Pages

Saturday, August 30, 2014

மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு - Ajiesh

அஸ்வினி முத்திரை என்பது மகாமுத்திரை கிடையாது....ரெண்டாவது குதம் என்பது மலத்துவாரம் கிடையாது....”மாறாமலத்துவாரத்தின் மேல் ...” என்பது நாம் சாதாரணமாக நினைக்கும் மலத்துவாரம் இல்லை...குதம் என்பதும் குய்யம் என்பதும் ரகசியமானவை....மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு மேலைத்துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்தகண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லும் கருத்திது தானே என திருமூலர் கூறுவதே மகாமுத்திரை....கண்ணானது வெளியிலும் மனமானது குய்யத்தின் உள்ளும் கருத்தானது குதத்திலும் இருப்பதே மகாமுத்திரை....இதுவானது சாம்பவி முத்திரைக்கு ஒப்பானது....கண்ணானது லட்சியமற்ற பார்வையாக வெளிமுகமாக விழித்தபடி இருக்கும்,இமைத்தல் இருக்காது,கருவிழி அசையாது நாட்கணக்கில் இருக்கும்,சொல்லப்படும் குதத்தில் மலம் அற்றுப்போகும்,முக்காரமிடுவதனால் வாயுவானது வெகு லேசாகும்,மனமானது நடுத்தாரையில் உயரும்........

மட்டுமல்ல, அஸ்வினி என்பது குதிரையை குறிக்கும் என்பது நீங்கள் அறிந்ததே, சற்று சிந்தித்து பார்த்தால் குதிரைக்கும் குதத்தை ஆகுஞ்சனம் செய்வதற்க்கும் சம்பந்தம் இல்லை என காணலாம்,அப்படியெனில் உண்மை எது என கேள்வி எழும் அல்லவா?...உண்மையில் குதிரை என்பது வாசியைத்தான் குறிக்கும்,அதாவது அஸ்வினி முத்திரை வாசியை உயரே ஏற்றும் முத்திரையாம்.ஆனால் தவறுதலாக குதத்தை ஆகுஞ்சனம் செய்து மூலத்தை சுருக்கி விரிக்கும் தன்மையில் ஒதிங்கிற்று..திருமூலர் கூறுவது போல” புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால் கள்ளுண்ணவேண்டாம் தானே களிதரும்” என்பார்.அது இந்த அஸ்வினி முத்திரையே.மற்றொன்று ஆகுஞ்சன முத்திரை, அதுவானது சுக்கிலத்தாரையை சுருக்குவதாம்,சாதாரண கதியில் மூத்திரைத்தை அதன் தாரையில் சுருக்கி கட்டுப்படுத்துவதை போன்று சுக்கிலத்தையும் தெளிந்த யோகிகள் சுக்கிலம் வெளியேறாது அதன் தாரையை சுருக்கி அடைக்கும் பயிற்ச்சியில் தேறியிருப்பர்.அப்படி சுக்கிலத்தை கட்டுக்குள் கொண்டுவந்து போகத்தில் ஈடுபடுவர்.,விந்து வெளியேறாது தன்னை காத்துக்கொள்வர்.ஆகையினால் முத்திரை அப்பியஸிக்கும் தருணத்தில் சற்று தேறிய குருவடியை சரணடைதல் மிக்க நன்று.

No comments: