமா...அது அப்படித்தான்....ஏனெனில் சிவானந்த பரமஹம்சரை போன்று வேறு யாராலும் “தாமரை நூல் “போன்று கதியெடுக்க கற்று கொடுக்கபடுவதில்லை
  • Brammasri Yasagan செய்ய வேண்டிய பணியை ஒரமனதுடன் செய்யாமல் வெரும் புஸ்தக ஞானத்தை வளர்த்தும் அறிந்தும் எந்த பயனும் இல்லை
  • Hseija Ed Rian கொடுப்பார்கல்..எப்படியென்றால் மரம் அறுப்பதை போன்று...வயற்று பகுதியோ ஏனைய அவயங்களோ எந்த விதமான சலனமும் இன்றி...தாமரை நூல் போன்று....நெஞ்சம் குழியிலோ தொண்டை குழியிலோ சின்ன துள்ளல் மாத்திரமாக கதியெடுக்க வேண்டுமெனில் ஒரு தடவை கூட உபதேசம் பெற வேண்டியதேயாம்
  • Brammasri Yasagan அது கற்றுக் கொடுப்பதல்ல விடாமுயற்ச்சியுடன் முழு அர்பனத்தோடும் பயிற்சியில் காணவேண்டிய அனுபவம்
  • Hseija Ed Rian 80 வருடம் நீங்கள் சொன்ன மரம் அறுபு செய்து வந்து கடைசியில் கபம் நிறைந்து கதியெடுக்க முடியாத ஆலய வாசியையும் கண்டுள்ளேன்...
  • Hseija Ed Rian இல்லை....அது கற்ரு கொடுப்பது தான்....மூன்று நான்கு நாளில் சாத்தியமாகும்...
  • Brammasri Yasagan உபதேசம் என்பது நம் ஜீவன் மறந்துபோனதை நினைவூட்டுவது மட்டுமே விட முயற்சியும் பயிற்சியும் இருந்தால் மட்டுமே அந்த நாம் மறந்து போன கதியை அடையமுடியும் அதுவே "உள்கதி"
  • Hseija Ed Rian நூறு வருடம் விடாமுயற்ச்சியுடன் மரம் அறுத்தாலும் “ஒடுக்கம்” நேராது...”ஒடுக்கம்” என்பது நுணுக்கமான ஒரு விஷயம்...அது தெரிந்தாலே வாசி வசமாகும்...அடங்கும்....நிமிடத்திற்க்கு நிமிடம் அடங்கி உடம்பு வியர்க்கும்....15 நிமிட நேரத்தில் வியர்வை வரும்...
  • Hseija Ed Rian உயிர் மேல் தூக்கும்...பாதத்தில் இருந்து...பாம்பை கண்டவுடன் உயிர் சடாரென மேல் நோக்கி கிளம்புவதை போன்று உயிர் உள் வலியும்
  • Hseija Ed Rian இதுவே “ஊர்த்துவ கதி
  • Brammasri Yasagan அது அவர்களின் தவத்தின் பயனும் அவர்களின் ஆன்ம பலத்தையும் பொருத்தது
  • Hseija Ed Rian ”கண்ட பூட்டு” தெரிந்தவர்கலை அணுகி விளக்கம் பெறவும்....
  • Brammasri Yasagan ஊர்த்துவ கதியை அடைந்தால் மட்டுமே மேல் நோக்கி பயணம் தொடரும்
  • Hseija Ed Rian உண்மை தான் ஐயா...
  • Hseija Ed Rian பழைய வித்த்யார்த்திகளுக்கு கண்ட பூட்டு தெரியும்...புது தலை முறைக்கு கண்டபூட்டு கிடைக்கபெறவில்லை....அதனால் மேலும் கீழும் என்பது மட்டும் செய்வார்கள்...நுணுக்கம் தெரியாது....யாராவது இருந்தால் அதை சென்ரு பெற்ரு கொள்ள நலமாயிருக்கும்
  • Sat Ish பெருமக்களே... வள்ளல் பெருமான் கூறும் அந்த மறைமுக பயிற்சி யாது?
  • Brammasri Yasagan ஐயா நம் தந்தை ஜகத்ஜேதி சிவானந்த பரமஹம்சர் அவரின் பிள்ளைகளுக்கு அவரே வழிகாட்டி வேற் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை
  • Brammasri Yasagan மண்ணிக்கவும் தவத்தின் அனுபவங்களை வெளியில் பகிர அப்பா அனுமதிக்கவில்லை அதானல் பல விசயங்களை வெளப்படையாக பகிர முடியாது
  • Sathiya Narayanan தாயுமானவர் பற்றி 

    சுவாசம் பற்றி
  • Hseija Ed Rian செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை----இது வள்ளுவர் கூற்று,.இதில் “செவிச்செல்வம்” என்பது ஒரு மாபெரும் சாதனை விஷயம்......எல்லாவற்றையும் விட இதை பெற்றுகொண்டவர் புண்ணியவன்
  • Hseija Ed Rian சித்தவித்தையும் செவி வழியாக உபதேசிக்கபடுவதேயாம்...அனால் அதன் உண்மை தன்மையினை வித்தியார்த்திகள் எல்லோரும் அறிந்திலர்...அறிபவர் ஒரு சிலரே....அவர்கள் மட்டும் புண்ணியவான்கள் என சுருங்க சொல்லலாம்
  • Brammasri Yasagan வாசியோகமே அந்த மறைமுக பயிற்சி 
    கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன் என்று அவரே உறைத்துள்ளார்,,,
    தனக்கு பிறகு வாசி வாசி என்று ஒருவன் வருவான் என்பதும் பெருமானாரின் வாக்கே
  • Brammasri Yasagan உண்மை இதை அப்பாவே சொல்லியுள்ளார் தாம் ஐந்து வன்கரையிலும் விதை தூவியிருப்பதாகவும் அதில் சேற்றில், பாறையில், நீரில், முட் புதரில் விழும் விதைகள் விருச்சம் ஆகா நல்ல நிலத்தில் விழுந்த விதையே முளைத்து விருச்சமாகி பூபூக்கும் என்று
  • Hseija Ed Rian அப்படி வள்ளலார் தனது நூல்களி சொல்லவில்லை...வேறு ஒரு சீடரே அப்படி சொல்லியுள்ளார்......ொரு வாசியில் இங்கே வருவாண்டி ...என சொன்னது அவரே...
  • Brammasri Yasagan பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா,,,
    ஓம் உலக சாந்தி 
    சர்வம் ஜகத்ஜேதிக்கே சமர்ப்பனம் 
    ஆத்ம நமஸ்காரம் அன்பு சகா,,,
  • Hseija Ed Rian ஆத்மநமஸ்காரம்

No comments: