Pages

Sunday, August 31, 2014

திருவடி - ஒரு விசாரம்

  • Hseija Ed Rian காத்திருக்கவும்......திருவடி என்ன என வெளிப்பாடு இருக்கிறது....மதிவானனிடம் சொல்லவும்
  • Pothigaipriyan Vallalar அய்யா முதலில் திரு அருட்பா படித்து தெளிவு பெறுவோம் ,பிறகு மற்ற வற்றை படிக்க முயற்சிக்கலாமே ! சாகாதவனே சன்மார்க்கி என்கிறர் வள்ளலார், சாகாதவர் சன்மார்க்க நூலை படித்தால்தானே சாகாத நிலை பெற முடியும் . சிந்திப்போம் ,இது குறை கூறுவது அல்ல ஒரு சிந்தனயே ! தவறு இருந்தால் மன்னிக்கவும்
  • Thanga Jyothi திரு அருட்பா புரியம் அளவு அறிவு நம்மிடம் உள்ளதா? அதில் இருக்கும் புரியாத பொருளை சொல்ல குரு வேண்டாமா? யோகா குரு அல்ல.
  • Hseija Ed Rian அப்போ அது எதுக்கு எழுதினது என கேள்வி வருமல்லவா?
  • Thanga Jyothi இறைவனுக்கு கால் உள்ளதா?
  • Hseija Ed Rian பாத்ததில்லை...
  • Thanga Jyothi திருவடி இறைவன் காலா?
  • Hseija Ed Rian தெரியலை....எப்படி தோணுது?...ஒருகால் தான் திருவடியா ..அல்லது ரெண்டுகாலும் சேர்ந்தது ஒரு திருவடியா?
  • Thanga Jyothi பெண்ணை தாயாக பார்பவருக்கு இறைவன் அருள் உண்டு... காம பொருளாக பார்பவருக்கு அல்ல
  • Hseija Ed Rian அது இங்கு விஷயமல்ல.....திருவடி என்பது ஒருகாலா ரெண்டுகாலா?
  • Thanga Jyothi திருவடிகள்
  • Hseija Ed Rian திருவடி ஞானமா...திருவடிகள் ஞனமா...எது சரி?
  • Thanga Jyothi இறைவன் திருவடிகளை கெட்டியாக பிடித்தால் ஞானம்
  • Hseija Ed Rian தில்லை நடத்தரசன் சென்னியில் வைக்கும் திருவடி ஒன்றெ....குஞ்சிதபாதம் எனும் திருவடி....ரெண்டு திருவடிகளும் இரைவன் சென்னியில் வைப்பது இல்லை...
  • Thanga Jyothi ஒரு இடத்தில இடது கால் சில இடத்தில வலது கால் ஏன் ?
  • Hseija Ed Rian இறைவனால் சுடிகாட்டப்பட்டதும் , அவர் வலது கைவிரல் சூண்டுவதும் குஞ்சித பாதம் எனும் ஒரு திருவடியை தானே...?
  • Hseija Ed Rian அது சபை கண்டு ஆடுவது...எப்படியானாலும் ஒரு காலே திருவடி...குஞ்சித பாதம்...அது ஒன்றே ..ரெண்டல்ல
  • Hseija Ed Rian மறுகால் எப்போது முயலகன் மீதே இருக்கும்....அந்த காலை யாரும் பிடிக்க முடியாது...அது முயலகன் மட்டுமெ பிடிக்கும் திருவடி...மனிதர் பிடிக்க முடியாது....
  • Hseija Ed Rian இப்போ புரியுதா திருவடி என்னாண்னு?
  • Thanga Jyothi இது ஏன் ?
  • Hseija Ed Rian தட்சிணாமூர்த்திக்கும் இப்படித்தான் ...ஒருகால் தான் அருள்பாலிக்க சீடர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும்...மறுகால் மடக்கி வைக்கப்படிருக்கும்....சீடர்கள் பிடிக்கவேண்டியது தட்சிணாமூர்த்தியின் நிமிர்ந்த காலே அல்லவா?
  • Hseija Ed Rian பிடிக்க வேண்டியது ஒருகால் தானே?
  • Thanga Jyothi இரண்டு பாதங்கள் ஏன் உள்ளது? அதுவே திருவடி - பத்ம பாதம்
  • Hseija Ed Rian பிறகு ஏன் ரெண்டும் பிடிக்கிறேன் என சொல்லமுடியும்....ஒன்றுதான் அருளாக இருக்கும்....
  • Thanga Jyothi ஒன்றை பிடித்தால் போதும். சூரிய கலையில் நில்லு..
  • Hseija Ed Rian ரெண்டுபாதம் இருந்தாலும் ஒருபாதம் தானே சிவனாரும் தட்சிணாமூர்த்தியும் பிடிக்க தருகிறார்கள்....அதை மட்டுமே பிடிக்கவும் உடியும்...குஞ்சித பாதத்தை மட்டுமே பிடிக்க இயலும்...அல்லவா?
  • Thanga Jyothi ஏன் நடராசர் ஒரு இடத்தில வலது காலும் 
    இரு இடத்தில இடது காலும் தூக்கி ஆடுகிறார்
  • Thanga Jyothi இரண்டில் எது வேண்டுமானாலும் பிடிக்கலாம்
  • Hseija Ed Rian அது சபை அறிந்தவர்களுக்கு புரியும்....எந்த சபை ஆனாலும் ஒருகால் தான் உயர்ந்திருக்கும்
  • Thanga Jyothi கண் டத்தில் உள்ள ஜீவனை(8/2) - 10ல் சேர்ப்பது முக்தி
  • Hseija Ed Rian எப்படியும் பிடிக்க முடியாது..சபைக்கு தகுந்துதான் பிடிக்கவேண்டும்...அது குரு சொல்லி தருவது...எங்கு எப்படி எந்த காலை பிடிக்கவேண்டுமென
  • Thanga Jyothi சும்மா இருந்தால் தான் முடியும் . மனம் அடங்கும் இடம் தெரிந்தால் தான் முடியும்
  • Hseija Ed Rian காலே தெரியாமல் தலை எப்படி தெரியும்?
  • Thanga Jyothi இறைவன் திருவடியை பிடிக்கணும என்று தானே சொல்லி உள்ளனர்
  • Hseija Ed Rian ஆமா சென்னியில் உள்ள ஒரு திருவடியை தான் பிடிக்கணும்...ஒரே ஒரு திருவடிதான் மனிதருக்கு இருக்கும்...
  • Hseija Ed Rian மற்றைய திருவடி முயலகன் எனும் அசுரனின் மேல் இருக்கும்..அதை மனிதர் பிடிக்க இயலாது
  • Hseija Ed Rian அப்போ என்ன பண்ணுவீங்க?
  • Thanga Jyothi அப்போ ஏன் அனைத்து கோவில்களில் இரண்டு கால்கள்? இதை வைத்ததும் நம் நாட்டு ஞானிகளே
  • Hseija Ed Rian ஆமா...ரெண்டு கால் வைத்ததும் அவர்கலே..அதில் ஒருகாலை உயர்த்தி வைத்ததும் அவர்களே....அல்லவா?
  • Thanga Jyothi நடராஜர் கடைசியாக காணும் அனுபவம் (ஆணி பொன் அம்பல காட்சி) அது முதல் [படி அல்ல
  • Hseija Ed Rian இருக்கட்டும்....முதல் படியே அறியவேணுமல்லவா?..
  • Thanga Jyothi முதலில் இறைவன் திருவடிகளை பிடி, முமலத்தை அழி , பிறகே நடராஜ தரிசனம்
  • Hseija Ed Rian குஞ்சித பாதம் அறியாமல் ஒன்றும் நடக்காது...
  • Hseija Ed Rian முதலில் குஞ்சித பாதம் பிடி ...
  • Hseija Ed Rian பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் அதுக்கு தான் பண்ணுவார்கள்...
  • Hseija Ed Rian வள்ளலாரும் அந்த குஞ்சித பாதத்தையே விசேஷித்து சொல்லுவார்...பாருங்கள்
  • Hseija Ed Rian எல்லா சித்தர்களும் ஞானிகளும் அந்த தூக்கிய திருவடி கண்டேன் என்றுதான் சொல்லுவார்கள்...
  • Hseija Ed Rian அதுவே ஆனி திருக்காட்ச்சி
  • Thanga Jyothi இறைவனை அறியும் முன் தன்னை அறிய வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்..
  • Hseija Ed Rian இருக்கட்டும்....அதுவும் நல்லது தான்...
  • Thanga Jyothi அதை தான் முதலில் செய்யணும்....
  • Hseija Ed Rian தன்னை அறியும் போது தன்னுள் இறைவனின் குஞ்சித பாத எங்கு படுகிறது எனகூட அறியவேண்டுமல்லவா?
  • Hseija Ed Rian சரி தானே...?
  • Hseija Ed Rian ஆலோசித்து குருமார்கலை நினைவில் கொண்டு அருளாசி பெற்ரு பதில் சொல்லுங்கள்...சரியா...
  • Thanga Jyothi ஒரு கால் தூக்க 
    வில்லையே

  • Hseija Ed Rian இப்படி 108 தாண்டவம் உண்டு....இதிலும் ஒருகால் தூக்கித்தான் இருக்கிறது...
  • Thanga Jyothi வர்த்திதம் ????
  • Thanga Jyothi வர்த்திதம் ஆடும் ....
  • Hseija Ed Rian .....தாண்டவம் என்றாலே ஒருகால் உயர்ந்து தான் இருக்கும்... இது தாணடவமா?
  • Thanga Jyothi வர்த்திதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்
  • Hseija Ed Rian அப்படியா..நல்லது...அப்போ இது தான் குஞ்சித பாதமா?
  • Thanga Jyothi இல்லை,, இறைவன் திருவடிகள் இரண்டு
  • Hseija Ed Rian இது லாஸ்யம் என படுகிறது
  • Hseija Ed Rian உண்டு ...ஆனால் ஒன்றுதான் மனிதருக்கு...மற்றையது முயலகனுக்கு
  • Thanga Jyothi விநிவிர்த்தம் ஆடும்
    சிவபெருமான்

  • Hseija Ed Rian இதில் முயலகன் இல்லாது ஆட்டமா?
  • Thanga Jyothi //Hseija Ed Rian · 16 mutual friends
    ஆமா...ரெண்டு கால் வைத்ததும் அவர்கலே..அதில் ஒருகாலை உயர்த்தி வைத்ததும் அவர்களே....அல்லவா?

    நீங்கள் சொல்வது தவறு
  • Hseija Ed Rian என்ன தவறு?
  • Thanga Jyothi குஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்... அதை வைத்து ஒரு திருவடி என்ரூ சொல்வது சரியா? மற்ற தாண்டவத்தில் இரு கால்களும் கீழ் உள்ளது.
  • Hseija Ed Rian அது தில்லை திரு நடனம்....அதுவே பெருவெளி நடனம்...ஆனந்த தாண்டவம்....
  • Hseija Ed Rian சங்கார நடனமும் உண்டு...அது நமக்கு எதற்க்கு?...பைரவ நடனம் உண்டு நமக்கு எதற்க்கு...அகோரம் உண்டு ....நமக்கு தேவை சிதம்பர நடனம்...அல்லவா?
  • Thanga Jyothi கோவிலில் ஏன் சிவ லிங்கம் உள்ளது? என் உற்சவர் ஆக நடராஜர் உள்ளார்?
  • Hseija Ed Rian நடராஜ மூர்த்தம் எல்ல நிலைகளுக்கும் மேலானது என மகுட ஆகமம் சொல்லுகிரது என்பர்
  • Thanga Jyothi சிவனுக்கும் - லிங்கதுக்கும் என்ன சம்பந்தம்? 
    சிவபெருமான் மனிதனா?
    மூவரில் ஒருவரா?

    சிவம் - சிவ லிங்கம் - சிவன் - நடராசார் ஏன் இத்தனை
  • Thanga Jyothi ஆகம முடிமேல் உள்ளது அருட்பெருஞ்சோதி ....
  • Hseija Ed Rian இது ஒரு தனி அதிகாரம்...விலக்கமாக பிறகு பேசலாம்...இப்போது ஒரு நிலையில் இருப்போம்
  • Hseija Ed Rian அருட்பெரும் ஜோதி என்பது நடராஜரா என்ன?
  • Hseija Ed Rian அருட்பெரும் ஜோதிக்கு ரெண்டு திருவடி உண்டா/..இல்லையே..நடராஜருக்கு தானே திருவடி உள்ளது?
  • Thanga Jyothi திருவடி என்பது பரிபாசை.. இறைவனுக்கு கால் உள்ளாதா?
  • Hseija Ed Rian நடராஜருக்கு கால் இல்லையா?
  • Thanga Jyothi சிற்சபையில் பொற்சபையில் புகும் தருணம்??? ரெண்டு திருவடி
  • Hseija Ed Rian அதெப்படி ரெண்டு சபையில் ஒருசேர நடனம்...சிற்சபை நடனம் ஒருவிதம் பொற்சபை நடனம் ஒரு விதம்...
  • Thanga Jyothi உலோக நடராஜருக்கு கால் உள்ளது?? 
    ஒளியாக ஜோதியாக உள்ள நடராஜருக்கு கால் இருக்குமா?
  • Hseija Ed Rian இருக்காதா பின்னே...பிறகு குஞ்சித பாத என சும்மாவா சொன்னார்கள்
  • Thanga Jyothi ஜீவன் 5 இடத்தில உள்ளது..
    கண்-டத்தில் இருப்பதை அழியாமல் சேர்க்க - முக்தீ
  • Hseija Ed Rian நடராஜர் என்பது அருட்பெரும் ஜோதியா?
  • Thanga Jyothi சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதி நட ராஜபதியே.---
  • Hseija Ed Rian அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருட்பெருஞ்சோதியை அன்புடன் அளித்தே
    கமமுறு சிவநெறிக்கு ஏற்றி எந்தனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய்ப் பதியே
    எமன் எனும் அவன் இனி இலை இலை மகனே எய்ப்பற வாழ்க என்று இயம்பிய அரசே
    சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராஜ என் சற்குரு மணியே
  • Hseija Ed Rian நடராஜர் அளித்ததுவே அருட்பெரும் ஜோதி ...அல்லவா?
  • Thanga Jyothi இரண்டும் ஒன்று தானா ?
  • Hseija Ed Rian எப்படி ஒன்றாகும்?
  • Hseija Ed Rian ஒன்று அளிக்கப்படது
  • Hseija Ed Rian மற்றையது அளித்தவர்
  • Hseija Ed Rian வேலை வைத்திருப்பவர் வேலாண்டவர்...அதுபோல அருட்பெரும்ஜோதியை வைத்திருப்பவர் அருட்பெரும்ஜோதியாண்டவர்...அப்படித்தானே?
  • Thanga Jyothi இறைவன் ஒருவரே 
    அருட்பெருஞ்சோதி 
    தனி பெரும் கருணை - வள்ளல் பெருமான்
  • Hseija Ed Rian உண்மை...அதுவும் கலந்த உண்மை
  • Thanga Jyothi அருட்பெருஞ்சோதி ஆன ஆறுமுக சாமி ...
  • Hseija Ed Rian எல்லாமே அதுவே தான்...அப்படீண்னா நடராஜர் எங்கிருந்து வந்தார்?
  • Thanga Jyothi பர பிரம்மா - ஆதி சிவன் - பரம் பொருள் - நடராசர் எல்லாம் அருட்பெருன் ஜோதி
  • Thanga Jyothi இறைவன் அனைவருக்கும் ஒளியாக காட்சி கொடுத்தார் ...
  • Thanga Jyothi சிவம் என்பது ஒளி
  • Hseija Ed Rian அது சைவத்துக்கு...சிவம் ஒளி...சன்மார்க்கத்திற்க்கு கருனையும் சிவமே பொருள்
  • Hseija Ed Rian அருட்பெரும் ஜோதி என்பது சைவத்தில் சொல்லப்படும் ஒளி அல்ல...
  • Hseija Ed Rian சன்மார்க்கத்தில் சிவம் என்றால் கறுணை என பொருள்
  • Thanga Jyothi திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
    திருவருளாம் பெருஞ்சோதித் திரு உருக் காட்டாயோ
  • Hseija Ed Rian ம்ம்....உண்மை...அது கருணையை ,அந்த அருளை மறைத்திருக்கும் திரையே....அருட்கண் ஒன்றே...ரெண்டல்ல
  • Hseija Ed Rian அது ஊனகண்னுமல்ல....
  • Thanga Jyothi சிவ மயமாம் சுத்த ஜோதி - சுத்த
    சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
    உவமையில் லாப்பெருஞ் சோதி - என
    துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
  • Thanga Jyothi முக்கண்ணன் - என்றால் மூன்று கண் என்று தானே பொருள்
  • Hseija Ed Rian அதுவெ தான்...அருட் சிவ ஜோதி...அருட்பெரும் ஜோதி....அது ஒளி அல்ல
  • Thanga Jyothi அப்போ வடலூரில் எதுக்கு ஜோதி தரிசனம் ?
  • Thanga Jyothi சபரி மலையில் மகர ஜோதி எதுக்கு?
  • Hseija Ed Rian அது வள்ளலார் காட்டியது என யார் சொன்னது/...அடூர் சிவாச்சாரியர்கள்....மற்றும் குருக்கள்


No comments: