Pages

Sunday, August 31, 2014

வள்ளலார் அருளிய நித்திய கரும விதி இன்றைய சிந்தனைக்கு

1) எப்போதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கப்படாது. எப்போதும் மனவுற்சாகத்தோடிருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல்(BAD WORD) முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல்(ARGUMENT), சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.
2)இந்தத் தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவென்கிற கற்பூரத்தில், கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தே உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைத்து அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி என்னும் மகா மந்தரம் ஞாபகஞ்செய்தல் வேண்டும்.

  • Hseija Ed Rian அப்போ பயம் பூஜ்ஜியம் என வள்ளலார் கூறுவதின் அர்த்தம் என்ன?
  • Hseija Ed Rian பிராணவாயு எந்தவிதத்திலும் செலவாகாமல் இருக்கவேண்டுமெனில் எப்போது பிரானவாயுவை அதிகமாக பிரயானம் செய்யாமல் வைத்திருக்கவேண்டும், அப்படி வைத்திருக்க பிராணனை கட்டுக்குள் வைத்திருக்கும் கலை பயிலவேண்டும் அல்லவா?
  • Pothigaipriyan Vallalar பயம் சுத்தமாக இருக்க கூடாது என்பதே பயம் பூஜ்யம் என்கிறார் நண்பரே இது இச்சிறியேன் சிற்றிவுக்கு விளங்கியது ,மேலும் விளக்கம் இருந்தால் கூறலாம் .நன்றி வணக்கம்
  • Hseija Ed Rian விசேடமாக பார்க்கில், வல்லலார் சொல்வது அப்படி “ஜாக்கிரதையாக பழகுதல் வேண்டும்”...அப்படியாயின் அது ஒரு பழக்கம் தானே அல்லவா?...சகஜமானது இல்லை....பிராணனை பழகவேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா?...
  • Hseija Ed Rian “பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கபடாது “ என்கிறார்...அப்படியாயின் கொஞ்சம் பயம் வேண்டும் என்கிறார் அல்லவா?...இது ரெண்டு விதமான பயம் என தோன்றுகிறதல்லவா...?
  • Pothigaipriyan Vallalar பிராணன் அதிக செலவு செய்ய கூடாது என்கிறார் ,ஆனால் அது கலை இயக்கம் என்பதை அவர் கூறியதாக தெரியவில்லை ,ஏன் என்றால் பிராணயாம பயிற்சியை அவர் எந்த இடத்திலும் வலியுறுத்தியதாக தெரிய வில்லை ,ஆதாரம் இருந்தால் கூறுங்கள் .தெரிந்து கொள்ளலாம்
  • Hseija Ed Rian சுக்கிலம் மேலேற்றும் பயிற்ச்சி அது தானே....
  • Hseija Ed Rian அதற்க்கு பத்தியமும் கூறுகிறார் அல்லவா...
  • Hseija Ed Rian மட்டுமல்ல, புருவமத்தியில் நாடி வழி ஏறுவதும் இறங்குவதும் பிராணாயாமமே....சூட்ச்சுமமானது....தூல பிராணன் அல்ல...
  • Pothigaipriyan Vallalar பயம் புற விஷயங்களில் அதாவது உலகியலில் பூஜ்யம் ,ஆனால் அகத்தில் இறைவன் மேல் சற்று பயம் இருக்க வேண்டும்
  • Pothigaipriyan Vallalar நீங்கள் கூறுவது 100 சதவிகிதம் சரி அது சித்தர் நெறி, ஆனால் வள்ளலாருக்கு விளங்கிய இறைவன் சுக்கிலத்தின் இருந்து விளங்கிய சிவம் அல்ல அவருக்கு ஆன்ம உருக்கத்தை கொண்டு ஆன்மாவில்ருந்து விளங்கிய இறைவன் அதனாலேயே அவர் ஆன்ம நேயத்தை வலியுருதிகிறார் .
  • Pothigaipriyan Vallalar சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்வது எப்படி என்றறியவேண்டில்:- சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் - காருணியம் - உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும்; அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும். அவ்வனுபவம் பூரணமாதலே கடவுள்வழிபாடு என்றறிய வேண்டும்.

    ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள்விளக்கமாகிய அருள் வெளிப்படுவது எப்படியென்றறியவேண்டில்:- தயிருக்கும் கட்டைக்கும் கடைதலால் நெகிழ்ச்சி உண்டாக உண்டாக அதன் அதன் உள்ளிருக்கின்ற வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படுவதுபோல் வெளிப்படுமென்று அறியவேண்டும்.
  • Hseija Ed Rian அப்படியாயின், சன்மார்க்க கொடி கட்டிக்கொண்டு அவர் உரையாற்றியபோது, சித்தர்கள் மறைத்த உண்மையை குறிப்பிட்டு , மேலும் புருவமத்தியின் உள் நாடிகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி அதி ஏறவும் இறங்கவும் அருள் புரிகிறாரே...அது எதற்க்கு?
  • Hseija Ed Rian கொடிகட்டிக்கொண்டது சன்மார்க்கம் பூரனப்படு அவர் கடிசி காலத்தில் வெளிப்படுத்தியதே...அல்லாமல் அவர் சைவ சமயத்தில் பற்றுதல் கொண்டிருந்தபோது அல்ல என்பதையும் கருத்தில் கொள்வது நலம்...
  • Hseija Ed Rian அதனாலேயே அந்த உபதேசம் “பேருபதேசம்” எனப்படுகிறது....பெரிய ஒரு விஷயம் சொல்ல்ப்பட்டிருக்கிறது.அதனாலேயே பேருபதேசம்...அல்லாது நிறைய கருத்துக்களை கூறியதனால் அல்ல...
  • Pothigaipriyan Vallalar அது அனுபவ கண் விளங்கும் என்கிறார் நண்பரே ,இந்த சிறியேனுக்கு அனுபவம் இன்னும் இறைவன் அளிக்கவில்லை ,தங்களுக்கு அனுபவம் இருந்தால் கூறுங்களேன் !
  • Hseija Ed Rian நான் இங்கு விசாரிப்பது மேலும் மேலும் நாம் சத்விசாரத்தில் முன்னேறவேண்டும் எனுமவாலால்
  • Pothigaipriyan Vallalar கண்டிப்பாக நண்பரே நான் அதை வரவேற்கிறேன் .அதே சமயம் இச்சிரியனுக்கு தெரியாத விஷயங்களை தெரிய வில்லை என்று தானே கூற முடியும் .தங்கள் விளக்கத்தை தாராளமாக இங்கு பகிரலாமே !
  • Lalitha Arutperum Jothi அப்போ இங்கே வள்ளலார் வாசியை பற்றி கூறுகிறாரா?
  • Hseija Ed Rian வள்ளலார் வாசியை பற்றி கூறினார் என யாரும் கூறவில்லையே....”பிராணவாயுவை அதிகம் செலவாகாமல் படி ஜாக்கிரதையாக பழகுதல் வேண்டும்” என்று தான் வள்ளலார் கூறுகிரார்....அப்படி பழகுவது வாசி அல்ல....சற்று விளக்குகிறேன் புரிந்து கொள்வது நலம்.....
  • Pothigaipriyan Vallalar உண்மைதான்...Hseija Ed Rian
  • Hseija Ed Rian அதாவது, அருட்பெரும் ஜோதியெனும் மகாமந்திரத்தை மெல்லன தோத்திரம் செய்தல் வேண்டும்....அதே மந்திரத்தை நாம் 60 டெசிபெல் அளவுக்கு மேலெயும் உரக்க தோத்திரம் செய்யலாம்....அப்படி செய்வதினால் பிராணவாயு நஷ்ட்டம் செய்கிறது...அப்படி செய்யாது அங்கு ஒரு “மெல்லன” எனும் உபயோகம் உருவாக்கப்பட்டுள்ளது....அது போல பிராணவாயுவை அதிகம் நஷ்டம் செய்யாது ஜாக்கிரதையாக பழகும் முறை உண்டு....அது குரு முறை...ஆனால் தக்க முறையில் பெற்று கொள்ல தடையில்லை...
  • Hseija Ed Rian அந்த முறையை வாசி யோகம் என தவறாக உருத்திரித்து கொள்ளவேண்டாம்....”மெல்லன” தோத்தரித்தலே ஒரு பிராண பழக்கமே...அது கொஞ்ச கொஞ்சமாக நீண்ட மூச்சை கொடுக்கும்...முதலில் தோத்திரம் செய்பவர்களுக்கு மூச்சு உள்வாங்கி வலிக்கும்...போக பொக மூச்சு நடை குறையும் ...நீண்ட மூச்சு உருவாகும்....ஓடிக்கொண்டு தோத்திரம் செய்தால் கூட மூச்சு வாங்காது...அப்படி மூசு பரிணமிக்கும்....தோத்திரத்தின் இனிமை அலாதியாகும்....
  • Hseija Ed Rian எங்க ஊரிலே ஒரு பழக்கம் உண்டு...சிவாலய ஓட்டம் என்பார்கள்...எல்லா சிவராத்திரிக்கும் சிவனடியார்கள் 120 கிமீ தூரம் உள்ள 12 சிவ ஆலங்களை ஓடி வலம் வருவார்கள்..இந்த நடைமுறை அனாதிகாலம் முதல் நிலுவையில் உள்ளது...அந்று குமரிமாவட்டத்திற்க்கு லோக்கல் விடுமுறை...ஏனெனில் அந்த அளவிற்க்கு சிவனடியார்கள் நெடுஞ்சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பார்கல், கூடவே ஒரு தோத்திரமும் உண்டு....”கோபாலா..கோவிந்தா...சிவனே வல்லபோ....” என்பதாஅகும்....24 மணி நேரம் ஓடி 12வது ஆலயத்தில் சரணடைவர்....இப்படி நீண்ட தூரம் ஓடினாலும் தோத்திரம் நடந்துகொண்டே இருக்கும்....அப்படி ஓடி எங்களுக்கு சஹஜம்...
  • Hseija Ed Rian இப்படி வாய் வழியாக மூச்சு 24 மணி நேரெம் நடந்து கொண்டிருக்கும்....இதுவே ” தோத்திரத்தின் ரகசியம்...இது வாசி கிடையாது....இதன் நுணுக்கமெ “பாகவத பாராயணம்” மற்ரும் “ராமாயண பாராயணத்திலும் உ்ண்டு
  • Hseija Ed Rian இது வாசி வித்தை கிடையாது..Lalitha Arutperum Jothi..Vinoth Kumar...Indranx Avataram
  • Hseija Ed Rian திருமூலர் சொல்வார் “வள்ளல் பிரினோர்க்கு வாய் கோபுர வாசல் “ என்று...இதையே கண்ணபிரான் யசோதாதேவியாருக்கு வாயை திறந்து காட்ட 14 உலகங்களும் தெரிந்த கதை..Lalitha Arutperum Jothi.Vinoth Kumar

No comments: