Pages

Saturday, August 30, 2014

குண்டலினீயின் ரகசியம் - Ajiesh

குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும்.

ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்.

சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்.

ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்.

இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்.



  • Indranx Avataram பெருமான் இதெய் எந்கேய் கூறுகிறார்? விளக்கம் வேண்டும். நன்றி
  • Hseija Ed Rian பெருமான் இதை அகரத்தின் விளக்கதில் கூறாமல் கூறுகிறார்Indranx Avataram
  • Indranx Avataram அப்போ இதை எங்கும் கூறவிளை. நன்றி வணக்கம்.
  • Hseija Ed Rian அகரத்தில் விந்து எப்படி வருகிறது....சன்மார்க்கிகளின் அனுபவ நிலைகளில் குண்டலி வட்டம் இல்லை என்கிரீர்களா? அதை வள்ளல் பெருமான் கூறவில்லை என்கிறீர்களா? Indranx Avataram
  • Indranx Avataram Seniors will answer you nanba 
  • Pothigaipriyan Vallalar சீவகாருணிய ஒழுக்கத்தின் இலக்கணம் என்னென்று அறிய வேண்டில்:- சீவர்களுக்குச் சீவர்கள் விஷயத்தில் பொதுவாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள்வழிபாடு செய்து வாழ்தல் என்று அறியவேண்டும்.

    சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்வது எப்படி என்றறியவேண்டில்:- சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் - காருணியம் - உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும்; அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும். அவ்வனுபவம் பூரணமாதலே கடவுள்வழிபாடு என்றறிய வேண்டும்.

    ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள்விளக்கமாகிய அருள் வெளிப்படுவது எப்படியென்றறியவேண்டில்:- தயிருக்கும் கட்டைக்கும் கடைதலால் நெகிழ்ச்சி உண்டாக உண்டாக அதன் அதன் உள்ளிருக்கின்ற வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படுவதுபோல் வெளிப்படுமென்று அறியவேண்டும்.

    திருவருள் விளங்க அதனால் கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாவது எப்படியென் றறியவேண்டில்:- வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படவே அவற்றின் உண்மைத் தன்மை அனுபவமாகிப் பூரணமாவது போல், கடவுள் இன்பம் பூரணமாகுமென் றறியவேண்டும்.
  • Pothigaipriyan Vallalar கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்
  • Pothigaipriyan Vallalar கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடா தென்பது எப்படி என்னில்:- அருளென்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம். சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்றறிய வேண்டும்.
  • Pothigaipriyan Vallalar புண்ணியபூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணியமூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூசைசெய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும்,note Mr Hseija bother= ===உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச்சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும்====, சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும். இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்.
  • Pothigaipriyan Vallalar vallalar statment in PERUPATHESAM,only mercy not for kundalini yoga...................என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். Note brother====என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது====.அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.
  • Hseija Ed Rian அம்மம்மா....ஒருசின்ன விஷயத்துக்கு இந்தளவு பெரிய விளக்கமா??/அப்படீண்ணா அய்யனே சத் விசரம் எதுக்கு ,ஜீவகாருண்யம் மட்டுமே போதுமல்லவா?...அன்றியும், பரவிசாரிப்புடன் இருக்கும் போது உஷ்ணம் உண்டாகுமல்லவா?..அந்த உஷ்னம் இங்கு எதுக்கு? உஷ்னம் என்ன செய்யப்போகிறது?உங்களுக்குத்தான் ஜீவகருண்யம் மட்டும் போதுமல்லவா, பிறகு உஷ்ணம் எதற்க்கு அய்யனே? அன்றியும் உஷ்ணம் என்பது என்ன அய்யனே? அது குண்டலினீ அல்லவா?Pothigaipriyan Vallalar Indranx Avataram
  • Pothigaipriyan Vallalar all the above statement not for me & indaran right ,so now u tell me why vallalar given like above statement ?
  • Hseija Ed Rian நமது ஆன்மாவை மூடி இருக்கிற பச்சை திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது நீக்கமுடியாது என்றல்லவா பேருபதேசம் கூறுகிறது?...அப்படியெனில் இந்த பச்சை திரையை எப்படி ஜீவகாருண்யம் கொண்டு மட்டும் நீக்கமுடியும் அய்யனே? அப்போது இங்கு இந்த பச்சை திரையிடம் ஜீவகாருண்யம் வேலை செய்யாது என்பது தெளிவாகிரது அல்லவா?...அன்றியும் இந்த பச்சை திரையானது விலகாமல் எப்படி தெய்வவழிபாடு உண்மையாகும் அய்யனே?சாட்சாத்காரம் இல்லாமல் போய்விடுமல்லவா?
  • Pothigaipriyan Vallalar என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது====.அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.
  • Pothigaipriyan Vallalar vallalar told DO SATHVISAARAM NOT IT KUNDALINI YOKAM BROTHER
  • Hseija Ed Rian நோய் குனமடைய மருந்து வேண்டும்..அந்த படியே பத்தியமும் வேண்டும்....அதர்க்காக பத்தியமே மருந்து என சொல்லுதல் நன்ரா...விசார அதியுஷ்ணம் என்பது என்ன? அது எதற்க்கு ?...அது எப்படி சன்மார்க்கத்தில் வருகிறது...அந்த உஷ்ணத்தையே யோகிகள் காடுகளில் சென்று உண்டாக்கி கொள்கின்றனர்....இது அந்த குண்டலினீ அக்கினிதான்...வேறு ஒன்றுமில்லை
  • Hseija Ed Rian இந்த குண்டலினீ அக்கினியின் உஷ்னமே ஆன்மாவை மரைத்திருக்கிற ராகாதி பச்சை திரையை விலக்கும் தன்மை உடையது அன்பரே...
  • Pothigaipriyan Vallalar yoki did kundalini ok but what vallalar said if do SATHVISAARAM you wil get more than what joki got it, note it this line
  • Hseija Ed Rian யோகிகள் அந்த உஷ்ணத்தினை யோகம் செய்து உண்டு பண்னுகிறார்கள்...சன்மார்க்கிகள் விசார அதி உஷ்ணத்தல் உண்டு பண்னுகிறார்கள்..எப்படி என்ரு தெரிந்தவர்களுகு தெரியும், வள்லலாரும் அதை விலாவாரியாக விளக்காமல் வேலாயுதனாரிடம் கேட்டுதெரிய சொன்னார்..வேலாயுதனார் சொல்லவுமில்லை.
  • Pothigaipriyan Vallalar not குண்டலினீ அக்கினியின் உஷ்னமே ,it s pure SATHVISAARAM + MERCY
  • Hseija Ed Rian சத் விசாரம் வேறு கருணை வேறு நண்பரே...
  • Pothigaipriyan Vallalar S TRUE WE NEED TWO THINKS IN SANMAARKKAM
  • Hseija Ed Rian சத்விசாரத்தினால் பெற்றுக்கொள்வதே அதிஉஷ்ணம்...அது சாதாரண விசாரத்தால் வருவது இல்லை
  • Hseija Ed Rian ஜீவகாருண்யத்தை வள்ளலார் நன்றாகத்தான் விளக்கி உள்ளார்,,அது இன்று பிறந்த குழந்தைக்கு கூட புரியும்...ஆனால் சத்விசாரம் அப்படி இல்லை...சாதாரணமாக புரியாது...எப்படி உஷ்ணம் உண்டு பண்னுவது என்பது சொல்லப்படவில்லை
  • Pothigaipriyan Vallalar SANMAARKKAM DIFFERENT FROM SITHTHAR MAARKKAM DONT CONFUSE BROTHER THATS WHY VALLALAR SAID மூவருந் தேவரு முத்தருஞ்NOTE IT== சித்தரும் ===
    யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை 
    போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் 
    ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
  • Hseija Ed Rian சன்மார்க்கியின் அனுபவநிலை என்ரு வள்லலார் கூறுமிடத்துகூட குண்டலினீயும் அதில் ஒன்றாகத்தான் கூறுகிறார்...ஆனால் நீங்களோ குண்டலினீ சன்மார்க்க அனுபவ நிலை இல்லை என கூறுகிறீர்கள்...இது எப்படி அன்பரே?
  • Pothigaipriyan Vallalar குண்டலினீ THE WORD NOT AND ALL USE ANY PLACE whether it Arutpa and all urainadai .then why should we use brother ?
  • Hseija Ed Rian ஞான யோக அனுபவ நிலை என்ரு வள்லலார் உரைநடையில் கூறுவதில் குண்டலி வட்டமும் உண்டு....அதுவும் அனுபவமே..சன்மார்க்க நிலையே...ஆறாம் திருமுரையிலும் குண்டலினீபால் உண்டு
  • Pothigaipriyan Vallalar That kind of evidence songs please here ,,,,,,,,,...
  • Indranx Avataram Pothigaipriyan Vallalar brother, our friend Hseija Ed Rianalways want be different from others, he is in his own research on his own margam. Don't disturb him  let he do what he want  He is not listen you at all from above clearly said, he want his KUNDALINI alive. Hehe.. even you provide songs, no use. Nanbenda.
  • Indranx Avataram https://www.youtube.com/watch?v=yg8Kx3TL9NQ
    Title: Perubadesam Page: 472 - 474 (Urai Nadai) Speaker: Swamy Dharmalingam Face...See More
  • Indranx Avataram 10:56 timeline please watch
  • Indranx Avataram 28:20 timeline
  • Indranx Avataram 32:09 timeline
  • Indranx Avataram 40:00 timeline
  • Thanga Jyothi // குண்டலினீ THE WORD NOT AND ALL USE ANY PLACE whether //it Arutpa and all urainadai .then why should we use brother ?
    Its there
    குண்டலிவட்டமான நாடி மத்தியிலுள்ள பச்சை வண்ணமான சத்தியிலிருந்து ஒரு நாடி உண்டாய் இரண்டு தலையாய் விரிந்து ஒரு தலை மேலும் ஒரு தலை கீழும் செல்லுகின்றது. இந்த நாடிகளின் மூலமாய்
  • Thanga Jyothi 126. ஞானயோக அனுபவ நிலைகள்

    1. படிகமேடை

    2. ஆயிரத்தெட்டுக் கமல இதழ்

    3. ஓங்காரபீடம்

    4. குண்டலிவட்டம்

    5. ஜோதிஸ்தம்பம்

    6. சுத்தநடனம்

    இவற்றை அனுபவத்தினாலறிக. இஃது நிராதார லக்ஷணம்.
  • Pothigaipriyan Vallalar which thiru murai above song
  • Thanga Jyothi http://thiruarutpa.org/Tamil/VORG000000047B
    thiruarutpa.org
    Vallalar, தயவு, ஜோதி, வள்ளல் பெருமான்,இராமலிங்க வள்ளலார்,திரு அருட்பா, சமரச சுத்...See More
  • Pothigaipriyan Vallalar athu avar samyathil irunthapothu ,athaiyella latchiyam vaikka ventam entru PERUPATHESATHIL kooriyullar...,,
  • Thanga Jyothi //உரைநடையில் கூறுவதில் குண்டலி வட்டமும் உண்டு.

    அப்போ இது எல்லாம் வேண்டியது இல்லையா?
  • Pothigaipriyan Vallalar 101. சுத்தசன்மாக்க சாதனம் (பரோபகாரம், சத்விசாரம்)

    பரோபகார மென்பது யாது? தேகத்தாலும் கரணத்தாலும் இந்திரியத்தாலும் திரவியத்தாலும் ஆன்மாக்களுக்கு உபகரித்தல், திரவியம் நேராத பட்சத்தில், திரிகரண சுத்தியாய் ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடு எல்லாச் சீவர்களினது வாட்டத்தைக் குறித்தும் பிரார்த்தித்தல். சத்விசாரமென்பது கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது. சிவானுபவமாகிய தேகத்திரயம் பெறுவதற்கு==== மேற்குறித்த இரண்டு துவாரந் தவிர வேறில்லை=====. மேலும் தயவென்பது இரண்டு வகைப்படும். யாவெனில் கடவுள் தயை ஜீவ தயை ஆகிய இரண்டு. கடவுள் தயை யென்பது இறந்த உயிரை எழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பட்சி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால் ஊட்டி வைத்தல், சோம சூரி யாக்கினிப் பிரகாசங்களைக் கால தேச வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல், பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல், அபக்குவிகளைச் செய்ய வேண்டிய அருள் நியதியின்படி தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல். ஜீவதயை யென்பது தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.
    June 23 at 3:20pm · Edited · Like · 1
  • Pothigaipriyan Vallalar IN PER UPATHESAM =என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது====.அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.
  • Thanga Jyothi இதுவும் சமயத்தில் இருந்த போது எழுதியாதா ?
    http://thiruarutpa.org/Tamil/VORG000000040B
    thiruarutpa.org
    Vallalar, தயவு, ஜோதி, வள்ளல் பெருமான்,இராமலிங்க வள்ளலார்,திரு அருட்பா, சமரச சுத்...See More
  • Thanga Jyothi நமது சிறுமையையும் 
    கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, 
    நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது. 

    விசாரத்தில் என்பது எப்படி செய்வது? ஒரு எடுத்துகாட்டு ???
  • Hseija Ed Rian 4136-ஒரு மடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர் உளம் வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது பெருமடஞ்சேர் பிள்ளாய் என் கெட்டதொன்றும் இலை நம் பெருஞ்செயல் என்றெனை தேத்தி பிடித்தபெருந்தகையே திருமடந்தைமார் இருவர் எனெதிரே நடிக்க செய்தருளி சிறுமை எலாம் தீர்த்ததனிசிவமே கருமடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணிமன்றில் காட்டும்நடத்தரசே என்பாட்டும் அனிந்தருளே...,இது என்னவாம் அய்யனே, இங்கு வள்லலாரை கலந்த பெண் யரோ?..சற்று விளக்கம் தாருங்கள் கனவான்களே..Pothigaipriyan Vallalar Indranx Avataram Jyothi Jyothi
  • Indranx Avataram Yhetha orru thathuvathaalum Arutperunjothi arul nilai ariya padaathu. Perra'kuuda mudiyaathu. Unmai. 

    Kundalini enna enna seiyum? Endru thaan paadal irukirathu. Seri anbareh, ningel Kundalini konde jeevargel paal karunai yaiyungel. 

    Naangel ungelai poondravergel natpu kondu puniyam'aavathu perugiroom.

    Oruvarin karuthu averin latchiya'they kurikum. Naam anaivarum Para logam vazkai'ku vazhi kanbom.

    Vaa endru vaan karunai indru alaikumoo, naalai alaikumoo allathu endru alaikumoo endru kaatirupom.
  • Indranx Avataram Pothigaipriyan Vallalar, you have done all very good comments and information. Useful. Nandri.
  • Pothigaipriyan Vallalar Hseija Ed Rian arutperumjothi god power only brother , pls dont tell thats kundalin power
  • Hseija Ed Rian சத் விசாரம் சத்விசாரம் என சொல்லுகிறீர்கள்...ஒருபாடலுக்கு விளக்கம்கேட்டால் சன்னாபினா என பதில் சொல்கிறீர்கள்...நான் கேட்டது ஆறாம் திருமுறையில் ஒருபாடல்...நீங்கள் குண்டலினீ என்பது சன்மார்க்கத்தில் இல்லை என்கிறீர்கள்,நான் உண்டு என்கிறேன், அதற்க்கான அத்தாட்சியாக ஒரு பாடலை மேற்கோள்கொள்கிறேன்...ஆனால் நீங்களோ அதி விடுத்து எங்கோ திசை திருப்பி பேசுகிறீர்கள்...எனக்கு இது அழகென்றுபடவில்லை....இந்த பாடலானது சன்மார்க்கத்தில் பெட்ட அனுபவமா அல்லது வள்ளலார் படுத்து உரங்கியபோது ஏதோ ஒரு மடந்தை வந்து கலந்துவிட்டு போன அனுபவமா என சொல்லுங்கள்....நாப் சொல்லுவது இது குண்டலினி அனுபவம் என்று. உங்கல் நிலை எனா?...மேற்சொன்ன பாடலானது அருள்விளக்கமாலையின் 47 ம்வது பாடலாக ஆராம் திருமுரையில் உள்ளது.Pothigaipriyan Vallalar Indranx Avataram
  • Pothigaipriyan Vallalar athula enka boss kundalini irukku ?
  • Hseija Ed Rian அருட்பெரும்ஜோதி அகவல் 1545- நலங்கொள புரிந்திடு ஞானயாகத்திடை வலஞ்சுழித்தெழுந்து வளர்ந்த மெய்கனலே என்பதும் எதுவோ?
  • Hseija Ed Rian நலம் உண்டகும் பொருட்டு சன்மார்க்கிகள் புரிந்திடும் ஞானமாக இருக்கின்ற யாகத்தினில் வலமாக இருக்கின்ற சுழியினூடே ஆர்ப்பரித்து எழும் தன்மையுடைய மெய்கனலாகிய குண்டலினீ என உபதேசம்..Pothigaipriyan VallalarIndranx Avataram Jyothi Jyothi
  • Hseija Ed Rian இந்திரனஸ் அவடாரத்தின் சீனியேர்ஸ் எங்க போனாங்க? வந்து பதில் சொல்ல சொல்லுங்க இந்த பாடலுக்கு....இல்லேண்ணா இதுவும் வள்ளலார் சமயத்துல இருந்த போது எழுதினது என்று சொல்லி பெரிய ஆளாகிடுங்க...உண்மையை உண்மை என சொல்ல கற்றுக்கொள்ளுங்கள், தெரியவில்லையா தெரியவில்லை எனவும் சொல்லுங்கள்,அதற்க்குமேலானது தீமையில் நின்று வருவதாகும் நண்பர்களே. யாரோ என்னொவோ ஒளறுவாங்க அதை யு-டியூபிலே புடிச்சு பொடறது, அதுல எந்த அளவு சன்மார்க்கம் இருக்குது என்கிறத பாக்கிறதில்லே..அப்படி பாக்கிற கண்னும் இல்லே..ஆனா ஏளனம் செய்ய நன்றாக தெரிகிறது...உண்மையை ஏற்ருக்கொல்ள தெரிவதில்லை...இந்த லட்சணத்துலே சத்விசாரம் வேறே நடக்குதாம்...எப்படி சத் விசாரம் பண்னுவது என்று சீனியேர்ஸுக்கே தெரியாது...இவங்க அவங்க வாலை புடித்து தொங்குகிறார்கள்....சும்மா ரியான் தனியா போறாரு என சொல்ல் தெரியுது...ஏன் தனியா போறாரு என சிந்திக்க தெரிவதில்லை.முடிவாக சன்மார்க்கத்தில் குண்டலி உண்டு என்பதற்க்கு வள்ளலார் கூறும் இந்த ஆதாரத்தினை ஏற்றுக்கொண்டு திருந்துவீர்களோ என்னமோ..Indranx Avataram Pothigaipriyan Vallalar Jyothi Jyothi
  • Thanga Jyothi குண்டலினி இருக்கும் இடம் எது? 

    அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.? 

    ஏன் வள்ளல் பெருமான் இதை சொன்னார்?
    நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்.
  • Thanga Jyothi உயிர் வேறு குண்டலினி வேறா?
  • Pothigaipriyan Vallalar MUYACHIYUDAN IRUPPOM UNMAIYAI KADAVUL VIRAVIL VILAKKUVAAR,THANK YOU ALL,,,,,
  • Hseija Ed Rian ஜீவசக்தி குண்டலினீ நாம என்பது சாஸ்த்திரம் Jyothi Jyothi விழிப்பு நிலையில் இல்லாத ஜீவசக்தியாகிய குண்டலினியை விழிப்படைய செய்வதுவே ஞான யாகம் என வள்ளலார் சொல்லும் யாகம்.,.அதை யோகிகள் காடுகளில் சென்று உண்டாக்கி கொள்வர், ஞானசன்மார்க்கிகல் விசார அதி உஷ்ணத்தால் வலரச்செய்து வலம் சுழியாக மேலேற்றிகொள்வர்.
  • Thanga Jyothi எதாவது பயிற்சி உண்டா? இது மேலும் முழுமையாக புரிந்து கொள்வது எப்படி?
  • Hseija Ed Rian இதுவே ‘ வித்தியா தத்துவம்’ என்பர் ஞானிகள்....வித்த்யாதத்துவத்தால் ஆன்மா விழிப்புநிலை உண்டாகிறது. குருவடி நினைவினால் வித்யா தத்துவம் என்ன என தெளியும், குருட்டுகுருவினால் அதை புரியவைக்கமுடியாது...இதையே நெற்றிக்கண் திறத்தல் என்பர். ஆன்ம விழிப்பு நிலையே அது. ”நெற்றிகண்” என்பது ”ஆன்மஸ்தான”ம், அதன்” விழிப்பு” என்பது ”திறத்தல்” என கொள்ளப்படுகிறது. ஆணவ மலத்தால் இருளாகிய ஆன்மாவுக்கு மாயை கன்மம் மாமாயை திரோதாயி என அருளூட்டப்படுகிறது, இதை வள்ளலார் ஆணவமெனும் இருட்டறையில் கிடந்த எனை என பாடுவார்.....,பெத்தான்மாவுக்கு ஆணவமெனும் இருளுடன் மற்றைய மலங்களும் சேர்ந்து அதிக இருள் அணையும்,..ஆனால் “குருவருள்” உடையோர்க்கு வித்தியா தத்துவம் ஊட்டப்படுவதனால் , சற்று வெளிச்சம் உண்டாகி ,அருள் கூடும். சுத்த மாயை வலுப்பெற்று ஆன்ம தத்துவம் விலங்க ஆரம்பிக்கும்.இதற்க்கு எல்லாம் ஆதாரம் சொல்லப்பட்ட “வித்தியா தத்துவமே”.இதை “அமானிதம்” என்பாரும் உளர்Jyothi Jyothi
  • Lalitha Arutperum Jothi Kundali paal nindrilangum vennilave antha kundali paal venduginren vennilave. Intha kundali paal yenbathu yethu? Kundalini yogathaal ithai pera mudiyumaa illai vallalar sollum kundali inge verupadugirathaa?
  • Thanga Jyothi கண்டம் என்பது எது?

    இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. அதில் முக்கிய ஸ்தானம் 2. அவை யாவை? 
    கண்டம், 
    சிரம் 
    சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷ ஜீவன்; இது இறந்துவிடும்.
    June 24 at 4:49pm · Edited · Like · 1
  • Thanga Jyothi வித்தியா தத்துவம் 7
    புருடன்
    அராகம்
    வித்தை
    கலை
    நியதி
    காலம்
    மாயை
  • Hseija Ed Rian குண்டலினியும் குண்டலியும் ஒன்றுதான்...அதையே விசேஷஜீவன் என்ரு கண்டத்தில் இருக்கும் ஜீவசக்தியான குண்டலினீ....வித்தியா தத்துவம் என்று கூறப்படும் ஏழும் “சிவப்பிரகாசம்’ முதலிய மெய்கண்ட சாத்திரங்களில் குறிக்கப்பெடும் தத்துவ கலாதிகள் 36ன் பகுதியாக கொள்லப்படினும் , இங்கு ஆன்ம விளக்கத்திற்க்கு உதவும் வித்தியா தத்துவமானது இவ்வேழையும் விளக்கும் குணபோகத்தை உடையதும் சிவான்ம ஐக்கியத்துவமுளவாக்குவதுமாம். Jyothi Jyothi Lalitha Arutperum Jothi
  • Thanga Jyothi சிரம் தலை?
    கண்டம் என்றால்?
  • Thanga Jyothi அகம் ஆன்மா
    அகப்புறம் ஜீவன், 
    புறம் கரணம்

    புறப்புறம் இந்திரியங்கள்

    தநு கர ணாதிக டாங் கடந்தறியு மோர்
    அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி 

    கர்ணத்தை எப்படி கடப்பது? 
    முதலில் புலன் இயங்க காரணம் எண்ண? அதை எப்படி வெல்வது?
  • Hseija Ed Rian pls perform personal message for more explanation...

No comments: