Pages

Saturday, August 30, 2014

சன்மார்க்கக் கொடி எங்க போச்சு? - Ajiesh

நானும் பாத்துகிட்டே தான் இருக்கேன், எல்லாரும் அதை சொல்றாங்க இதை சொல்றாங்க, ஆனா ஒருத்தரும் சொல்ல வேண்டியதை சொல்லின பாடில்லை. சன்மார்க்க கொடியை தான் சொல்றேன், தப்பா எடுத்துக்காதீங்க.

சன்மார்க்கிகள் சன்மர்க்கிகள் என சொல்லிகொண்டு திரியறவங்க அதிகமாகத்தான் படுறாங்க, நல்லது ,சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா திரியறதோட சரி, உள்ள நொழயறத காண முடியலே என நெனக்கும் போது தான் வருத்தமா இருக்கு. பலபேருட்ட கேட்டு பாத்துட்டேன்,ஏம்பா சொல்லித்தாங்க, இதுக்காவது விளக்கம் சொல்லுங்கேண்ணேன், யாரும் சொன்னபாடில்லை. பிறகு எதுகுய்யா சன்மார்க்கிண்ணு சொல்லிக்கணும்னு கேக்க தோணுது.அதாங்க சன்மார்க்க கொடி கட்டிக்காதவன்லாம் சன்மார்க்கிண்ணா கோவம் வரத்தானே செய்யும், இது தப்பா? சொல்லுங்கப்பா.....

வள்லலாரும் கொடிகட்டிக்கணும்னு சொல்லுப்புட்டு போயிட்டார், அப்ப நாமும் கொடிகட்டிக்க வேணுமில்லையா? அது தானே சரி? அதுக்கு கொடிண்ணா என்னண்ணு தெரிஞ்சுக்க வேணுமில்லையா, அப்படீண்ணு கேட்டா “ஆமா”ண்ணு பதில் மட்டும் தான் எல்லாரும் சொல்றாங்க.ஆனா யாரும் அது எங்க இருக்குணு கேட்டா முழிக்கிறாங்க....ஒருசில பேர் ’எனக்கு தெரியும் நான் சொல்லமாட்டேன் அது குரு ரகசியம்’ங்கிறாங்க...அது உண்மையாண்ணா சுத்த பொய். தெரியாதனாலே சும்மா கதை விடுறாங்கண்ணு புரியுது.பெரிய “குரு”மார்கிட்ட வரை கேட்டுபாத்துட்டேன், ம்ஹூம்.....தெளிஞ்ச பாடில்லை, அப்படீண்ணா விட்டுட முடியுமா என்ன? எப்படி விடுறது?...அதான் நீங்க யாராச்சும் சொல்லுங்கோண்ணேன்.சொல்லுறீங்களா....அல்லது எடுக்கவேண்டியதை எடுக்கவா என்ன?...சும்மா தமாஷுக்கு சொன்னேன்.

சரி விஷயத்துக்கு வருவோம், நாபியிலேர்ந்து கொடி புருவ மத்திக்கு போகுதாம்லே...அதுக்குள்ள ரெண்டு நாடி இருக்குதாம்லே...அதுக்கும் சன்மார்க்கத்துக்கும் என்னய்யா தொடர்பு? அது எப்படியா சன்மார்க்கத்துக்கு ஒத்து வரும்ணு கேக்கலாம்லே...அதான் நான் கேக்கிறேன்...தப்பா என்ன?..ஹூம் ,அதெல்லாம் ஒண்ணுமில்லே, சன்மார்க்கம்ணா ஜீவகாருண்யம் மட்டுந்தேன்ணு சொல்றது காதிலே விழுது...கேட்டுகிட்டே தான் இருக்கேன், அப்படீண்ணா கொடி எதுக்கு?..சன்மார்க்கம் என்ன யோக மார்க்கமா என்ன, நாடியிலே ஏறவும் இறங்கவும்? அப்படி கேக்க தோணுதா என்ன?..ஆமா ,கேட்டுத்தான் ஆகணும். அப்படீண்ணா ஜீவகாருண்யம் சத்விசாரம் இவை ரெண்டும் விட்டு என்னய்யா சன்மார்க்க கொடி சொல்லும் சேதி?...சொல்லுங்கோண்ணேன்....காத கழுவிக்கிட்டு இருக்கேன்......சொல்லுங்கோண்ணேன்......



  • Ram Prakash Tamilmuni அத்தாங்கையா,தாங்களே இப்பதிவில் இறுதியாக சுட்டியிருக்கிறீரே நாபிமுதல் முழங்கைப்பிரமாணம் புருவமத்தியபாகமாய் ,மேலே இரண்டு ஜவ்வு மேலே மஞ்சலும் கிழே வெண்ணை நிறமுமாக ஆடிக்கொண்டிருக்கப்பதாக பெருமகனாரே வழங்கியிருக்கிறாரே ,சரி எனக்கொரு கேள்விங்கையா இதெப்படி சன்மார்க்கமாகாதென கூறுகிறீர்,அறிந்துகொள்வே கேட்டுக்கொள்கிறேன்,நன்றி
  • Gokulakrishnan Gokul வணக்கம் ஐயா
  • Hseija Ed Rian ஜீவகாருண்யமும் சத்விசாரமும் தானே சன்மார்க்கம்?..அப்படி இருக்கா இந்த கொடி எதுக்கு? எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது?...கேக்கலாம்லே...
  • Ram Prakash Tamilmuni அத்தாங்கையா சன்மார்க்கம் ,சன்மார்க்குத்துக்கு ஒரு முகவரி வேனுமுனு அந்த சாமுசித்தர் நினைத்தார் போலும்
  • Ramji Kathiravan // ஜீவகாருண்யமும் சத்விசாரமும் தானே சன்மார்க்கம்? // இல்லை. இதனுடன் யோகம் பயில வேண்டும். அதுவும் வள்ளலார் கருத்துப்படி 6 வேளைகள் தியானம் பயில வேண்டும்.
  • Sundarapandiyan Vijayan ஜீவகாருண்யமும் சத்விசாரமும் தான் சன்மார்கத்தின் ஆரம்பப்படிகள்... உங்கள் பக்குவம் முதிரும்போது... சரியை கிரியை ஆகிய படிகளில் இறுதி படிகளான ஞானத்தில் யோகமும், ஞானத்தில் ஞானமும் தானாய் கிட்டும்...

    கொடி என்பது ஞானத்தில் யோகம் என்னும் படி நிறைவு பெரும் தர
    ...See More



    இதுவரை யாரும் வெளிக்கொணராத கருத்துகளை, ஞானாசிரியர் பா. கமலக்கண்ணன் ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறார்.



    • Indranx Avataram Seri Hseija Ed Rian, ningeleh athey pathi kuringelen? Konjam terijekelam.... ethavathu other side view iruka'nu.... nadi anubavem enidam ilai, so sathyama teriyathu. Ungeluku irunthal antha anubavem share pannungel nanba.
    • Hseija Ed Rian வள்ளலார் அவருடைய கடைசி கால கட்டத்தில் தான் இந்த சன்மார்க்க கொடியை கட்டிக்கொண்டு பேருபதேசம் பண்ணி இருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை....அப்படியெனில் இதில் ஏதோ விஷயம் இருக்கிறதல்லவா?....ஜீவகாருண்யம் சத் விசாரம் இவை தவிர்த்து மூன்றாவதாக வருகிற விஷயம் இது....சன்மார்க்கிகள் கொடி கட்டிக்கொள்ளவேண்டும் என்பதே வள்ளலார் விருப்பம், அதுவும் அந்த கொடி உள்முகமாக கட்டிக்கொள்ளவேண்டும் என்றே அவர் கூறுகிறார்...அப்போது அதை தெரிந்து கொள்ளாமல் எப்படி கட்டுவது?...யர் கட்டி தருவது?அல்லவா?
    • Indranx Avataram Appo silla muyarchi'yin naal manithen silla tayaar nilai anubavem peralam allava? Thavam peruga-peruga ullam uruga, ullirukum silla thaathugel vilakkathe'yum athen nilavaratheyum terinthu kollalam allavah? Uyir nadi visaiyathey pathi inum entha orru anbergelum anubavem peravilai ya? Erm...... appo silla athi-thieviira muyarchi vazhai'yil todangenum. Erm......
    • Indranx Avataram Hseija ningel uyir nadibanubavem pettru irukirgela?
    • Hseija Ed Rian சன்மார்க்கத்தில் யோகமும் ஞானமும் உண்டு....அதை வள்ளலாரே தெளிவுபடுத்தி உள்ளார்கள்.....அதாவது சன்மார்க்க கொடியை அறிந்து கொள்ளுமுன் சன்மார்க்க யோகமும் சன்மார்க்க ஞானமும் நாம் தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும்...அது முக்கியம்
    • Hseija Ed Rian வள்ளலாரே யோகிகள் என்பவர் யார், ஞானிகள் என்பவர் யார் என வரைமுறை படுத்தி தெளிவாக்கியுள்ளனர் ....அங்கு யாகிகள் செய்யும் யோகம் என்ன ஞானிகள் செய்யும் ஞானம் என்ன எனவும் விளக்கியுள்ளார்கள்.
    • Hseija Ed Rian இவை ரெண்டும் புரியும் போது சன்மார்க்க கொடி இன்னது என புரியவரும்

No comments: