Pages

Sunday, August 31, 2014

தேவர்களும் வள்ளலாரும் - Ajiesh

இது ஒரு நண்பர் முகநூலில் கேட்ட அருமையான கேள்வி-
கேள்வி=====எனக்கு நீண்ட நாள்களாக ஒரு ஐயம் ஒன்று உள்ளது அது யாதெனில் 
இறைவன் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று பெருமானார் பின்னைய நாட்களில் கோரினார்கள்...பெருமானின் அதற்கு முந்தய வாழ்வின் பதிவில் கந்தகோட்டத்து முருகப் பெருமானை முகக் கண்ணாடியில் பார்த்ததாகவும்....!பின் வடிவுடை அம்பிகை தனக்கு ஓர்நாள் உணவு ஊட்டியதாகவும் குறிப்புகள் உள்ளன..... !! தனக்கு முன்னர் அற்ப அறிவாக இருந்தது என்றும் இறைவன் ஒருவனே என்றும் கூறும் பெருமானார் இருவேறு தெய்வங்களை சந்தித்தததன் விளக்கம் யாது என்று கூறமுடியுமா ??
பதில்== ”””””இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்”””” என்பதே மேற்படி கேள்விக்கு பதில்....அதாவது அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவரே இந்த நிலை கொண்டவர், ஏனைய தேவர்கள் இந்த நிலை கொண்டவர் இல்லை.....எந்த ஒரு தேவரும் இயற்கையில் விளங்குபவர் இல்லை, ஆனால் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இயற்கையில் விளங்குபவர்..... எந்த ஒரு தேவரும் இயற்கையில் இருப்பவர் இல்லை, ஆனால் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ஒருவரே இயற்கையில் இருப்பவர்.....புரிகிறதா நண்பர்களே...

1 comment:

Unknown said...

கேள்வி நல்ல கேள்வி ..பதில் சுத்தமா புரியலே