Pages

Monday, September 8, 2014

சன்மார்க்கிகள் வள்ளலாரின் உருவ வழிபாடு பண்ணலாமா - 1


News Feed

Can we have Vallalperumanar Statue in home and pray? Since many of sanmarka annbars are telling that they are following Sanmarka path and keeping Vallalperumanar statue in their home and doing pooja..
  • Hseija Ed Rian சன்மார்க்கத்தில் இப்படியான உருவ வழிபாடு கொள்லலாமா?...தயவு செய்து அன்பர்கள் விளக்கம் நல்கவும்.....Mupa Balu Vijayan SrinivasanSundarapandiyan Vijayan Pothigaipriyan Vallalar Indranx Avataramகார்த்தி கேயன் விஜயகுமார் சு ....Muthu Kumar
  • விஜயகுமார் சு அவர் சிலையை மட்டுமல்ல.....அவரையே கடவுளாகவும் வணங்கலாம்.....அவர் தான் ஒன்றும் கேட்கப்போவதில்லையே
  • Sundarapandiyan Vijayan என்னைக் கேட்டால்.. அது அவரவர் பக்குவத்தைப் பொறுத்தது... என்பேன்...
    ஏனெனில்... உருவம் சிலபேர்களுக்கு நினைவுருத்திகொண்டே இருக்கும் ஒரு கருவியாய்ப் பயன் படுகிறது... அதில் தவறொன்றும் இல்லை...
    அந்த நிலை கடந்த பேர்களுக்கு உருவம் அவசியமில்லை... அவசியம் ஏற்பட்டால் எந்த ஒரு கருவியும் நல்லதுதானே...
    ஆனால் அவர் சொன்ன கருத்துக்களை உங்கள் கருத்தில் வைக்க வேண்டும் என்பது தான் முக்கியமானது... உருவம் வைப்பதும்... வைகாததும்... எதையும் நமக்கு கற்றுக்கொடுக்காது...
  • Mageswari Selvam We r years of Vallalar 's ardent devotee. We don't have statue but we have a photo of Aiya,. It's all what u believe n what u perceive from Aiya's teaching. If u go deep inside or core teaching of Ramalingam Aiya, practice of Jeevakarunyanem n feeling Aiya within u not outside (puram).
  • Sarojeni Nani Amboo Vallalar has said he is not a statue dont put in that.. go deep in within not seek outside .. jeevakurunyanem is main door of light within light ..JOTHI...
  • Muthu Kumar தன்னை வழிபடும் வழக்கம் வந்துவிடக் கூடாது என்றுதானே மண்ணால் செய்த தனது உருவ பொம்மையை போட்டு உடைத்ததாகச் சொல்லப் படுகிறது, எனில் சன்மார்க்கிகள் உருவ வழிபாடு செய்வது சன்மார்க்கத்திற்கு ஏற்புடையதன்று.
    எனினும் அவரின் உருவப்படத்தை வழிபாட்டு நோக்கத்திற்கல்லாமல் தன்சக சன்மார்க்கியின், குருவின் நினைவாக வைத்துக் கொள்வது நமது லட்சியம் வழுவாமல் செல்ல உதவும்.
  • Hseija Ed Rian உருவ வழிபாடு கொள்ளுவோருக்கு ஒரு எச்சரிக்கை...........நீங்கள் எத்தனை பேர் “அலகை” என்பதனை தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்?...”அலகை “ என்பது என்ன?..வள்ளலார் “அலகை” என்பதனை குறிப்பிட்டுள்ளார்கள், அது என்ன என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...ப்ளீஸ்...
  • Hseija Ed Rian Kathir Kathirvelu ஜோதி மலர் Mupa Balu Kirubanandan Palaniveluchamy தெரிஞ்சா சொல்லுங்க ஐயா யாராவது?
  • Hseija Ed Rian No body is here to explain what it as?....
  • Hseija Ed Rian ஐயாமார்களே...மனிதன் தவிர ஏனைய ஜீவஜெந்துக்கள் செத்து போனால் நரகத்துக்கு போகுமாண்னு யாருக்காவது ஒரு பதில் இருக்குதா?..அல்லது சொர்க்கத்துக்கு போகுமா?...நீங்க எல்லாம் சன்மார்க்கிகள் தானே?...அதுக்கு அப்புறம் இந்த விக்கிரக ஆராதனைகாரர்கள் எங்க போவாங்க என சொல்லுகிறேன்
  • Kirubanandan Palaniveluchamy அலகை அசுர சக்தி அல்லது மாயை
  • Hseija Ed Rian கொஞ்சம் உண்மை
  • Hseija Ed Rian “அலகை” என்பதை தெரிந்தவர்கள் கொஞ்சம் பெர்தான் இருக்கிறார்கள்...தெரியாதவர்கள் தான் உருவ வழிபாடு செய்கிறார்கள்
  • Hseija Ed Rian பெரும் ஆண்டவர் ”மனிதர்களுக்கு மட்டும்”கொடுக்கும் இரு பொருள்களே “வித்தியா தத்துவம்” எனும் அமானிதம், ரெண்டாவது என்பது “அலகை”...வித்யா தத்துவம் விளங்கினவனுக்கு அலகை இருக்காது...விளங்காதவன் அலகை பொருந்தும்....உயிர் உள்லவனுக்கு கொடுக்கப்படுவது வித்தியா தத்துவம் , எனில் செத்தவனுக்கு கொடுக்கபடுவது “அலகை”..இதை ஆண்டவனால் அல்லாது மற்றமுடியாது....இதுவே “செத்தாரை எழுப்புதல்”
  • Hseija Ed Rian வித்தியா தத்துவம் விளங்காத ஒருவனும் அலகையை தவிர்க்க முடியவே முடியாது
  • Hseija Ed Rian அலகை பொருந்தினவன் எக்கோடி காலத்துக்கும் பிறக்கவே மாட்டான்..அவன் கதை அவ்வளவு தான்.....இது தான் அலகையின் ரகசியம்
  • Hseija Ed Rian வித்தியா தத்துவம் பொருந்தினவன் மீண்டும் பிறப்பான்...மேல்நிலை அறிவுடன்
  • Hseija Ed Rian எத்தனை பெரிய அந்தஸ்தை உடையவனாலும் சரி, எத்தனை பெரிய விஞ்ஞானியானாலும் சரி. எத்தனை பெரிய ஆன்மீகவாதியானாலும் சரி, எத்தனை பெரிய அரசனானாலும் சரி , அலகையை தவிர்க்க வித்தியா தத்துவம் பொருந்துவது அவசியம். அல்லாவிடில் அலகை தேகம் பொருந்தியே தீரும்
  • Sundarapandiyan Vijayan Hseija Ed Rian இதனால் தான் ஒரு வேளை ஞானிகளின் ஜீவசமாதிகளில் அவர்கள் உருவத்திற்கு பதிலாக உரு-அருவ ரூபமாய் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்களோ ?
  • Hseija Ed Rian சன்மார்க்கி என சொல்லிகொண்டாலும் ஒருவன் உருவத்தை வழிபடுவானாகில் அவன் அலகையை அன்றி எதை பொருந்த முடியும்?...பொருந்தியே தீரும்.அதனாலேஎயே வள்ளலார் தன் உருவம் உருவாக்கபட்டது கண்டவுடனேயே அதை தகர்த்தெறிந்தார்....ஆனால் சன்மார்க்கம் என சொல்லிகொண்டு அலகையை பூஜிக்கின்றனர். இறைவனின் சொரூபத்தை அன்றி வேறெந்த சொரூபத்தை பூஜிக்கிறவனும் அலகையை தான் பூஜிக்கிறான் என அறிந்துகொள்ளுவதில்லை.இறைவனின் சொருபமோ தயவே வடிவமான அருள்....அதை சடமான உருவத்தில் கானமுற்படுபவன் அலகையின் தீவிர பக்தன் தான் என்பதில் ஐயம் வேண்டாம்....விஜயகுமார் ஐயாவிடம் கேட்டு பாருங்கள் மேலும் விளக்குவார்.
  • Sundarapandiyan Vijayan சில ஞானிகள் இலிங்க சொரூபமாய் சமாதி அடைந்ததும் உண்டு... அது ஒருவகை சித்துவிளையாடல் என்று ஞானிகளின் கதைகளில் இருந்து அறிகிறோம்...

    அவ்வகை இலிங்கங்களே சுயம்பு இலிங்கங்கள்... உதாரணம் பட்டினத்தார்... 
    முதலான பலப் பல சுயம்பு இலிங்க கோவில்கள்...

    சில ஞானிகளின் கோவில்களில் அவர் ஜோதியில் கலந்துவிட்டார் என்று அடையாளமாக ஜோதி சொரூபமான இலிங்கத்தை பிரதிஷ்டை செய்த வரலாறுகளையும் படித்ததுண்டு...

    இந்த அலகயில் சிக்கிக் கொள்ளும் சூழல் இருக்குமாயின்...

    63 நாயன்மார்களுக்கும், முருகனுக்கும், சிலைகள் வைக்கிறோமே... அவர்களை வழிபட்ட ஞானிகளும் ஜோதியில் கலந்தாய்ப் படித்திருக்கிறோமே... (உதாரணம் நந்தனார்... திருஞானசம்பந்தர்... etc...) அதைப் பற்றி தங்கள் கருத்து என்ன அய்யா Hseija Ed Rian
  • விஜயகுமார் சு பஞ்சபூத்த்தையும் ஏவலாக்கி கொண்டவர்களுக்குமரணம் ஏது?.அருட்பெருஞ்சோதி என்ற மெய்பொருளை உணர்ந்து தன்தேகத்தை காயசித்தி செய்து அதன்மூலம் பனிரெண்டு வருடம் யோகம் முயன்று அதன மூலம் சொரூப சித்தியை அடைந்து இறையோடு இறை ஆகன்றனர்.அந்த யோகத்தை கை கொள்ளவே சமாதி நிலையை மேற்கொள்கின்றனர்.யோக சித்தியின் முடிவில் பஞ்சபூதங்களில் ஒன்றை தேர்வு செய்து உருவத்தை அருவமாக்கி சொரூப யிலையை அடைகின்றனர்.இ
  • விஜயகுமார் சு நாம் சிலாகித்து பேசும் யோகம் பிரணாயாம்ம இது போன்ற நிலையில் நம் உடலில் நடப்பதில்லை.அதை தான் ஞானிகள் உளவு என்கின்றனர்.அது எங்கே நடக்கிறது என்பதே நாம் அறிய வேண்டிய உளவு
  • Hseija Ed Rian excellent...vijayakumar sir
  • விஜயகுமார் சு அந்த வாசி ஒடுங்கும் இடமான ஆதம்பாத த்தை அறியா தொழுகை ஆற்றில் கரைத்த புளி என ஞானிகள் கூறுவதும் இதனாலே
  • விஜயகுமார் சு வாசி எனப்படும் அது அமுதமாய் உள்ளது என உணராமல் மோசம் போனோர் கோடி என சிவ்வாக்கியர் குறிப்பிடும் அந்த வாசியே அருட்பெருஞ்சோதி
  • விஜயகுமார் சு இதை தான் வள்ளுவர் பெருந்தகையோ"அறிவுடயார் ஆவது அறிவர் அறிவிளார் அஃதறி கல்லாதார்" எள உணர்த்தினார்
  • விஜயகுமார் சு ஆ என்பது என்னவென்றும் அஃதறி எளப்படுவது என்னவென்று உணர்வதே ஞானம்.
  • விஜயகுமார் சு சிவலிங்க ரூபத்தை விளக்கும் போது " தாயும் தந்தையும் மருவியது போலவே காணும் அந்த விந்து நாதம் என மனதில் நிலை நாட்டல் நலம்
  • Sundarapandiyan Vijayan ஆ = பசு = ஆன்மா
    அஃது = அது உள்ள இடத்தை ஒலிப்பதால் உணர்த்துவது 

    சரியா? விஜயகுமார் சு
  • Hseija Ed Rian ஒரு சின்ன திருத்தல், லிங்கமானது ஆவுடையில் சேரும் நிலையில் இருப்பதில்லை....ஆவுடையில் இருந்து வெளிப்படு நிலையில் இருக்கும்...அதாவது லிங்கத்தின் முகப்பு வெளிபட்டுவரும் நிலை..உட்செல்லும் நிலை இல்லை என்பதை கவனிக்கவும்
  • விஜயகுமார் சு நீங்கள் கூறுவது theory.practical is somewhat different
  • விஜயகுமார் சு அதை தான் தலைகீழ் கால் மேல் என குறிப்பிடுகின்றனர் ஐயா
  • Sundarapandiyan Vijayan விஜயகுமார் சு புரியவில்லை அய்யா... நான் வெளிப்படையாகவே கேட்கிறேன்...

    ஆன்மா உச்சிகுழியில் உள்ள வெளியில் (Pineal Gland) அமைந்த ஜோதி வடிவம் இல்லையா?

    அஃது என்று உச்சரிக்கயிலே என் உள்ளுணர்வு என்னை உச்சிகுழிக்கு தான் எடுத்துச் செல்கிறது....
  • Sundarapandiyan Vijayan நான் இதுவரை அறிந்த அறிவு... ஆன்மாவை... அங்குதான் காட்டியது... அதைச் சுற்றி வாசி வட்டமிட்டுக் கொண்டே இருக்கும்.. பின் உச்சந்தலைக்கும்... முன் உச்சந்தலைக்கும்... புருவமத்திக்கும்... நகர்ந்து சுழன்று சுழன்று... மெய்யுணர்வு மிக விளைந்ததே என் அனுபவம்...
  • விஜயகுமார் சு எனக்கு அகத்தில் பேச இன்னும் அறிவு வசப்படவில்லை ஐயா
  • Sundarapandiyan Vijayan இதில் நின்று சிந்திக்கயிலே எனக்கு இன்னொன்றும் உதித்தது... அன்றைக்கு நாபி பற்றி பேசி பாதியிலேயே விட்டு விட்டோமே... அது நினைவுக்கு வந்தது.. அதை மேற்கொண்டு சிந்திக்கயிலே...

    நாபி = தாய்க்கும் சேய்க்குமான தொடர்புக்கொடி...
    தூலத்தில் தொப்புல்கொடிஎன்றால்...
    சூட்சுமத்தில்.. நம் ஆன்மா ஜோதியாய் துலங்கும் மேற்சொன்ன இடத்தில்.. கீழே பீடமாய்த் திகழ்வது நம் சூட்சும தேகம் என்று ஒரு ஞானி சொல்ல கேட்டிருக்கிறேன்...

    என் அனுபவத்தில்.. ஒரு முறையான கோவிலுக்கு போய் வழிபடும்போதோ... அல்லது வீட்டில்... மெய்யுணர்வும்... ஆன்ம தாகமும்... அதிகமாய் விளைந்த சூழலில்... உச்சிக்குழியில்... யாரோ எழுந்து குதிப்பதைப் போன்று உணர்திருக்கிறேன்... எழும் அந்த உணர்வு கூரையைப் பிளந்துவிடும் அளவுக்கு ஆவலாய்த் துடிக்கும்... இது எனது சூட்சும தேக அனுபவமாய் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்...

    இந்த சூட்சும தேகத்திலும் தாயான பரம்பொருளையும்... (பரமான்மாவையும்) சேயான சூக்கும தேகத்தையும்... இணைக்கும் இடம் தான் வள்ளல் சொன்ன நாபியாய் இருக்குமோ என்பதுதான் என் உணர்வில் உதித்த கருத்து... 

    இதை தாங்கள் உறுதிப்படுத்த முடியுமா? Hseija Ed Rian விஜயகுமார் சு கார்த்தி கேயன்
  • Sundarapandiyan Vijayan***************************************************************************
    நண்பர்களே.. நான் இந்த பதிப்பின் முக்கிய நோக்கத்திலிருந்து வழுவி வேறு கேள்விகளை இங்கு கேட்டு திசை திருப்ப விரும்பவில்லை... ஆகையால் எனது நாபி பற்றிய பதிவை பின்னொரு தலைப்பில் சிந்திக்கலாம்... மற்ற அன்பர்கள்... சிலை வழிபாடு சம்பந்தப்பட்ட தங்கள் கருத்துக்களை பகிருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....
    ****************************************************************************
  • Hseija Ed Rian உடம்பின் உனர்வுகளில் இருந்து விடுபடுங்கள், உணர்வுகளின் அசைவோ , துடிப்புகளோ, சூக்குமமான நாடியோ அல்லது இதுபோன்ற விஷயங்களோ ஆன்மா இல்லை...ஆன்மா ஒருபோதும் உடம்பில் உணரப்படுவது இல்லை, மனதாலும் கூட உணரப்படுவதில்லை...அறிவினால் அன்றி பற்றிகொள்ள அரிதாம்...மேலும் அது உச்சி குழியில் விளங்குவதும் இல்லை, உச்சிகுழி என்பது தூல சடமேயாம்...
  • Hseija Ed Rian தூல சடமானது உயிருடன் தொடர்பு, அந்த உயிரானது அறிவுடன் தொடர்பு, அந்த அறிவானது ஆன்மாவுடன் தொடர்பு கொண்டவை...அல்லாது ஆன்மா வேறு ஒன்றுடனும் தொடர்பில் இல்லை...
  • Sundarapandiyan Vijayan விளக்கத்திற்கு நன்றி அய்யா Hseija Ed Rian

    ***************************************************************************
    நண்பர்களே.. நான் இந்த பதிப்பின் முக்கிய நோக்கத்திலிருந்து வழுவி வேறு கேள்விகளை இங்கு கேட்டு திசை திருப்ப விரும்பவில்லை... ஆகையால் எனது நாபி பற்றிய பதிவை பின்னொரு தலைப்பில் சிந்திக்கலாம்... மற்ற அன்பர்கள்... சிலை வழிபாடு சம்பந்தப்பட்ட தங்கள் கருத்துக்களை பகிருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....
    ****************************************************************************
  • Hseija Ed Rian உயிரானது உடலை பற்றியது...உடலானதும் உயிரை பற்றியது...ஒன்று இல்லையாகில் மற்றதும் இல்லை..இருக்காது...அதுபோல அறிவானது ஆன்மாவுடன் இருக்கும்...அது செத்த பின்னும் ஆன்மாவுடன் இருக்கும்...அது செத்து போகாது...அதுவே செத்த பின்னும் பல அரிவுகளை ஆன்மாவுக்கு குடுக்கிறது....அது எக்காலமும் இருக்கும்...உயிரோ செத்த உடன் பிரிந்து விடும்....இதை தான் வள்ளலார் ரெண்டு வித உயிர்கள் என சொல்லுகிறார்
  • Hseija Ed Rian ஒன்று உடலுயிர், மற்றையது ஆன்ம உயிர்...
  • Hseija Ed Rian தூக்கத்தில் உயிரும் உடம்பும் தொடர்பில் இருக்கும்...ஆனால் ஆன்மாவுடன் இருக்கும் அறிவெனும் உயிர் இதோடு தொடர்பில் இருக்காது....அதனால் ஆன்மா ஒன்றும் அறியாது...
  • Sundarapandiyan Vijayan**************************************************************************
    நண்பர்களே.. நான் இந்த பதிப்பின் முக்கிய நோக்கத்திலிருந்து வழுவி வேறு கேள்விகளை இங்கு கேட்டு திசை திருப்ப விரும்பவில்லை... ஆகையால் எனது நாபி பற்றிய பதிவை பின்னொரு தலைப்பில் சிந்திக்கலாம்... மற்ற அன்பர்கள்... சிலை வழிபாடு சம்பந்தப்பட்ட தங்கள் கருத்துக்களை பகிருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....
    ****************************************************************************
  • Hseija Ed Rian அப்படி செய்தால் புரிதல் நன்றாக இருக்கும்...இல்லையெனில் ஒன்றும் ம்ய்ழுமையடையாது..அரைகுறையாக போய் விடும்...குழப்பம் மேலும் அதிகரிக்கும்
  • Indranx Avataram //”அலகை “ என்பது என்ன?..வள்ளலார் “அலகை” என்பதனை குறிப்பிட்டுள்ளார்கள், அது என்ன என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்//

    Allakai - I hv not notice yet this details from book. Where it was mentioned Hseija Ed Rian brother? Let me read and try to understand. 

    Is it refer by Vallalar or you get from Siddhar kuripu "allakai"? 
    Vithya Thathuvam ellam Aanma thathuvam 36 kull adakem? Ithil "mindum pirapu" & "piralpu ilaamei" enbathu thathuvam nigragem naala perrum visaiyema? 

    ATTAGAM - Naan. Udambu. Uyir karainthu poirum endru, attagei unarnthor vazhuthum......

    Karainthu poonaalum, meyl nilai tharram "maranam illaa peru vazlvu" perra metha kadinam arul kaariyapadamel. 

    Athu epdi "அலகையை தவிர்க்க வித்தியா தத்துவம் பொருந்துவது அவசியம். அல்லாவிடில் அலகை தேகம் பொருந்தியே தீரும்" thathuvam porunthuvathu sariyaagum? Thathuvam kadathi meyl nilai ethum visaiyam, thathuvathukul epdi irukum? 

    2. Statue ritual intha thathuvam puriyatha varai, sollavaraatha varai entha sangam do this statues rituals, become "இறைவனின் சொருபமோ தயவே வடிவமான அருள்....அதை சடமான உருவத்தில் கானமுற்படுபவன் அலகையின் தீவிர பக்தன் தான் என்பதில் ஐயம் வேண்டாம்".

    "Varunthigiren" in Perubadesam. Sagoorhargel ennai vanangugirargeleh! This sentence is enough for me. Don't do means, don't do. Gnani varunthakuriya visaiyathey enn seiya vhendum? Seithu ippo enna importance boothika porom? Nothing. Hug the statues and do milk abishegam, archanai, urrvalam, alangaaram, all etc.. ithu chuma pidivaatha karuthu paraisaatum santharpa vathi vellai polla iruku.
  • Karthi Keyan Hseija Ed Rian, first of all I'm not going to any temples.. but I can't understand what you are saying.. think about ramakrishna paramahamsar.. everyone know he was the devotee of kali but later he dropped Kali and become saint.. Next question is vallalar himself adviced to idol worship to some extend.. when??? kadavul illai kovilum illai endru vaadita oruvarai vallalar santhika neritadhu.. avar udanana vadham vallalar vikgraha vazlipaadu thavarillai endra mudivuku konduvandar.. why?? please clarify my doubt sir???
  • Hseija Ed Rian வித்தியா தத்துவத்தை தான் அறிவு என்கின்றனர்.....ஆனால் அந்த அறிவு நமக்கு காரியப்படாமல் உள்ளது , அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கிறோம்...அந்த அறிவினாலேயே ஆன்மவை அறியகூடும்..அல்லாது மனமோ, பிரானனோ ஆன்மாவை சென்று அடையாது...அதனாலேயே அறிவு விளக்கம் பெறவேண்டும் என வள்ளலாரும் சொல்லுகின்றார்...அதற்காகவே பல பயிற்ச்சிகளும் உள்ளது...ஆனால் வீஇளக்கம் பெறுவதற்க்கு தயவே உத்தம வழி...தயவு வர்த்திக்க அறிவு விளக்கம் உண்டாகும்....இது பொருந்தினவன் அலகையை கடப்பான்...
  • Hseija Ed Rian வள்ளலார் “அற்ப்ப அறிவு” உடைய காலத்தில் நடந்தது வேறு...”பெரிய அறிவு” கொண்டபோது நடந்தவை வேறு...அதை அவரே ஒத்துகொள்கிறார் அல்லவா?
  • Hseija Ed Rian ஆதலால் பெஇர்ய அறிவு கொள்ளுதலே முக்கியம்,,அதை விடுத்து சிறிய அறிவினால் சிறிய நிலைகளின் தன்மைகளை மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் என நினைக்கிறேன்...
  • Karthi Keyan unmai.. anaal ramakrishnar nilai veru allava uruva vazlipaadu erundhu allava anma vazlipaaduku vandar..
  • Hseija Ed Rian அந்த வித்தியா தத்துவமெனும் அறிவே விளக்கு...விளக்கு என்றால் மறைந்திருப்பதை , அஞ்ஞானமாகிய பெரு இருளை அகற்றும் பொருள்....அப்படி ஆன்ம விளக்கம் உண்டாகும் என கணிப்பு
  • Hseija Ed Rian உருவ வழிபாடில் இருந்து வந்தார் என்பதற்க்கு அதையே கொண்டு நடப்பது எதற்க்கு?...மேல் நிலைகளில் ஏற ஏணி அத்தியாவசியம்...அதற்க்காக மேல் நிலை அடைந்த இற்பாடும் யாராவது ஏணியையும் சுமந்துகொண்டு திரிவார்களா என்ன?
  • Karthi Keyan udambai elukendru erundhen udalil uthaman kovil kondathai arinthen.. udhalai valarthen uyir valartheney.. udalul uthamen endralava korukirar..
  • Hseija Ed Rian அந்த ஏணிக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு எங்காவது வைத்துவிடுங்கள்..அதையே சுமந்து திரிந்தால் தோள்களுக்குகொடுையான வலிகள் ஏற்படும்
  • Hseija Ed Rian அப்படியென்றால் செத்த பின்னும் உடலில் இருக்கவேண்டுமல்லவா?...கோவிலை விட்டு பொவதேனோ?
  • Karthi Keyan adhanaal than munamey sonnaen naan uruva vazlipaadu seivadhu illai.. eppadi varumnu munnamey theriyum..
  • Hseija Ed Rian உத்தமன் இருக்கிறான் என்பதை தவறாக கொண்டுள்ளனர்...சித்தர் சொல்கிரார் கோவில் கொண்ட்டர் என....அனால் ”கோவிலாக கொள்ளாத” நாமும் கோவில் கொண்டார் என நினைத்து ஏமாறுகிறோம்...

No comments: