Pages

Saturday, August 30, 2014

வெட்டாத சக்கரமும் இறையாத தீர்த்தமும் - Ajiesh

உலகத்தில் தீர்த்தம் என்பது பரிசுத்தமாகும் பண்பை கொண்டதுவாம். ஏதொன்று அசுத்தத்தை மாற்றி பரிசுத்தப்படுத்துகிறதோ அது தீர்த்தம்.”அண்ணாக்கென்றதின் மேற்புறத்தில் கொண்டது அக்கினி தீர்த்தமாம் ஞானபெண்ணே” என்பர் சித்தர்கள்.அதுவே இறையாத தீர்த்தம்,கண்களில் இருந்து வழியும் நீர் இறைக்கப்படுகிறது....அது இறையாத தீர்த்தம் இல்லை. அப்படியான தீர்த்தத்தில் இருக்கும் புட்பமே எட்டாத புட்பம்...எல்லா நீர்நிலைகளில் இருக்கும் புட்பங்களும் எட்டி பறிக்கமுடியும் தன்மையிலே இருக்க, அக்கினி தீர்த்தத்தில் இருக்கும் புட்பமோ எட்டி பறிக்க முடியாது இருக்கின்றதுவாம்.அந்த புட்பத்தின் மத்தியில் இருக்கும் மணியானதுவோ ஷண்முகமான மவுன மணியாயிருக்க அந்த ஷ்ண்முகங்களும் வெட்டப்பட்ட நிலயில் அல்லாமல் சக்கரவடிவமாய் இருக்கிறதாம்.ஏனெனில் வெட்டப்பட்ட முகங்களை உடைய மணியானது சக்கரமாய் இருக்காது, ஆனால் வெட்டாத சக்கரமாய் இருக்கும் ஷண்முக மவுனமணியானது புருவமத்தியில் இருக்கும் ஆன்ம சொரூபமே அன்றி வேறல்ல.அதையே வள்ளலாரும் ஆன்மாவின் பீடம் அக்கினி என்பார், அவ்வக்கினியோ தீர்த்தமாகிய சுக்கிலத்தில் உள்லது. அதுவே இறையாத தீர்த்தம். சுக்கிலம் புட்ப வடிவத்துடன் இருக்கிறது என்பார் வள்ளலார்.அதுவே புருவமத்தியில் பிரகாசிக்கின்றது.
 10462818_10202338610935425_5269111610772094882_n.jpg
  • Ram Prakash Tamilmuni ஆகா ,விசித்தரிமான புகைப்படம்
  • Hseija Ed Rian இது கண்ணை காட்டி ஓட்டு புடிக்கிறவங்களுக்கு சவாலான படம்...கண்ணை கட்டி நாக்கை நீட்டி காட்டும் வித்தை....
  • Thiruvenkadam Subramanian கருமாரி - பஞ்ச பூதங்களில் நான்கு பூதங்களின்( நிலம் , நீர் , காற்று ,நெருப்பு- அழுத்த காற்று ) ஆதாரமாக இருப்பது முதல் தத்துவமாகிய நுண் இயக்க மூலக்கூராகிய விண். விண் என்ற உயிராற்றல் உடல் முழுவதும் சுழன்று ஓடி அதன் மையமாக மூலாதாரத்தை கொண்டு இயங்குகிறது .அந்த மையமே கருமையம் , ஜீவ வித்து கொழும்பு மையம் என்று வழங்கப்படுகிறது . அங்கே விண் என்ற உயிராற்றல் அழுத்தம் பெற்று இயங்குவதால் அங்கே மனம் வைத்து உயிரின் ஆற்றலை தாங்குவது முடியாது . 

    அதனால் அதை ஆக்கினை - புருவ மத்தியில் உணர்வது சிறப்பு ,இயல்பு . கருவை மாற்றி அமைத்தல் கரு +மாறி . இதுவே கருமாரி என்று கூறி சிரசை வணங்குதல் ஆயிற்று 

    Vethathiri Maharishi

No comments: