Pages

Saturday, August 30, 2014

சீவகாருண்யம்- ஒரு பார்வை - Ajiesh


எப்படி சீவகாருண்யத்தால் மூவகை சரீரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்?, சுத்த தேகம்,.பிரணவ தேகம், ஞான தேகம் இவை மூன்றும் சீவ காருண்யம் ஒன்று கொண்டு மட்டும் கைவரப்பெறுமா?, வேறொரு முறைகளும் தேவை இல்லாமல் எப்படி இத்தேகங்களை பெறுவது? ,யோகம் செய்வது வேண்டுவதில்லை எனக்கூறும் வள்ளலார் ஏன் விளக்கை கொளுத்திவைத்து “பாவனை” செய்துவரவேண்டும் என கூறுகிறார்? பாவனை என்பது யோக முறை இல்லை எனக்கூற முடியுமா?

சீவகாருண்யம் மட்டும் போதும் என்றிருந்தால் ஏன் முற்பாடு வர்தமான மகாதேவர், கவுதம புத்தர் ,நாகார்ஜுனர் முதலிய சீவகாருண்யமே தவநெறியாக கொண்டிருந்தவர்கள் சுத்த தேகத்தையும் பிரணவதேகத்தையும் ஞான தேகத்தையும் பெறக்கூடாமல் போயிற்று?,அவர்களும் மிகபலமான சீவகாருண்ய ஒழுக்கத்தையும் கொல்லாமை எனும் விரதத்தையும் கொண்டிருந்தார்களே?,ஏன் அவர்களால் பெற்று கூடாமை நம்மால் எப்படி ஆகும் என கொள்ளவேண்டும்???,

அறிவிற் சிறந்தோர் இதன் கூடாகூடுவை குறித்து புகலவும்.....

No comments: