Pages

Saturday, August 30, 2014

ஓ என்பது என்ன? - Ajiesh

பொதுவாக நாம் அனைவரும் ஆதிமுதல் தெரிந்திருப்பது “ஓம்” என்பது வேதங்களில் வெளிப்படுத்தப்பட்ட முதல் சப்தம் என்பதே. ஆனால் அனைவராலும் மறைக்கப்பட்ட அருள் ஞானமே “ஓ” எனும் மறை சப்தம். நீங்கள் கேட்பது என் காதுக்கு கேட்கிறது”இவன் யாருடா புதுசா கதைவிடுரான்ணு?” அப்படித்தானே?..ஆனால் இது உண்மை. உங்கள் குருபிரான்மார்களும் ஞானிகளும் ஏமாத்திவிட்ட கதை தான் இது.வேதங்களில் தேடுங்கள்,எங்குமே “ஓம்” என எழுதப்படவில்லை.

வேதங்களில் எங்குமே “ஓம்” எனும் சப்தம் எழுதப்படவில்லை, மட்டுமல்ல அனாதி காலம் முதல் காதுவழியாக மட்டும் உபதேசிக்கப்பட்ட செவிசெல்வமான “ஓ’ என்பது மறைபொருளாக மறைக்கப்பட்டது என்பதுவே உண்மை. வேதங்களில் “ஓ” எனும் ஒருமொழியான பிரணவமே எழுதப்பட்டுள்ளது, “ நீங்கள் நினைக்கும் மாதிரி “ஓம்’ என எங்குமே இல்லை.முதல் முதலாக “ஓம்” என்று எழுதப்பட்டது உபநிடதங்களில் மட்டுமே.அதன் பிற்பாடு தான் அனைவரும் “ஓம்” எனவே சொல்லவும் எழுதவும் ஆரம்பித்தனர்.இதனையே அகத்திய பெருந்தகை” உயிரெழுத்து” என்கிறார். இந்த உயிரெழுத்தானது உலகத்தில் இருக்கிறது,அதனை கண்டு அதனை பற்றிக்கொண்டு முக்தி இன்பம் பெறுவோமாக.இந்த உயிரெழுத்தினையே கிறிஸ்த்து பெருமானார் “ஜீவ வார்த்தை’ என புகன்றார் என்பதையும் கருத்தில் கொள்வது நலம்....ஆகையினால்”ஓ” என்பது என்ன என்று தேடுங்கள்.



  • Ramji Kathiravan 'ஓ' என்பது செவிக்கு உணவாக இருக்கலாம். ஆனால் 'ஓம்' என்பது அனுபவத்தில் காணக்கூடிய ஒன்றாக ஏன் இருக்கக் கூடாது ?. வேண்டுமானால் 'ஓ' என்ற சத்தத்தைக் கடந்து சென்றால் "ஓம்' ஐக் காணலாம் என்று கூட இருக்கலாம் அல்லவா...
  • Hseija Ed Rian ஆனால் அனாதி காலம் முதல் வேதங்களில் எழுதப்பட்டது....அவர்கள் அனாதி காலம் கருத்தில் கொண்டு உயிர் வாழ்ந்தது....ஓம் என்பது பிற்பாடு உருவாகிய இடைசொருகல்..Ramji Kathiravan
  • Ramji Kathiravan இருக்கலாம். ஆரம்ப காலத்தில் இருந்த அனுபவம் காலம் செல்ல செல்ல இன்னும் ஆழமாக நுணுக்கமாக உணரப்படும்போது ஏன் 'ஓம்" என்பது வெளிப்பட்டு இருக்கக்கூடாது. அத்வைதம் எனும் கோட்பாடு ஆரம்ப காலத்தில் இருந்ததா. அனுபவம் ஆழப்பட ஆழப்படத்தானே சன்மார்க்கிக்கு வேண்டியது சகஜபழக்கம் தான் சமாதி பழக்கம் அல்ல என வள்ளலாரால் எடுத்துரைக்கப்பட்டது. இடைச் செருகலா இல்லையா என்பதைவிட 'ஓம்' என்பது அனுபத்தில் உண்மையாக இருக்குமா இருக்காதா என்பதே கேட்கப்பட வேண்டிய கேள்வியாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான கருத்து ஐயா..
  • Hseija Ed Rian வேதங்கள் இரைவனால் வெளிப்படுத்தப்பட்டவை..ஆராய்ச்சிசெய்து கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல....அப்படியே”ஓ” என்பதும் இறைவனால் அருளப்பட்டதுவே.....ஆனால் உபனிடதங்களில் எழுதப்பட்டிருக்கும் ஓம் என்பது ஆராய்ச்சிசெய்து கண்டுபிடிக்கப்பட்டது என்பதுவே உண்மை.Ramji Kathiravan
  • Ramji Kathiravan // வேதங்கள் இரைவனால் வெளிப்படுத்தப்பட்டவை..ஆராய்ச்சிசெய்து கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல....// வேதங்கள் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை எனில் யார் மூலமாக வெளிப்படுத்தப்பட்டவை? வெளிப்படுத்த பயன்படுத்திய மொழி என்ன? இது இறைவனால்தான் அருளப்பட்டது என எடுத்துரைத்தவர் யார்? என்ற கேள்விகளும் கேட்கப்பட வேண்டும் ஐயா. ஒருவேளை வேதங்கள் இறைவனால்தான் மனிதன் மூலமாக வெளிப்படுத்தப்பட்டவை எனில் அந்த மனிதனின் தன்மை யாது என்பதும் இங்கு சிந்திக்கப்பட வேண்டும். அதாவது யாரோ ஒரு மனிதன் வழிப்போக்கனாக செல்லும்போது திடிரென இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு நான் தரும் இந்த வேதங்களை மனிதருக்கு எடுத்துரை என்று அருளப்பட்டதா அல்லது இறைசிந்தனையில் ஆழ்ந்த ஒருவருக்கு அருளப்பட்டதா என்பதுதான் இங்கு வைக்கப்படும் கேள்வி. வழிப்போக்கருக்குத்தான் அருளப்பட்டது எனில் வேதங்கள் இறைவனால்தான் அருளப்பட்டது என எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இறையைப் பற்றிய அடிச்சுவடு தெரியாதவன் இறையைப்பற்றி துல்லியமாகப் பேசுகிறான் எனில் வேதங்கள் திடிரென தோன்றியவை என ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் மாறாக இறைசிந்தனையில் ஆழ்ந்த சிலருக்குத்தான் வேதங்கள் எடுத்துரைக்க அருளப்பட்டிருக்கு என்றால் இது சிந்திக்கப்பட வேண்டிய விசயம். அதாவது இறைசிந்தனையில் ஆழ்ந்த சிலர் தனது அனுபவங்களை இறைவனின் பெயரால் ஏன் வெளிப்படுத்தியிருக்கக் கூடாது என்பதுதான் இங்கு வைக்கப்படும் கேள்வி. இல்லை இதற்கான வாய்ப்புகள் இல்லை எனும்பட்சத்தில் உங்கள் கருத்தை நான் அறிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
  • Hseija Ed Rian உண்மை...மெச்சுகிறேன்....
  • Cap Tain Jack Sparroow வாதத்தின் நடுவில் வருவதர்க்கு மன்னிக்கவும்..

    நாதத்தை உணரும் இடம் எது வேன்று சொல்ல முடியுமா.
  • Hseija Ed Rian இறை அனுபவம் என்பது தேடுதல் வேட்கை உடையவருக்கு தான் அருலப்படும் என்பதுவே உண்மை...அனாதி காலம் , அது அனாதி என்றால் அனாதிக்கும் அனாதியான காலத்தில் இருந்து செவிவழியாக வந்து கொண்டிருந்த ஒரு மொழியேயாம்.....உண்மையில் வேதங்கள் என்பது மொழியன்று.....அது சப்தங்களின் ஒரு கோர்வையே....ஒரு கருத்தை அது வெளிப்படுத்துவதில்லை....பிற்பாடு அறிஞர்கள் அந்த சத்தங்களுக்கு விளக்கவுரை கொடுத்தனர்.....அப்படித்தான் வேதங்கள் இன்றளவும் இருக்கின்றன...பண்டிதர்கள் பலப்பல விதங்களில் வேத ஸ்லோகங்களை வியாக்கியானம் செய்யமுடியும்...ஒரு ஸ்லோகத்திற்க்கு ,அதன் உச்சரிப்பிற்க்கு பல விளக்கங்களும் விருவுகளும் இருக்கின்றன...ஆனால் வேதங்களில் உள்ளவையோ ஒரு உச்சாரண கோர்வை மட்டுமே.....அது மொழியன்று...கதால் கேட்டு கேட்டு வழிவழியாகவந்த மந்திரங்கள் மட்டுமே...
  • Hseija Ed Rian சன்மார்க்கத்திலும் சத்விசாரனை என்பது தேடுதலையே குறிக்கிறது...கிறிஸ்து பெருமானார் கூறுவதும் நீங்கள் தேடுங்கள் என்பதையே...அல்லாது வெதங்கள் மொழியிலோ மதத்திலோ குறிப்பாக நாட்டமுடையவையோ..நிலைகொண்டவையோ அல்ல....அப்படி ஆழ்ந்த இரை வேண்டுதல் உடையோருக்கு அருலப்படுவதுவே வேதங்கள்....
  • Hseija Ed Rian இதெல்லாம் கடந்த உரையற்ரதுவே உண்மை....
  • Cap Tain Jack Sparroow //ஆனால் வேதங்களில் உள்ளவையோ ஒரு உச்சாரண கோர்வை மட்டுமே.....அது மொழியன்று...கதால் கேட்டு கேட்டு வழிவழியாகவந்த மந்திரங்கள் மட்டுமே...//

    'ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியுந்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும்' என்று பாரதி பாடுவது போல், சிவசக்தியே நாதவிந்துவாய், ஒலியுலகாய், ஒளியுலகாய் விரிந்து எங்கும் நிறைவன. விந்து எனும் ஒளி, யோக உச்சியில், நாதம் எனும் ஒலியில் அடங்கிப் பின் நாதாந்தம் ஆகும். 

    இதற்க்கு உங்கள் கருத்து...
  • Hseija Ed Rian சிவன் எனவும் சக்தியெனவும் அறியும்காலத்துக்கு முன்....மனிதன் தோன்றுவதற்க்கு முன்...சிவன் எனவும் சக்தி எனவும் பெயர்பெறும் முன்...அகிலத்தையும் படைத்த அருல் கொடையாக உதித்த இறையே உண்மை...
  • Cap Tain Jack Sparroow Hseija Ed Rian

    அகத்தியர் - தனிஞானம் - 4 
    =========================
    விந்துநிலை தனியறிந்து விந்தைக் கண்டால்
    விதமான நாதமது குருவாய்ப் போகும்;
    அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
    ஆதியந்த மானகுரு நீயே யாவாய்! 

    நன்றி 
    =====
  • Hseija Ed Rian நாதவும் விந்துவும் உலகத்திற்க்கு தோன்றுமுன் இருப்பதுவே உண்மை...
  • Hseija Ed Rian அதுதான் நானும் சொவது...”ஆதிஅந்தமானதுவே...உண்மை”..
  • Hseija Ed Rian ஓ என்பதற்க்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை....ஓம் என்பதற்க்கு அந்தம் உண்டு...
  • Hseija Ed Rian ஓம் என்பதற்க்கு ஆதி “அ” என்பதுவே...ஆனால் “ஓ’” என்பதற்க்கு ஆதி என்றால் அது ஓ மட்டுமே, அந்தம் என்றால் அதுவும் ஓ மட்டுமே.....
  • Ramji Kathiravan வேதங்கள் சப்தங்களின் கோர்வையாக இருக்கும்பட்சத்தில் " மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கத் தேவையில்லை " என்ற கருத்து திருமூலரினால் வைக்கப்படும்போது வேதங்களைவிட இந்த மனமானது முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது அல்லவா. இதனையே கீழ்வரும் சித்தர்கள் வேறுவகையில் வேதங்களை சுட்டிக்காட்டி கூறுகின்றனர். "சதுர்வேதம் ஆறுவகை சத்திரம் பல 
    தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம் 
    விதவிதமான தான வேறு நூல்களும் 
    வீணான நூல்கள் என்றாடாய் பாம்பே 
    :- பாம்பாட்டி சித்தர் சாத்திரங்களோதுகின்ற சத்த நாத பட்டரே 
    வேத்திறைப்பு வந்தபோது வேதம் வந்துதவுமோ 
    மாத்திரைபோதும் உம்முள்ளே அறிந்தொக்க வல்லிரேல் 
    சத்திரைப்பை நோய்களேது சத்தி முத்தி சித்தியே ----- சிவவாக்கியர்
  • Hseija Ed Rian உண்மை ..அதனால் தான் சொல்கிறேன் நாலு வேதங்கலும் அதன் உரைகளும் நீங்கள் கருதுவது போலல்ல......
  • Hseija Ed Rian அவை நீங்கள் கூறும் உரைகளுமல்ல....நீங்கள் கொள்ளும் அர்த்தங்களும் அல்ல....
  • Hseija Ed Rian எல்லா வேதங்களும் “ஓ” என்பதில் இருந்து தோன்றி “ஓ’ என்பதில் அடைந்து விடுகின்றன...அதனையே அறிய சொல்கிரேன்.....உயிரெழுத்தையே அறியும்படி சொல்கிறேன்....
  • Cap Tain Jack Sparroow மன்னிக்கவும் ..இடையில் வருவதற்க்கு

    //" மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கத் தேவையில்லை " என்ற கருத்து திருமூலரினால் வைக்கப்படும்போது //

    அகத்தியர்
    ==========

    ஞானம் – 2
    ==========

    காப்பு
    =====

    அறுசீர் விருத்தம்
    ================

    மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
    மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
    மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
    மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே

    அகத்தியர் கருத்து
  • Ramji Kathiravan நன்றி. தவறை சுட்டிக்காட்டியதற்கு.
  • Hseija Ed Rian ஆனால் செம்மையாகும் வரைக்கும் செபிக்கவேண்டுமல்லவா...?
  • Ramji Kathiravan ஐயா, நீங்கள் செபிக்க சொல்வது எதை.. மந்திரம் என்றால் உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்கள் மாறும்போது விளைவுகளும் மாறிவிடும் அல்லவா. அதில் ஆபத்து இருக்கத்தானே செய்கிறது..
  • Hseija Ed Rian நான் சொவது உயிர் எழுத்தை ....அதையே மந்திரம் என்பர்....உயிரில்லா எழுத்தை மொழி என்பர்.....
  • கார்த்தி கேயன் iyya intha uyir eluthai pesatha eluthu endru kollalaama??
  • Hseija Ed Rian இது அதெல்லாம் கடந்த எழுத்து...ஐயா..
  • Hseija Ed Rian மொழி என்பது உருவாகும் முன்னெ உள்ளதுவும்....மனிதன் தோன்றுவதற்க்கு முன்னே உள்ளதுவுமாகும்...
  • Hseija Ed Rian அந்த உயிரினாலேதான் அனைத்து உயிர்களும் நிலைகொண்டுள்லன....அது உலகத்திற்கே உயிரோட்டமாகவும் உணர்வோட்டமாகவும் உள்ளது....
  • Hseija Ed Rian எப்படி உயிர் உடைய நாம் இருக்கும் போது நம்மைசுற்ரி வீடுமுதலிய கருவிகரணாதிகள் உள்ளதோ...அப்படியே அந்த உயிர் இருப்பதினால் அதை சுற்றி கிரக நட்சத்திர முதலியவை இருக்கின்றன.....
  • Ramji Kathiravan ஐயா, " ஓ " என்பது தொடங்கிய இடத்திலே இருந்தால் முயற்சிக்கு வேலை என்ன. இப்பொழுது 'ஓம்" என்பதைப் பற்றி பார்ப்போம். ஓம் என்பது அ+உ+ம் என்று பிரித்துப்பார்க்கப்படுகிறது. இந்த எழுத்துக்கள் நமது உடலோடு தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. செபிக்கும் போது 'அ' வில் தொடங்கி 'ம்' முடிய வேண்டும். 'ம்' ல் கட்டாயமாக முடிய வேண்டுமா எனப்பார்த்தால் ஆம் எனத்தான் தோன்றுகிறது. இங்கு அந்தம் முடிவு எதற்கு எனப் பார்க்கையில் மனதிற்குத்தான் என்றும் புலப்படும். எப்பொழுது மனம் அது அடங்குகிறதோ அப்பொழுதுதான் இறை அனுபவம் கைகூட ஆரம்பிக்கிறது. மனமது அதன் உற்பத்தி ஸ்தானமான உயிரில் அடங்க வேண்டும். கட்டாயமாக அடங்கியே ஆக வேண்டும். அதுவரை இறை அனுபவம் சித்திப்பதில்லை. எனவே "ஓம்" என்பதற்கு அந்தம் அவசியம் தேவை. இங்கு அந்தம் என்பது மனதிற்குத்தானே தவிர உயிருக்கு இல்லை. எனவே முடிவாக "ஓம்" என்பது இடைச்செருகலாக இருந்தாலும் மனம் அடங்குவதற்கு அது தேவை. அதேசமயம் "ஓ" என்பது உயிர் உடன் தொடர்புடையது என நீங்கள் கூறுவதால் ஒருவேளை மனம் அடங்கி உயிர்மட்டும் விளங்கும் நிலையில் உணரப்படக் கூடிய ஓசையாக இருக்குமா என்றும் சிந்தனையும் வருகிறது. ஆனால் அதேசமயம் கோவில், தியான தத்துவங்களை வைத்துப் பார்க்கும்போது ஒளி அனுபவத்திற்கு முன் நிலைதான் ஒலி அனுபவம். ஒளி அனுபவம் கிடைத்தபின்னும் ஒலி அனுபவம் இருந்துக்கொண்டுதான் இருக்குமா என்பது ஏற்படும் சந்தேகம். இதற்கு நீங்கள் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.
  • Hseija Ed Rian நீங்கள் கூறும் ஒளி ஒலி தத்துவங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் இரண்டையும் கடந்து நிற்பதுவே உயிர் தத்துவம்....ஒளியும் ஒலியும் மனதினால் காணப்படுவதும் கேட்க்கப்படுவதும் ஆம்....ஆனால் உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்...அதற்க்கு மனம் தேவை இல்லை.....ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும்,அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?...அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை,அறிவு உருவானாலேபோதுமானது...அறிவானதே அந்தகாரத்தை ஊடுருவும் தன்மை கொண்டது...அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்...அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்....எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது....
  • Parameshwaran Thangavelu HU is woven into the language of life. It is the Sound of all sounds. It is the wind in the leaves, falling rain, thunder of jets, singing of birds, the awful rumble of a tornado.... Its sound is heard in laughter, weeping, the din of city traffic, ocean waves and the quite rippling of a mountain stream. And yet, the word HU is not God. It is a word anywhere can use to address the Originator of life. 
    Harold Klemp.
  • Hseija Ed Rian but I prefer OMEGA AND ALPHA WISDOM OF CHRIST AND ALL OUR ANCESTERS....MrParameshwaran Thangavelu...Ramji Kathiravan..Ravichandran Osho....Muthu Kumar
  • Ramji Kathiravan ஐயா, 
    // ஒளி ஒலி தத்துவங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் இரண்டையும் கடந்து நிற்பதுவே உயிர் தத்துவம் // 
    புருவ மத்தியில் ஆரம்பிக்கும் ஒளி அனுபவம் பிரம்மரந்திரம் வரைக்கும் ( அதற்கு மேலேயும் இருக்கலாம்) இருக்கத்தானே செய்கிறது. இங்கு உயிர் தத்துவம் என்பது ஆன்மாவைக் குறிக்கிறதா அல்லது அந்த ஆன்மாவிற்கும் ஆதாரமாக உள்ள இறையைக் குறிக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எதுவாக இருந்தாலும் புருவ மத்தியில் தொடங்கி பிரம்மரந்திரத்திற்குள் அடங்கிவிடும் அல்லவா. (அதற்கு மேலும் நிலைகள் இருப்பது வேறுவிசயம்). அப்படியிருக்கையில் ஒளி அனுபவம் தலைக்குள் அடங்கிவிடும்போது உயிர் தத்துவமும் இந்த உடலுக்குள்தானே இருக்கவேண்டும். அதுவும் ஒளி அனுபமாகத்தானே இருக்க வேண்டும். ஞானிகள் அனைவரும் ஆன்ம அனுபவத்தை, இறை அனுபவத்தை ஒளி அனுபவமாக உணர்ந்ததாகத்தானே கூறுகிறார்கள். ஒருவேளை ஒலி,ஒளி அனுபவங்களைக் கடந்த நிலை என்றால் அந்த அனுபவம் எப்படி இருக்கும்?

    // ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும்,அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா? // முரண்பாடாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதற்கு சில வார்த்தைகளை சுட்டிக் காட்டுகிறேன். மௌன ராஜ்ஜியம், மோன நிலை, சூன்ய பதவி போன்ற வார்த்தைகள் எதனைக் குறிக்கிறது. இறைநிலை சிவநிலை என்று குறிக்கப்பட்டால் சிவனின் அழித்தல் தொழில் எதனைக் குறிக்கிறது.

    // அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை,அறிவு உருவானாலேபோதுமானது.. // 
    அறிவு என்பது நித்தியமானது என்று கூறப்படுகிறது. எனவே இங்கு அறிவு உணரப்பட்டாலே போதுமானது. நித்தியமான ஒன்றை உணர்வதற்கு மனம் அடங்கவேண்டியதில்லை எனில் தியானம், புலனடக்கப் பயிற்சி போன்றவை எதற்காக.
    // .அறிவானதே அந்தகாரத்தை ஊடுருவும் தன்மை கொண்டது...அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்... //
    ஏற்றுக்கொள்கிறேன் ஐயா.
  • Hseija Ed Rian உதாகரனத்துக்கு சொன்னால்,இனிப்பு என்பதை எடுத்துகொள்வோம்..இனிப்பு என்பது ஒளியும் இல்லை ஒலியும் இல்லை..ஆனால் உயிர் அனுபவம் இல்லயா...அதுபோலவே தான் பலவிதங்கள்......ஒளி ஒலியென்றால் கண் காது ரெண்டும்தான் எடுத்துகொள்கிரோம்...ஆனால் ஞானம் என்றால் கன்காது ரெண்டினால் மட்டும் வருவது என்று பொருள்க்ள்லக்கூடாது....திருமூலர் சொன்னபடி ஐந்தும் அடக்கா அறிவறியவேண்டும்....அது அனைதிலும் அனைத்துமாக இருக்கும் உயிர் அறிவாகும்....அந்த உயிர் அறிவில்லை எனில் ஏனைய இந்திரியங்களால் ஆவதொன்ரில்லை...

No comments: