Pages

Friday, September 5, 2014

அருட்பெரும்ஜோதி இறைவனை எப்படி அறிந்து கொள்ளமுடியும் ? - ஒரு விசாரம் 5

  • கார்த்தி கேயன் unmai.. sundrapadiyan vijayan avargalo, ajith avargalo endha nilaiyil erundhu pesikondu erukinranar endru ninaikindrirgal.. avargal anubavathai allava
  • Muthu Kumar "அந்த விசாரம் செய்வது எப்படியென்றால் அண்டத்தில் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் இவைகள் எப்படிப்பட்டன? அவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத்தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவதேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமும் செய்து கொண்டிருங்கள். இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால் இவ்வுலகத்தின் கண்ணுள்ள ஜனங்கள் அதைக் குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில் அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லட்சியம் செய்தல் கூடாது"

    பிண்ட விசாரம் செய்யாமல் ஆன்மானுபவத்தை எங்கனம் உணர்வது?
  • Pothigaipriyan Vallalar note=====நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.
  • கார்த்தி கேயன் meelum manathai Chirsabai agiya puruvamathiyil selutha vendum.. yaen endral kadal kaariyapaduvadhu avidathil than..
  • Hseija Ed Rian இங்கு முக்கியமான ஒரு விஷயத்தில் இருந்து விலகி போவதாக உணர்கிறேன்,..அதாவது சன்மார்க்க நாடியின் பொருள் என்னவென சொல்லாமல்..அதன் விசாரிப்பு திசை மாறி போகிறது...
  • Hseija Ed Rian நாடியென்பது ஏதொ ஒன்று செயல் படும் வழி...சுழுமுனையில் குண்டலினி செயலாற்றும் ,எனில் இங்கு சன்மார்க்க நாடியில் செயலாற்றுவது எதுவெனும் விஷயத்தில் இருந்து எல்லா சன்மார்க்கிகளும் விலகி போவதையே நான் பார்த்திருக்கிறேன்...ஜீவகாருண்யம் தயவு சத்விசாரம் என இம்மூன்றை மட்டும் பேசுவார்கள்..இந்த இடத்தில் வந்தால் யாரும் பேசுவது இல்லை..இதை விசாரம் செய்வதுமில்லை...நுணுக்கமாக விட்டுவிடுவார்கள்...இங்கு ஏதோ ஒரு விஷயம் மறைப்புண்டு கிடக்கிறது...அதை புரிந்து கொள்ளாமல் “பர” விசாரிப்பு வராது......
  • கார்த்தி கேயன் Theriyavillai Iyya.. neegaley vilaki solungal..
  • Hseija Ed Rian அண்ட விசாரம் பிண்ட விசாரத்தோட கதை முடிஞ்சுபோகும்...”பர” விசாரிப்புக்கு வரமுடியாது..அந்த பர விசாரிப்பு இல்லையெனில் சுத்த உஷ்ணம் இல்லை...உஷ்ணம் இல்லையெனில் திரை அகலாது...
  • Pothigaipriyan Vallalar இங்கு பெருமான் சன்மார்க்க நாடி என்பதும் தயவே ,,ஏனென்றால் கொடியின் விளக்கத்திற்கு முன்னும் தயவை பற்றி குறிபிட்டார் பின் கொடியை பற்றி குறிப்பிட்டு தொடர்ந்தும் அவர் தயவை பற்றியே வலியுருத்த்வதால் அவர் நாடி என்று குறிபிடுவதும் ,,,தயவே .........
  • கார்த்தி கேயன் puriyavillai.. appadiyey erundhal kooda naabiku ethil enna sambandham..
  • Sundarapandiyan Vijayan Pothigaipriyan Vallalar இல்லை நண்பரே தயவு என்றால் அதற்கும்... நாபிக்கும்....புருவமத்திக்கும்... என்ன சம்பந்தம்? தயவு கருத்திலும்.. காரியத்திலும் வேண்டும்...
  • Pothigaipriyan Vallalar அந்த தயவுக்கு அடிப்படை ஒருமை வேண்டும் என்கிறார் ,,அதாவது ஆன்ம நேயம் ,,எல்லா உயிகளையும் தனக்கு நிகராக நினைக்கும் நிலை ,,ஆம் இதுவரை வந்தவர்களுக்கு மனித நேயத்தை பற்றி வலியுறுத்தினார்கள் ஆனால் பெருமானார் ,,இங்கு சன்மார்க்கத்தில் ,,ஆன்ம நேய ஒருமை பாட்டை வலியுறுத்து அதன் விளைவாகவே ,நமக்கு ,தயவு வரும் என்றும் அதுவே நம்மை இதுவரை யாரும் ஏறாத நிலைக்கு தூக்கி விடும் குறிபிடுவது எல்லாம் அறிந்ததே ,,,பெருபதேசதில் ...........
  • Pothigaipriyan Vallalar Sundarapandiyan Vijayanநாபிக்கும்....புருவமத்திக்கும் என்று கூறினார் அதனை எப்படி ஏற்ற ஏதாவது வழி கூறினாரா தயவை தவிர ? இன்னொரு கோணத்தில் சிந்தனை செய்தால் ,,,இதற்கு முன் செய்த கூறிய மார்க்கத்தை பொய் என்று வேறு கூறிவிட்டார் ,,,அப்ப நாம் எப்படி இதற்கு முன் இருந்த சைவ சித்தாந்தமோ அல்லது சித்தர் மார்க்கமோ பற்றி எப்படி சிந்தனை செய்ய முடியும் ,,,,,அவர் பொய் என்று கூறிய மார்க்கத்தை பற்றி எப்படி சிந்தனை செய்ய முடியும் ! அதுவும் உண்மையை மறைத்து விட்டனர் என்று வேறு கண்டிக்கிறார் ....
  • Hseija Ed Rian ஏதோ விட்டு போகுது என நண்பர் பிரியனுக்கு தெரிகிறது...ஆனால் தெரியவில்லை
  • Hseija Ed Rian இங்கெ பேருபதேசம் என்பது பெருமானார் எழுதி வைத்து பதிப்பிக்க பட்டிருக்கும் விஷயம் இல்லை...இது பெருமானார் சென்றபின், பாலகிருஷ்ணபில்லை அவர்கள் அந்த பேருபதேசத்தின் உரை என்னவென அப்போது கேட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என விசாரித்து ரெண்டு பேரை கண்டுபிடித்து அவர்கள் சொல்ல கேட்டு குறித்து எடுத்து கொண்ட உரையே நாம் இன்று படிப்பது...அல்லாது வள்ளலாரே எழுதி வைத்திருந்தது அல்ல...கேட்டவர்கள் சொன்னதே இருக்கிறது...வள்ளலார் சொல்லியிருக்க கூடிய அனைத்தும் இருக்கிறது...இப்படித்தான் பேருபதேசம் அன்று பெருமானர் பேசினார் என திட்டவட்டமாக கூறமுடியாது...அதுவும் கேட்டவர்களின் ஞாபகத்தில் இருந்தவையே இவைகள்...சில போது அவர்கள் சிவற்றை மறைத்தும் இருக்கலாம்...உண்மைதானே?
  • Hseija Ed Rian இங்கு ஏதோ ஒரு விஷயம் மரைக்கபட்டுள்ளது...அல்லது விடுபட்டு போயிள்ளது நிச்சயம்
  • Pothigaipriyan Vallalar சரிதான் .அய்யா ,,,பேருபதேசம் மற்றும் ஆறாம் திருமுறை ..இரண்டும் கருத்துகள் ,,ஒன்றிதானே போகிறது ,,,பெரிய வித்தியாசம் ஒற்று இல்லையே ,,,,நாம் பிரித்து பார்ப்பதற்கு
  • Hseija Ed Rian கேட்டவர்கள் எந்த அளவுக்கு பெருமானார் சொல்லியவற்றை புரிந்திருப்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்...என்றாலே நமக்கு விஷயத்தின் கருத்து புலப்படும்
  • Sundarapandiyan Vijayan Pothigaipriyan Vallalar உதாரணமாக... நீங்கள்...இப்போது எல்லா உயிர்களையும் சமமாகத் தான் கருகிறீர்கள்... அஃது ஒருமையெனின் பிறகு ஏன் உங்களுக்கு அந்த தயவு காரியப்படவில்லை...?

    உங்கள் கருத்தில் உள்ள அந்த ஒருமை... உணர்வில் வரவேண்டும்.... அதற்க்கு இறை மீது உருக்கம் வேண்டும்... உருக்கதிர்க்கு நன்றி வேண்டும்...
    இறைவன் நமக்கு இதுவரை செய்த எல்லாவற்றிற்காகவும்... நன்றியுடன் உருகி வேண்டிட... காதலாகி கசிந்துருகி கண்ணீர்மல்க வேண்டும் திறம் பெற்றுவிட்டால்... மற்றவை நமக்கு அவர் தெரிவிப்பார்...

    அதைத் தானே பெருமான் "நினைந்து நினைத்து..." என்னும் பதிகத்தில் பாடியுள்ளார்... (ஞானசரியை)
  • Pothigaipriyan Vallalar ம்ம் விட்டு போனதை எல்லாம் விளக்க தானே பெருமான் இருக்கிறார் ,,,இவ்வளவை விளக்கினவர் ,,,அதை விளக்காம் விடுவாரா ,,,பக்குவம் வந்தவுடனே எல்லாவற்றையும் விளக்கு கொடுப்பா வள்ளல் பெருமான் .....முயற்சியுடன் இருப்போம்

No comments: