Pages

Saturday, August 30, 2014

மரணமும் மரணமில்லா பெருவாழ்வும் - Ajiesh


வள்ளலார் மரணத்தை கூறுமிடத்து , மரணம் என்பது ஆதி செயற்கை

என்கிறார்,அதாவது மரணம் என்பது அனாதி இயற்கை அல்லவென்பதே

வள்ளலார் கொள்கை,சன்மார்க்க மரபு. அப்படியெனில் நாம்

மரணமில்லாபெருவாழ்வு என்ன என்பதை அறிந்து கொள்ள,

புரிந்துகொள்ள,உணர்ந்து கொள்ள முதலில் நாம் சத் விசாரணை

செய்யவேண்டியது மரணம் என்பது எப்படி ஆதி செயற்கையானது

என்பதையே. வள்ளுவர் கூற்றின் படி “நோய்நாடி நோய்முதல் நாடி

அதுநாடி வாய்ப்பசெயல்”,அதாவது மரணம் உண்டாக காரணம் என்ன

என்பதை விசாரணை செய்தல்,அதன் பலனே மரணமில்லா

பெருவாழ்வின் நிலை குறித்து புரிதல் உண்டாம்.சீவர்கள் அனாதியாக

மரணித்தல் எனும் விஷத்தை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை

என்பது வள்ளலார் மொழிமூலம் புரிகிறது.அப்படியெனில் மரணமானது

சீவர்களுக்கு ஆதி செயற்கையாக அமைந்தது எங்ஙனம்? சற்று

விசாரணை செய்வது அவசியமாகின்றது அல்லவா?சிந்திப்போம், சத்

விசாரணை செய்வோம்.

  • Ram Prakash Tamilmuni சுத்தமாயை அசுத்த மாயையாக நிகழுமிடத்தில் முதல் திரைவிழுந்து ஆனந்தத்தின் சுயத்தை மாற்றுகிறது,மரணமில்லா பெருவாழ்வு எனும் பதம் எது இயல்பாகவே ஆதியிலேயே பெருவாழ்வு கொட்டு அனுபவித்து இயங்குகிறது,தன் சுயத்தை இழக்காமல் சுயத்தை பக்குவப்படுத்திக்கொண்டவர்களே அந்த பதத்தை உணர்ந்து தேர வல்லவராயிருக்கிறார்கள்...சுயத்தை பரத்திடம் இழத்தல் ஞானம்,பரத்திற்கு சுயம் கொடுத்தல் சுத்த ஞானம்.சுப்ரமணியம்...
  • Ram Prakash Tamilmuni மேலைப் பதிவானது அடியேனின் சுய அகவிசாரனையில் உதித்ததாயினும் பொதுவிற்கும் சொல்லும் பொருளுடையது.

No comments: